Friday, June 25, 2010

Salary increment

Salary increment if u need Please Download and fill this application forum  

Tuesday, June 22, 2010

அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து!

அடிக்கடி X-Ray எடுப்பது ஆபத்து!

சின்னக் குழந்தைகள் கீழே விழுந்து லேசாக அடிபட்டாலே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடும் பல தாய்மார்கள் தவறாமல் கூறுவது,"டாக்டர் தலையில் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாருங்கள்"என்பது தான்.இது தேவையற்றது.

பொதுவாக சின்னக் குழந்தைகள் அடிக்கடி கீழே விழுந்து தலையில் அடி படுவது சகஜம். அதனால் தான் இயற்கை குழந்தகளின் மண்டையோட்டை அதற்கேற்ற படி நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கிறது. விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாமல்
இயற்கை இப்படி பாதுகாக்கிறது. இருந்தாலும் பல நோயாளிகளும் பல
மருத்துவர்களும் தேவையற்ற பல எக்ஸ்ரே எடுப்பதற்கு காரணம் நோயாளியின் அறியாமையும், சில மருத்துவர்களின் பண மோகமுமே . இதில் பாதிக்கப்படுவது எப்போதும் நோயாளி
தான்.

ஆனால் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதனால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர். அமெரிக்க பொது சுகாதாரத்துறை " எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Carcinogen) " என்பதை
2005-ல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எந்த வயதில்'X' ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு
குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது
வந்தவர்களுக்கு (பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்
வாய்ப்பு அதிகம்.

இந்தியாவில் `'X' ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி (
முன்னாள் செயலர்) வேதனையுடன் கூறுகிறார். அவர் எழுதியுள்ள
புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அவை
1. IAEA (International Atomic Energy Agency) 12 வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் 'X' ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு
அதிகம் இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு 'X'
ray தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.

2. இந்தியாவில் 175 'X' ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. 'X' ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

3. மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு
பாதிப்புக்கு உட்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1994_ல் AERB
செய்த ஆய்வில் 30% 'X' ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை
பரிசோதித்ததில்) 15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு
பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே
இதற்கு முக்கியக் காரணம். மேலும், இந்தியாவில் எடுக்கப்படும் 'X' ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.

இதற்குத் தீர்வாக, அவர் 'X' ray எடுக்கும்போது
மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation
Protection) Rules 2004 தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும்,

அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும்
என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB 'X' ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும். மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா? என பார்ப்போம்.

('X' ray எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ
ஆய்வுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது ).

ஆக, தேவையற்ற 'X' ray எடுப்பதை தவிர்ப்பதே சிறந்தது. 'X' ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும்
மருத்துவர்கள் தனது மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு 'X' ray எடுக்கத் தயாரா?

கதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது. பத்து
முறை எடுத்தாலும் ஒரே ஒரு முறை எடுத்தாலும் எப்போது
பாதிக்கும் என்று சொல்ல முடியாது. விழித்துக் கொள்ளுங்கள்.

Wednesday, June 16, 2010

கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்


கூகுளின் 3D டெஸ்க்டாப் டெக்னாலஜி அறிமுகம்

கூகுளின் அதிவேக வளர்ச்சிக்கு முன் வேறுயாரும் அருகில் கூட
நிற்க்க முடியாது என்று மறுபடியும் நிரூபித்து இருக்கிறது இதன் வேகம்
மட்டுமல்ல விவேகமும் தான் இதன் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்று கூறினாலும்
அது மிகையாகாது.கூகுளின் அடுத்தக்கட்ட வளர்ச்சி தான் இந்த கூகுள்
டெஸ்க்டாப் 3D டெக்னாலஜி விண்டோஸ் மட்டுமல்ல மேக் ஆப்ரேட்டிங்
சிஸ்டத்திலும் இதுவரை இல்லாதவாறு அனைத்து டெஸ்க்டாப் அப்ளிகேசனும் 3D -யில்
காட்டி வியக்கவைக்கின்றனர் அதுமட்டுமின்றி டெஸ்க்டாப்-ல் அப்ளிக்கேசன்
ஐகானை வைத்து மிகப்பெரிய விளையாட்டை நம் கண்முன் காட்டி அசத்தியுள்ளனர்.
டெஸ்க்டாப்-ல் உள்ள ஐகானை சுவற்றில் மாற்றி தொங்கவிடுவதுபோல் தொங்க
விடலாம் அதோடு படங்களை பார்க்கவும் 3D யில் காட்டி
அசத்துகின்றனர்.
இதைப்
பற்றிய சிறப்பு அறிமுக வீடியோ


Tuesday, June 15, 2010

Asfaq M has sent you a hi5 Friend Request

hi5 invite
hi5
Asfaq M
hi5
 

Asfaq M

 
Accept Invite
 

Asfaq M added you as a friend on hi5. We need to confirm that you know Asfaq M in order for you to be friends on hi5. Click the button to confirm this request:

Copyright 2002-2010 hi5 Networks, Inc. All rights reserved.

55 Second Street, Suite 400, San Francisco, CA 94105

Privacy Policy | Unsubscribe | Terms of Service

------------------------------------------------------
Copyright 2002-2010 hi5 Networks, Inc. All rights reserved.
55 Second Street, Suite 400, San Francisco, CA 94105
Privacy Policy | Unsubscribe | Terms of Service

Tuesday, June 1, 2010

எழுத்துகளும் அவரவர் குணங்களும்

எழுத்துகளும் அவரவர் குணங்களும்

எல்லோரும் ஒரே மாதிரியாக எழுதலாம். ஆனால், அவர்களின் கையெழுத்து மாறுபட்டே இருக்கும். கையெழுத்தைக் கொண்டு அவர்கள் குணத்தைக் கண்டு விடலாம் என்கிறார்கள் கையெழுத்து பரிசோதக நிபுணர்கள்.


  • பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாகப் பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள்.

  • சிறிய எழுத்தாக எழுதுகிறவர்கள், எந்த வேலையும் திட்டவட்டமாக ஒழுங்காகச் செய்வார்கள். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள்.

  • எழுத்துக்களை வலப்பக்கமாகச் சாய்த்து எழுதுகிறவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்வதிலே இன்பம் காண்கிறவர்கள்.

  • எழுத்துக்களை இடப்பக்கம் சாய்த்து எழுதுபவர்கள் பயந்த சுபாவமுடையவர்கள். நடந்து போன விஷயங்களைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பவர்கள்.

  • எழுத்துக்களை நேராக எழுதுபவர்கள் எந்தப் பிரச்சனைக்கும் சுலபமாக முடிவு காண்பார்கள். வரும் இன்னல்களை எதிர்த்து நிற்க மன உறுதி படைத்தவர்கள்.

  • வார்த்தைகளுக்கிடையே நிறைய இடம் விட்டு, எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து எழுதுகிறவர்கள் சமூகத்தில் ஒட்டி உறவாடாமல் தனித்திருப்பார்கள்.

  • சங்கிலித் தொடர்போல் எழுதுகிறவர்கள், எதிலும் பற்றுள்ளவர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

  • பேனாவின் வீச்சோடு எழுத்துக்களைச் சுழித்து எழுதுகிறவர்கள் வீண் பெருமையும், அகங்காரமும் உடையவர்கள்.

  • எழுத்துக்களையும், வரிகளையும் நெருக்கிக் குறுக்கி எழுதுகிறவர்கள் குறுகிய மனப்பான்மையும், எதிலும் பதைபதைப்பும் கொண்டவர்கள்.

  • எழுதும் போது அடிக்கடி அடித்தும், திருத்தியும் எழுதுகிறவர்கள், குழப்பமான மனப்போக்குடையவர்கள்.
  • எழுத்துக்களை நீட்டி நீட்டி வேகமாக எழுதுகிறவர்கள் எந்தக் காரியத்திலும் அசாதாரணத் துணிச்சலைக் காட்டுவார்கள்.

  • எழுத்துக்களை குறுக்கி மெதுவாக எழுதுகிறவர்கள், பிறர் விரும்பாத மனோபாவத்தையும், கடுஞ்சிரத்தையும் கொண்டவர்கள்.

  • எழுத்துக்களின் சுழிகளைத் தெளிவாக எழுதாதவர்கள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.

  • எழுத்துக்களின் சுழிகளை அளவுக்கு மீறி அதிகமாகச் சுழிப்பவர்கள் விடாமுயற்சியும் சுறுசுறுப்பும் உடையவர்கள்.

ஆமாம், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள்? உங்கள் குணம் மேற்காணும் தகவல்களோடு ஒத்துப் போகிறதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்

******************************************************************************************************************************************************************
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே