Monday, October 31, 2011

நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?

நீ...ண்டநேரம் Bluetooth Headset/Cordless Phone உபயோகிக்கிறீர்களா சகோ..?

"உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ."என்ற என் சென்ற பதிவில், செல்ஃபோனை காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் (1/4, 1/2, 1 மணிநேரம் என்று) மணிக்கணக்கில் அடிக்கடி செல்ஃபோனில் பேசுவோருக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரலாம் என்று பார்த்தோம். அதில் இருந்து என்னென்ன வழிகளில் அவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் பார்த்தோம். அதில், Speaker-phone, Ear-phone, Landline-phone ஆகியன உபயோகித்தல் நலன் பயக்கும்  என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

விஷயம் என்னவென்றால், Bluetooth Earphone உபயோகிக்கலாமா..? Cordless Landline Phone உபயோகப் படுத்தலாமா என்று கேள்விகள் பிறந்துள்ளன. இரண்டுமே  Bluetooth wireless technolgy வகையை சேர்ந்த மிகவும் அரிய மகத்தான சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். இவற்றையும் செல்ஃபோன் போல காதோடு ஒட்டிவைத்தவாறு நீ.....ண்டநேரம் மணிக்கணக்கில் அடிக்கடி பேசுவதற்காக உபயோகிக்கும்போது அதே ஆபத்துக்கள் வரலாம் என்கின்றனர் சிலர், வராது என்கின்றனர் பலர்..! எது சரி..? ஏனெனில், இவை தருவதும் அதே microwave radiation தான் என்கின்றனர் சிலர்..! இல்லை... இல்லை... பாதிப்பு இல்லாத Radio Waves-களைக்கொண்டு ப்ளூடூத் இயர்/ஹெட்ஃபோன்கள்  செயல்படுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்கின்றனர் பலர்..! எது சரி..? தற்போது ப்ளுடூத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலைகள் எவை..? இதுதான் இப்போது எல்லா குழப்பத்துக்கும் முக்கிய பிரச்சினை. 

ஆகவே, Microwave என்றால் எவை..?
Radio wave என்றால் எவை..?
இதற்கு விடை தெரிந்தால் அனைத்தும் புரிந்துவிடும் அல்லவா..?

Microwave :  இவை 300 MHz (0.3GHz) முதல் 300 GHz வரை frequency கொண்ட சக்திமிக்க மின்காந்த அலைகள். 

Radio Wave :   இவை 3 KHz  (0.003 MHz) முதல்  300 GHz  வரை (Microwave அலைக்கற்றைகளையும் உள்ளடக்கிய...) frequency கொண்ட சக்தி குன்றிய மற்றும் சக்தி மிக்க மின்காந்த அலைகள்.  அதாவது, Radio wave-ன் மற்றொரு கடைக்கோடியில் இருப்பவைதான் சக்திமிக்க Microwave..!


ஆக, நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயம், நமது Bluetooth  Headset (Speaker+Mic) / Blutooth Earphone (only speakers for mp3) அல்லது Cordless land line Phone முதலியன எந்த frequency-ல் செயல்படுகிறன என்பதைத்தான்..! அது சக்தி குன்றிய ரேடியோ frequency-ல் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.  பிரச்சனைக்குறிய Microwave Frequency-ல் இருந்துவிடக்கூடாது..! சரிதானே..?

 
2G Cell phones இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 1.8 GHz (1800 MHz)...!  
3G, 4G Cell phones இயங்கும் frequency : 1.8 GHz (1800 MHz)  to 2.4 GHz (2400 MHz)...! 
WLAN, WiFi, WiMax இயங்கும் frequency : 2.1 GHz (2100 MHz) to 2.4 GHz (2400 MHz)...!  

Bluetooth Headset இயங்கும் frequency : 900 MHz (0.9 GHz)  to 2.4 GHz (2400 MHz)..!
  
ஆக, ப்ளூடூத் கருவிகள் பயன்படுத்தும் ரேடியோ அலைகள்... மைக்ரோவேவ் frequency-ல் விழுகின்றன.  இருந்தாலும், செல்ஃபோன் அளவுக்கு இது பாதிக்காது என்கின்றனர் வல்லுனர்கள். காரணம்... இங்கே Bluetooth Receiver-க்கும் Bluetooth Transmitter-க்கும் உள்ள தூரம், செல்ஃபோன் டவருக்கும் (Base Station) செல்ஃபோனின் சிக்னல் Receiver-க்கும் உள்ள தூரம் போன்றது அல்ல என்பதால் அதில் அந்த அளவுக்கு சக்தி இருக்காது என்கின்றனர்.

ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) வெளியிட்டது போல, ப்ளூடூத் கருவிகளுக்கு அதன் உற்பத்தியாளர்களோ அரசுகளோ இதற்கான SAR அளவை ஏனோ சொல்ல வில்லை..! இது ஏன் என்று "கவனிக்கப்படவேண்டிய" ஒரு விஷயம்..!
  
ப்ளூடூத்  கருவிகளிலேயே மூன்று வகை சக்தி கொண்டவை உள்ளன. சில தளங்களில் இயங்கும் பெரிய அலுவலக கட்டிடங்களில் பல கணிணி மற்றும் பிரிண்டர்களை இணைக்க,  நீண்டதூர செயல்பாட்டிற்கு அதிக சக்தி கொண்ட class 1 ப்ளூடூத் கருவிகளும், சாதரணமாக நமது செல்ஃபோன் ஹெட் செட்டுக்களில் class 2 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப் படுகின்றன.  கணிணி திரையிலிருந்து ஒரு மீட்டருக்குள் உபயோகிக்கப்படும், ப்ளூடூத் மவுஸ், ப்ளூடூத் கீ போர்ட் போன்றவைக்கு class 3 வகை  ப்ளூடூத் கருவிகளும் உபயோகிக்கப்படுகின்றன.   


இதில், நமது ப்ளூடூத் ஹெட் செட்டுகள், ஒருவேளை class 1 வகையினை சார்ந்ததாகவே வைத்துக்கொண்டாலும், அது செல்ஃபோன் (250mW-2W) தரும் பாதிப்புக்களில் சராசரியாக பத்தில் ஒரு மடங்குதான் தருகிறதாம். எனில், நாம் செல்ஃபோனுக்காக உபயோகிக்கும் class 2 வகை  ப்ளூடூத் கருவிகள், class 1 வகையைவிட மேலே உள்ள அட்டவணைப்படி 40 மடங்கு தீங்கு குறைவு.எனில், செல்ஃபோன் தரும் தீங்கைவிட class 2 வகை ப்ளூடூத் கருவிகளின் தீங்கு...  நானூறு மடங்கு குறைவு..! அப்பாடா..! இனி இதை உபயோகிப்பவர்கள் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். செல்ஃபோனை காதில் வைத்து பேசுவோரை பொறுத்தமட்டில் இது எவ்வளவோ தேவலாம்தானே..?

அதேநேரம், Cordless Phone-ஐ நீண்ட நேரம் பயன்படுத்தவேண்டாம். அவசரத்துக்கு வந்த அழைப்பை  உட்கார்ந்திருந்தவாறே உடனே ஏற்றுக்கொண்டு சுருக்கமாய் பேசிவிட்டு வைக்கலாம். தொடர்ந்து நீண்டநேரம் பேசவேண்டுமானால், அலுப்பு பார்க்கமால கொஞ்சம் எழுந்து சிறிது தூரம் வீட்டில் நடந்து சென்று landline-க்கு மாறிவிடுவதே உடலுக்கும் மூளை நலனுக்கும் ஆரோக்கியம் என்று அறியமுடிகிறது.

'இந்த ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது' என்றால்... அருகருகே உள்ள... மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர்கள், டிஜிடல் ஆடியோ பிளேயர், டிஜிடல் வீடியோ பிளேயர்... இப்படி சில மின்னணு சாதனங்களுக்கு இடையே வயர்கள், கேபிள்கள் என்று எந்தவித இணைப்பும் இல்லாமல் செய்திகள், புகைப்படங்கள், பாடல்கள், ஒலி/ஒளிக்காட்சிகள், கோப்புகள் போன்ற எந்த தகவல்களையும் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வயர்லெஸ் டெக்னாலஜிதான் நம்முடைய நவீனயுகத்தின் மற்றுமொரு மகத்தான கண்டுபிடிப்பான இந்த ப்ளுடூத் டெக்னாலஜி..! நமக்கு வேலைகளை மிகவும் எளிதாக்குகின்றன.


ப்ளுடூத் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வது என்பது மிக எளிதான காரியம் என்பதாலும், வயர் தொல்லை இல்லை என்பதாலும் இது செல்ஃபோனின் இயர்ஃபோனிலும், லேண்ட்லைன் ஃபோனில் கார்ட்(வயர்)லஸ் ஃபோனாகவும் சுலபமாக உருமாறி விட்டது. லேட்டஸ்டாக Car steering kit மூலம் காரை ஒட்டிக்கொண்டே... அதேநேரம்  பேசிக்கொண்டும் செல்லாம்..!

Bluetooth Earpiece மூலம் mp3 ஆடியோ மட்டும் கேட்பவர்களுக்கு ஒரு விஷயம் : --
இது ஒரு ப்ளூடூத் ரிசீவர் மட்டும்தான். காரணம், இதில் Mic இல்லாததால்... இதில் Bluetooth Headset அளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், பாதி(!)பாதிப்பு உண்டு எனலாம். Bluetooth Headset-ல் Mic-ம் இருப்பதால், ப்ளூடூத் ரிசீவர் & ப்ளூடூத் டிரான்ஸ்மிட்டராகவும் இது செயல்படுவதை கவனிக்கவும். டபுள் ஆக்டிவ்..!

பதிவின் இறுதியாக... நம் தலைக்கு ஏற்படும் இந்த செல்ஃபோன் கதிர்வீச்சு பாதிப்பை கிட்டத்தட்ட 100% குறைக்க தற்போது நவீன கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. சாதாரன Earphone மூலம் கூட சிறிதளவு வெப்பபாதிப்பு  உலோக(wire) கம்பிகளின் conduction heat மூலம் காதுக்கு சென்று பின் வெப்பக்கதிர்வீச்சு பாதிப்பும் இருப்பதால், அதையும் இயன்றவரை முற்றிலும் இல்லாமல் ஆக்குவதற்காக, "Air-tube Headset" அல்லது "Bluetube Headset" என்று அழைக்கப்படுகின்ற (கீழே காட்டப்பட்டுள்ள) இந்த சாதனத்தை இனி வரக்கூடிய அனைத்து செல்ஃபோன் பெட்டிகளிலும் பார்க்கலாம். அந்தஅளவுக்கு இதற்கு இப்போது வரவேற்பு இருக்கிறது.

http://products.mercola.com/blue-tube-headset/
http://www.wisegeek.com/do-bluetooth-headsets-cause-cancer.htm
http://www.emfnews.org/are_bluetooths_headsets_safe.html
http://ezinearticles.com/?Will-Bluetooth-Headphones-Cause-Health-Problems?&id=4550489 
http://www.emfblues.com/Bluetooth-EMF-Safety-Health-Effects-Dangers-Bluetooth-Headsets-Dangerous-Radiation.html

Saturday, October 29, 2011

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II

சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

வியப்பான தகவல்களுக்கு உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள். 

சில நாட்களுக்கு முன்பு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பிரிவை (Stanford University School of Medicine) சார்ந்த ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை தெளிவாக ஆராய உபயோகப்படும் ஒரு யுக்தியை பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்துள்ளனர். இந்த யுக்தியின் மூலம் தெரியவரும் தகவல்கள் படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. 

பதிவிற்குள் செல்லும் முன் மூளை சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியமென்று கருதுகின்றேன். 

ஒரு ஆரோக்கியமான மனித மூளையில் சுமார் 200 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி)நரம்பணுக்கள் (Nerve Cells or Neurons) உள்ளன. நம் உடலில் உள்ள மற்ற உயிரணுக்களை (cell) போன்றவை தான் நரம்பணுக்கள் என்றாலும், இவைகளை உயிரணுக்களிலிருந்து வேறுபடுத்தி காட்டுவது இவைகளின் மின்வேதியியல் (Electrochemical aspect) தன்மை தான்.   





ஒரு இயந்திரத்தில் உள்ள ஒயர்களை (wire) போல நரம்பணுக்களும் மின் சைகைகளை (Electrical signal) சுமந்து செல்கின்றன. (இதனை செய்வது நரம்பணுக்களில் உள்ள AXON என்ற கேபிள் போன்ற பகுதி) 

எப்படி ஒரு ஒயர் மற்றொரு ஓயருக்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றதோ அதுபோலவே ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை பாஸ் செய்கின்றது.

ஆனால், ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவிற்கு மின் சைகைகளை நேரடியாக அனுப்புவதில்லை. அவற்றை சினாப்ஸ் (Synapse) எனப்படும் சின்னஞ்சிறு இடைமுகம் (Interface) மூலம் அனுப்புகின்றன. ஆக, இரண்டு நரம்பணுக்களுக்கு மத்தியில் சினாப்ஸ் மூலமாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. 



சரி இப்போது பதிவிற்கு வருவோம். 

ஸ்டான்போர்ட் மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள், மூளையில் உள்ள இணைப்புகளை ஆய்வு செய்ய"Array Tomography" என்னும் "மீள் ஒலி வழி இயல் நிலை வரைவி" யுக்தியை (Imaging Technique) உருவாக்கியிருக்கின்றார்கள்.

முன்பு எப்போதும் இல்லாத அளவு, இந்த யுக்தியின் மூலம் மூளையின் இணைப்புகளை தெளிவாக ஆராய முடிவதாக குறிப்பிட்டுள்ளனர் இப்பள்ளியின் ஆய்வாளர்கள். இந்த யுக்தியை சோதிக்க சுண்டெலியின் "Bio-Engineering" செய்யப்பட்ட மூளை திசுக்களை (A slab of tissue — from a mouse's cerebral cortex — was carefully sliced into sections only 70 nanometers thick.) உபயோகப்படுத்தியிருக்கின்றனர். . 



இந்த யுக்தியை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்மித் அவர்களது கருத்துப்படி, சுமார் இருநூறு பில்லியன் நரம்பணுக்களை கொண்ட மனித மூளையில், இந்த நரம்பணுக்களை இணைக்க ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 100,000 கோடி) கணக்கில் சினாப்சஸ்கள் செயல்படுகின்றனவாம். ஒரு நரம்பணு மற்ற நரம்பணுக்களை தொடர்பு கொள்ள ஆயிரக்கணக்கான சினாப்சஸ்களை உபயோகப்படுத்துகின்றதாம். 

மிக நுண்ணிய அளவுள்ள சினாப்சஸ்கள் (less than a thousandth of a millimeter in diameter) ஒரு நரம்பணுவிலிருந்து வரக்கூடிய மின் சைகைகளை மற்றொன்றிற்கு கடத்துகின்றன. மொத்தம் பனிரெண்டு வகை சினாப்சஸ்கள் உள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.  



மனித மூளையின் "Cerebral Cortex" (sheet of neural tissue that is outermost to the cerebrum of the mammalian brain) திசுவில் மட்டும் 125 ட்ரில்லியனுக்கும் மேலான சினாப்சஸ்கள் உள்ளன. இது, 1500 பால்வீதிக்களில் (Milkyway Galaxy) இருக்கக்கூடிய மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு (தோராயமாக) ஒப்பானது. 

ஒவ்வொரு சினாப்ஸ்சும் ஒரு நுண்செயலியை (Microprocessor) போல செயல்படுகின்றது, தகவல்களை சேமிப்பதிலிருந்து அவற்றை செயல்படுத்துவது வரை. (ஆக, நம் ஒவ்வொருவருடைய மூளையிலும் ட்ரில்லியன் கணக்கான நுண்செயலிகள் உள்ளன!!!!!!!!!) 

ஒரு சினாப்ஸ்சில், சுமார் ஆயிரம் "Molecular-Scale" நிலைமாற்றிகள் (Switches) இருப்பதாக கணக்கிடலாம். 

ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

A single human brain has more switches than all the computers and routers and Internet connections on Earth --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.          

என்ன? கேட்பதற்கு வியப்பாக உள்ளதா? அதனால் தான் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள், மூளையின் இத்தகைய சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறும் போது "கிட்டத்தட்ட நம்பவே முடியாத அளவு" இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Observed in this manner, the brain's overall complexity is almost beyond belief --- Stephen Smith, professor of molecular and cellular physiology, Co-inventer of Array Tomography technique.

ஆம், இந்த தகவல்கள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.

இந்த தகவல்களே உங்களை திணறடிக்க செய்திருந்தால், ஒரு நரம்பணு எப்படி மின் தகவல்களை அடுத்த நரம்பணுவிற்கு சினாப்சஸ்கள் வழியாக செலுத்துகின்றது என்பது போன்ற தகவல்கள் எல்லாம் உங்களை "இப்படியெல்லாம் மூளைக்குள் நடக்கின்றதா?" என்று மிரட்சி கொள்ளவே செய்யும்.

இந்த புதிய யுக்தி, மூளை சம்பந்தமான நோய்களை/பிரச்சனைகளை பற்றி தெளிவாக அறிய உதவும் என்று ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய யுக்தி குறித்த இந்த ஆய்வறிக்கையை 18ஆம் தேதியிட்ட இம்மாத நுயூரான் (Neuron) ஆய்விதழில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இனி, இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கருத்தில் உள்ள சில சகோதரர்களுக்கு சில கேள்விகள்...

1. ஒரு மிகச் சாதாரண, சுமார் இரண்டாயிரம் டிரான்சிஸ்டர்களை கொண்ட, ஒரு ஆரம்ப நிலை நுண்செயலி கூட தற்செயலாக உருவாகி இருக்கும் என்று யாராவது கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

2. ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால், பிறகு எப்படி, நம்பவே முடியாத அளவு சிக்கலான வடிவமைப்பை கொண்ட மூளை போன்ற ஒரு உடல் பகுதி தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்புகின்றீர்கள்?

3. ட்ரில்லியன் கணக்கான சினாப்சஸ்கள், பில்லியன் கணக்கான நரம்பணுக்கள் மற்றும் அவற்றை சார்ந்தவைகள் மிக கனகட்சிதமாக செயல்பட்டு நம்மை மற்றும் மற்ற உயிரினங்களை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. இப்படியொரு சிஸ்டம் தற்செயலாக உருவாக வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்தால் அது எத்தனை சதவீதம்?

4. மற்ற உயிரினங்களின் மூளையை விட தனித்தன்மை வாய்ந்தது மனித மூளை. பேச, யோசிக்க, திட்டமிட என்று மற்ற உயிரினங்களை விட மேம்பட்டது நம் மூளை. தகவல்களை கணக்கிட்டு அற்புதமாக செயலாக்கம் செய்யும் நம் மூளை தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதை மூட நம்பிக்கையாக எடுத்து கொள்ளலாமா?

5. பரிணாமத்தில் இதற்கு என்ன விளக்கம் இருக்கின்றது? மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கும் என்று தங்கள் கற்பனையில் தோன்றியதையெல்லாம் விளக்கமாக கூறாமல், மூளை போன்ற மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட உடல் பாகங்கள் எப்படி தற்செயலாக வந்திருக்குமென்று விளக்குமுறைகளுடன் நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் ஏதாவது இருக்கின்றதா?

6. மேலே கேட்ட கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டுமென்றால், சில உயிரணுக்களாவது தற்செயலாக உருவாகி, ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வதாக ஆய்வுக்கூடத்திலாவது நிரூபித்து காட்டியிருக்கின்றார்களா?

எல்லாம் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நம்பும் அந்த சில சகோதரர்கள் இந்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லட்டும். அவர்கள் சொல்லும் பதிலை பொறுத்து மற்ற கேள்விகளை பின்னூட்டங்களில் முன்வைக்கின்றேன்.

பரிணாமத்திற்கு எதிராக செயல்படும் "Uncommon Descent" இணைய தளத்தின், இது பற்றிய பதிவின் பின்னூட்ட பகுதியில் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து என்னை கவனிக்க வைத்தது,

What is perhaps more amazing than the human brain itself is the fact that it has grown from just a fertilized egg. Pretty astonishing. 
மனித மூளையை விட ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,  ஒரு முட்டையிலிருந்து அது வளர்ந்திருக்கின்றது என்பதுதான். அதிக திகைப்பை உண்டாக்கும் உண்மை இது. 

சிந்திக்க வைக்கும் கருத்து....

பரிணாம சவப்பெட்டியில் மற்றொரு ஆணி அழுத்தமாக இறங்கி இருக்கின்றது......

நம் அனைவரையும் மூடநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைவன் காப்பானாக...ஆமின்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...


Pictures taken from:
1 & 2: How stuff works.
3. mult-sclerosis.org.
4. ihcworld.com.
5. Science daily website.
6. Neuron Magazine.

One can download the Array Tomography report from:
1. Single-Synapse Analysis of a Diverse Synapse Population: Proteomic Imaging Methods and Markers --- Neuron, dated 18th Nov 2010. link

References:
1. New imaging method developed at Stanford reveals stunning details of brain connections --- Bruce Goldman, dated 17th Nov 2010, Stanford medical school website. link
2. How your brain works --- Craig Freudenrich, howstuffworks. link
3. Human brain has more switches than all computers on Earth --- Elizabeth Armstrong Moore, dated 17th Nov 2010, CNET News. link.
4. More Switches than a computer --- Uncommon Descent, Cornelius Hunter, dated 17th Nov 2010. link.
5. Ethics and the Evolution of the Synapse --- darwins-god blog, Cornelius Hunter, dated 21st Nov, 2010. link 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.

உங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Cell Phone அல்லது Mobile Phone எனப்படும் 'கைபேசி' உபயோகிப்பவர்கள் எந்த அளவுக்கு அதன்Electromagnetic Radiation மூலம் உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அதிலிருந்து தப்பிக்கும் வழி முறைகளையும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு பதிவு இது.


ஒரு Caller தன் செல்ஃபோனில் ஒரு Receiver-ஐ அழைக்கும்போது அவரின் செல்ஃபோனிலிருந்து வெளியாகும் மின்காந்தப்புலன் (Electro Magnetic Field)  அருகிலிருக்கும் மொபைல் (Base Station - 1) டவருக்கு செல்கிறது. அங்கிருந்து சிக்னல், Switching Center-க்கு செல்கிறது. இங்கே அழைப்பாளர் மற்றும் அழைக்கப்படுபவரின் விபரங்கள் சேமிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து சிக்னல் அழைக்கப்படுபவரின் அருகே இருக்கும் செல்ஃபோன் (Base Station  - 2) டவருக்கு செல்கிறது. இதிலிருந்து புறப்படும் மின்காந்தப்புலன் Receiver-ன் செல்ஃபோனில் உள்ள ஆன்டென்னா மூலம் உட்கிரகிக்கப்படும் போது செல்ஃபோனில் ரிங் டோன் கத்துகிறது. அழைக்கப்படுபவர் வந்த அழைப்பை 'ஓகே' செய்யும்போது இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது.

The impact of cell phone radiation on humans..!   &  How to overcome it carefully..!

பிரச்சினை இப்போதுதான் ஆரம்பிக்கிறது. இவ்வாறு பேசும்போது செல் ஃபோனின் ஆன்டென்னா விலிருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கும் மின்காந்த அலைகள் எல்லா பக்கமும் தெறிக்கின்றன. அதில் கிட்டத்தட்ட பாதி ஆளவுஅலைக் கதிர்கள் பேசுபர்களின் தலைக்கு உள்ளும் ஊடுறுவுகின்றன..! இந்த செல்ஃபோனின் மின்காந்த அலைக்கதிர்வீச்சின் அளவு, ஒரு மைக்ரோ வேவ் ஓவனின் அலைக்கதிர்வீச்சுக்கு ஏறக்குறைய இணையானது..! ஆக, விஷயம் அவ்வளவு விபரீதமானது..!


ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு Specific Absorption Rate (SAR) உண்டு. இது 1.6 W/KG (watts per kilogram) எனும் அளவுக்கு குறைவாக இருந்தாக வேண்டும். இது International Standard அளவு. உங்கள் மொபைலில் இது  எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது உங்கள் உடலுக்கு நல்லது. 




நம் செல்ஃபோனுக்கான இந்த SAR-ஐ பின்வரும் மூன்று வழிகளில் அறியலாம். 
  1. உங்கள்  செல்ஃபோனின் கையேடு ( user's manual) மூலம்.
  2. செல்ஃபோன் தயாரிப்பாளர்களின் இந்த தளம் மூலமாக.
  3. செல்ஃபோனின் FCC ID Number-ஐ என்டர் செய்து  இந்த தளம் மூலமாக.


நீண்ட நேரம் செல்ஃபோனை ' அணைத்த கையும் காதுமாய் ' கதை அடிக்கும் மனிதர்களின் தலைக்குள் ஊடுறுவும் இந்த மின்காந்த அலைக்கதிர்வீச்சு தலைக்குள் சூட்டை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. உதாரணமாய் 15 நிமிடம் அவ்வாறு பேசிய ஒரு 'மொபைல் பேச்சாளரின்' முந்தைய பிந்தைய நிலையை பின்வரும் படம் காட்டுகிறது. 


நீண்ட நேரம் காதோடு மொபைல் வைத்து பேசுவோருக்கு... மயக்கம், தலைவலி, தூக்கமின்மை, ஞாபகமறதி, காது இறைச்சல், மூட்டுவலி இப்படி உடனடியாக சில தங்கடங்கள் வருமாம்.


தொடர்ந்து இதேபோல 'அணைத்த கையும் காதுமாய் ' செல்ஃபோன் மூலம் நீண்டநேரம் பேசினால்..? பெரியவர்கள் மண்டைஓடு கனமானது. குழந்தைகளின் மண்டைஓடு மெல்லியது. இதனால், பெரியவர்களை விட குழந்தைகள் இக்கதிர்வீச்சினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 5-வயது குழந்தைக்கு 75% பாதிப்பும் 10-வயது குழந்தைக்கு 50%-ம், பெரியவர்களுக்கு 25% பாதிப்பும் ஏற்படுகிறதாம். 



ஆக, இதே போல தினம் தினம் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரங்கள் என சூடாகும் மூளை செல்களில் உள்ள புரோட்டீன் சிதைய, கடைசியில் Brain Tumor-ல் அல்லது சில சமயம் Brain Cancer-ல்கொண்டு போய் விடுகிறதாம்..!

இப்படி ஒரு சாரார் மிக தீர்க்கமாக ஆதாரங்களுடன் பரிசோதித்து சொல்ல, 'அந்த அளவுக்கெல்லாம்... அப்படியெல்லாம்... ஒன்றும் ஆகாது' என்று இன்னொரு சாரார்... (செல்ஃபோன் நிறுவனங்கள் சார்பாக...?) சில மருத்துவர்கள் வாதாடினாலும், விலை கொடுத்து வாங்கும் இந்த வேண்டாத பெரிய ஆபத்து எதற்குமா நமக்கு..? சில வருடங்கள் கழித்து "ஆமாமாம்... அந்த சாரார் சொன்னதே சரி"-ன்னு அப்போது பல நோயாளிகளின் புகாரை கண்டு ஜகா வாங்கினால் அப்புறம் இவர்களை நம்பினோர் கதி..? அதோ கதி அல்லவா..!

'மொபைல்  அடிமைகள்' ஆகிவிட்ட நம்மால், இதை எல்லாம் கண்டு பயந்து மிகவும் அரிய அவசிய கண்டுபிடிப்பான... இந்த செல்ஃபோனை "இனி வேண்டாம்" என தூக்கி எறிந்து விட முடியுமா..? முடியவே முடியாது அல்லவா..?

எனில், இறைநாடினால், சில மாற்று வழிகளை கைக்கொண்டு மேற்படி பயங்கர விபரீதத்திலிருந்து தப்பிப்போம்..! அதுவே புத்திசாலித்தனம்..!

இதற்கு சரியான வழி, நீங்கள் செல்ஃபோன் வாங்கும்போது 'ear phone' என்று ஒரு அம்சம் பெட்டியுடன் சேர்த்து கொடுத்திருப்பார்களே..!? ம்ம்ம்... அதுதான்..! அதை தேடி எடுங்கள்..! ஒரு சில நிமிடங்களுக்கு மேலே பேசுவதாயின் கண்டிப்பாய் அதை இனி காதில் மாட்டிக் கொள்ளுங்கள்..! என்னது...? அதை காணவில்லையா...? சரி...வேறொன்று டூப்பிளிகேட்டாவது வாங்குங்கள் சகோ..!   ஆரோக்கியம் முக்கியம் அல்லவா..?
 அதுவரை என்ன செய்யலாம்...? அவசரத்துக்கு, இனி பேசும் போது செல்ஃபோனை காதுக்கும் வாய்க்கும் கிடைமட்டமாக பிடித்து, அதன்மூலம் ஆன்டேன்னா விலிருந்து வெளியேறும் அலைக்கதிர்வீச்சு கூடுமானவரை தலைக்குள்ளே  செல்லாதவாறு சற்று தள்ளி பிடித்துபேசுங்கள்.

அப்புறம் 'Speaker Phone' என்று ஒரு அம்சம் உள்ளதே..! அப்படி என்ன ராணுவ ரகசியம் பேசிவிடப்போகிறோம்..? அணைத்த கையும் காதுமாய் செல்ஃபோனில் பேசாமால் 'Speaker Phone' உபயோகித்தும் பேசலாமே..! 

'டவர் சிக்னல் வீக்' என்று மொபைல் காட்டினால், அந்த இடங்களில் பேசுவதை தவிருங்கள். ஏனெனில், கஷ்டப்பட்டு சிக்னலை பிடிக்க அலைக்கதிர்வீச்சு அப்போது உச்சத்தில் இருக்கும். பாதிப்பும் நிறைய. உடனே... சிக்னல் முழுக்க கிடைக்கும் இடமாய் தேடிச்சென்று பேசுங்கள். கதிர்வீச்சு அளவை குறைத்துக்கொள்ளலாம்.

'பொதுவாக யாருடனேனும் நீண்ட நேரம் கடலை போட்டேயாக வேண்டும்' என்றால், இருக்கவே இருக்கே land-line phone..! அதை உபயோகியுங்கள்..! எந்த பயமும் இல்லை... முக்கியமாக பேட்டரி சார்ஜ் தீர்ந்து பல மணிநேரம் பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலையே இல்லையே...! ஹி..ஹி...  :))

இனி... மொபைல்  சோதனைகளை எல்லாம் கடந்து அதன் மூலம் சாதனைகள் பல செய்வோம்... சகோ..!


---------------------------------------------------------------------------------------------------------------------


Sunday, October 23, 2011

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.


தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.
பாத்திமா ஷஹானா (கொழும்பு)
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

Saturday, October 22, 2011

Sample Interview Questions

உங்கள் அனைவருக்கும் நல்லதொரு வேலை கிடைக்க வாழ்த்துக்கள் 



General Questions about Yourself

  • Tell me/us about yourself.

  • How would you describe yourself?

  • What do you expect for in a job?

  • What motivates you?

 

General Questions about  Your Family Background

  • What is your father doing?

  • What is your mother doing?

  • Do you have brothers or sisters & what do they do?

 

General Questions about  Your Ambitions

  • What is your ambition?
  • Where do you see yourself in five years time?
  • How does this job fit into your career plans?
  • Where did you think you'd be at this stage in your life?
  • What do you consider to be your greatest achievement?

 

General Questions about Your Current/Previous Employment

  • What are your current duties / responsibilities?

  • Where did you work prior to the current employment?

  • Why do you want to leave your current job/Company?

  • What do you think of your current boss?

  • What will you miss about your present job?

 

General Questions about  The Company/Job

  • What do you know about our Company?
  • What do your think our Company can offer you?
  • If you are selected, what do you think you'll be doing day-to-day?

 

General Questions about Your Suitability

  • What are your strengths/weaknesses?

  • Why did you think you are suited to this job?

  • Can you give me an example of a situation where you showed initiative?

  • How well do you work under pressure?

  • What sort of people do you find it difficult to work with?

  • What key skills do you think you'll need to be successful in this job?

  • Why should we give the job to you above other applicants?

 

General Questions about Team Work

  • Do you work best by yourself or as part of a team?
  • What kind of personality do you work best with and why?
  • How would you go about establishing your credibility quickly within the team?
  • Tell me about a time when you had to deal with conflict on the job.
  • What irritates you about other people and how do you deal with it?

 

General Questions about Supervisory Capacity (For Management/Supervisory Jobs)

  • How would you get the best from people?
  • How would you approach a typical project?
  • Give me an example of how you have resolved conflict.
  • What did you look for when you hired people in the past?

 

General Questions about Salary

  • What is your current salary?
  • What are your salary expectations?