Tuesday, April 30, 2013

தமிழ் வானொலிகளை கணனி Music Players மூலம் கேட்க - Listen Tamil Radio Stations in you PC with Music players

தமிழ் வானொலிகளை கணனி Music Players மூலம் கேட்க - Listen Tamil Radio Stations in you PC with Music players

வானொலி கேட்பது சிலரின் - பலரின் பழக்கம். இப்போது சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் இவற்றை குறைத்துள்ளன. இப்போதெல்லாம் பிரயாணங்களின் போது தான் இவற்றை கேட்க  நேரம் இருக்கிறது. பொதுவாக இப்போது வானொலி பெட்டிகளின் வரவு குறைந்து விட்டது. கையடக்க தொலைபேசிகள் இவற்றின் வேலையை செய்கின்றன. என்றாலும், பல இடங்களில் FM signal கிடைப்பதில்லை. இதனால் பலரும் online streaming வானொலி சேவைகளை நாடுகின்றனர். இதற்காகவே பல இணைய பக்கங்கள் உண்டு.

இவற்றின் பெரும்பாலான குறைபாடு இவற்றின் stream link இயங்காமை ஆகும். இதனால் பல website களில் தேடி அலைய வேண்டி இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு web site ஆக செல்வதால் நேர , bandwidth விரயமாகும். ஆனால் பலருக்கும்   தமது music player ஊடாக பெரும்பாலான வானொலி சேவைகளை கேட்க  முடியும் என்று தெரிவதில்லை. இப்பதிவு, எவ்வாறு மிக இலகுவாக கணனியில் (+ mobile) உள்ள music players ஊடக  வானொலி சேவைகளை கேட்பது என்று விளக்குகிறது.
முன்பு பனி பெய்யும் நாட்களில் இந்திய வானொலி அலைவரிசைகள் யாழ்ப்பாணம் வரை கேட்க முடியும். மெல்ல மெல்ல மாசி மாதம் ஆக ஆக இவை முற்றிலும் அற்று போய் விடும். சின்ன வயதில் ஏதோ ஒரு அலைவரிசையில் "கீத்தா மாமியின் கிசுகிசு"   என்று ஒரு நிகழ்ச்சி  கேட்டதாக ஞாபகம்.

அடிப்படை 


ஒவ்வொரு வானொலி நிலையமும் (அதற்காக திருச்சிரா பள்ளி ,காரைக்கால் எல்லாம் எதிர் பார்க்க கூடாது) Online streaming வசதியை வைத்து இருப்பார்கள். பெரும்பாலும் Flash player மூலம் அவை இயங்கும்.  இதற்காக HTML5 இப்போது பயன்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுவாக rtms protocol பயன்படுகிறது. இதை பற்றியெல்லாம் இங்கு தேவை இல்லை.
சுருங்க சொன்னால் அவர்கள் ஒரு விதமாகமுகவரி மூலம்  அனுப்பும் அலைவரிசை, Flash இல் பாடலாக மாறும். இப்போது Flash இல் இருந்து அந்த முகவரியை கண்டுபிடித்து music player இல் கேட்க இப்பதிவு வழிகாட்டுகிறது.

என்ன தேவை


  1.  இணைப்பு ( Speed more than 5 KBPS)
  2. நீங்கள் அனைவரும் நிச்சயம் பாட்டு கேட்பவர்களாக இருப்பீர்கள். அதற்கு பயன்படுத்தும் player software போதும்.சில பிரபல Players
  • VLC
  • Winamp
  • Real Player
  • Quicktime player
  • Media player
  • KM player

எப்படி கேட்பது 


ஒவ்வொரு வானொலிக்குமான Streaming URL களை எடுத்து கேட்பது உங்களுக்கு சிரமம். எனவே இங்கு  Play list ஆக உருவாகி வைத்துள்ளேன். .m3u ,  .pls, m3u8 என 3 வகைகளில் உள்ளது. அனைத்தும் நிச்சயம் உங்கள் music player இனம் காணும்.

  1. கீழே உள்ள ஏதாவது ஒன்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
  2. Double click செய்து Open செய்யுங்கள். உங்கள் Default music player இயங்க ஆரம்பிக்கும்.
  3. Next Button or  File > Bookmark ஊடக விரும்பும் வானொலி அலைவரிசைகளை கேட்க  முடியும்.
** தானாக திறக்காவிட்டால் Open with மூலம் சென்று திறவுங்கள்.

Download Links:

நன்மைகள் 


  • 6 KBPS   என்ற மெதுவான இணைய இணைப்பு வேகத்திலே கேட்க முடியும்.
  • ஒரே ஒரு click இல்அனைத்தையும்  ஒரே இடத்தில் கேட்க முடியும்.
  • உங்கள் Bandwidth பாதுகாக்கப்படும். 
  • Playlist வசதி உங்கள் Mobile இல் இருப்பினும் உங்களால் கையடக்க தொலைபேசியிலும் கேட்க முடியும்.

பிரச்சனை


சிலவேளை வானொலிப்பெட்டியில் பாடல்  முடிந்த பிறகு தான் streaming இல் கேட்கும். அதன் காரணம் மெதுவான அடிக்கடி தடைப்படும்  இணைய இணைப்பு தான்.

பகிர்க


என்னால் முடிந்ததை  தேடியும் Hello FM 106.4 , Radio City 91.1 FM  போன்ற வானொலிகளை வழங்கும் இணைய பக்கங்களை கண்டறிய முடியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் அவற்றின் இணைய பக்க இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் உள்ள streaming URL இனை பிரித்தெடுத்து மற்றவர்களுக்கு வழங்க உதவியாக இருக்கும்.
அத்துடன் உங்களுக்கு பிடித்த வானொலி இணைய பக்கங்களையும் comment இல் பகிருங்கள்....


இப்போது கிடைக்கும் வானொலிகள் :
  1. Sackthi Fm - Srilanka
  2. Radio Miche
  3. Chennai FM rainbow
  4. Aaha FM
  5. Big FM
  6. Sooriyan FM - Chennai
மேலும் பல ......

நன்றி தமிழ் சிசி 

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் குறித்து முதலமைச்சரிடம் முறைப்பாடு


கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் குறித்து முதலமைச்சரிடம் முறைப்பாடு


-எம்.என்.எம். ஹிஜாஸ்

சபைக்கும் அறிவிக்காது, தான் நாடு திரும்பும் வரையிலும் பதில் தலைவர் ஒருவரை நியமிக்காமல் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் வெளிநாடு சென்றமை தொடர்பில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் கடந்த புதன் கிழமை பதில் கடமையினை எவருக்கும் வழங்காது, சபைக்கும் தெரிவிக்காது வெளிநாடு சென்று கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பில் ஆளும் கட்சியினை சேர்ந்த 04 உறுப்பினர்கள் ஒப்பமிட்டு முதலமைச்சருக்கு எழுத்து மூலம் தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேச சபையில் ஆளும் கட்சியினை சேர்ந்த 09 உறுப்பினர்களும்; முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும், ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் 03 பேரும், சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
நன்றி dailymirror

Monday, April 29, 2013

Google அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Free Zone - Internet with no data charges


Google அறிமுகப்படுத்தும் இலவச இணையம் Free Zone - Internet with no data charges

உள்ளடக்கத்துக்கு முதல்,
  • இது இலங்கையில் வசிக்கும் Dialog (Axiata PLC) ISP பாவனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
  • Google இன் சேவைகளை மட்டுமே அணுகலாம்.
  • கையடக்க தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்தலாம்.
இதுக்கு மேலும்  தொடர்ந்து வாசிக்க வேண்டுமா  என்று முடிவெடுத்து தொடருங்கள். 
இலங்கையில் முன்னணி ISP ஆகிய Dialog மட்டுமே இதை வழங்குகிறது. இவர்கள் முன்பு Facebook க்கு என இவ்வாறனதொரு சேவையை அறிமுகப்படுத்தினர். இப்போது கூகிள் தனது தெரிவுசெய்யப்பட சேவைகளை இலவசமாக Data charge இல்லாமல் அணுக  Philippines, South Africa, Indonesia,  Sri Lanka ஆகிய நாடுகளில் அறிமுக படுத்திய சேவை தான் Free Zone


எவ்வாறு அணுகுவது?

  1. முதலில் g.co/freezone க்கு உங்கள் தொலை பேசி மூலம் செல்லுங்கள்.
  2. உங்கள் Google கணக்கு மூலம் உள் நுழையுங்கள்.
  3. இதன் பின்னர் அங்கிருந்து உங்கள் சேவைகளை அணுக முடியும் - இலவசமாக 

சில குறிப்புக்கள்:

  • நீங்கள் தேடும் போது தேடல் முடிவில் வரும் 1'ம் இணைப்பை அணுகுவது இலவசம். அணுகிய முடிவில் உள்ள இணைப்புக்கு கட்டணம்.  உதாரணமாக கணணிக்கல்லூரி என்று தேடி வரும் தேடல் முடிவில் உள்ள www.tamilcc.com க்கு வருவது வரை இலவசம். அதன் பின்னர் இங்குள்ள outlink - (www.tamilcc.com/p/help.html) களை கிளிக் செய்வது பணம்.
  • கட்டணம் அறவிடும் நடைமுறைக்கு செல்லும் போது அறிவிப்பு திரை வந்த பின்னரே அறவிடப்படும் - கொஞ்சம் தப்பிக்கலாம்.
  • Gmail, G+, Search ஆகியன இலவசம்.

இதன் தீமைகள் :

  • 2nd Step verification உள்ள Google கணக்குகள் மூலம் உள் நுழைய முடிவதில்லை.
  • Gmail, G search, G+  மட்டுமே இலவசம்.
  • கணனியில் பயன் படுத்த முடியாது. Opera Emulator மூலம் செல்ல வழி இதுவரை கண்டு பிடிக்கவில்லை. கிடைத்தால் நல்லம்.
  • நேரடியாக அணுக முடியாது- g.co/freezone இன் மூலமே உள் நுழைய வேண்டும்.
இது பற்றிய Google இன் அறிவிப்புப்பக்கம் இங்கே - google.com/intl/en_lk/
இது பற்றிய உதவிப்பக்கம் இங்கே : support.google.com

இதனால் கிடைக்க போகும் ஒரே நன்மை G+ இனை பாவித்தால் ஓரளவுக்கு கட்டுபடியாகும். அது மட்டும் தான்.

Thursday, April 25, 2013

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.


ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் எளிதாக கண்டுபிடிக்கலாம்.


வெளி உலகம் தெரியாமல் கணினி மட்டுமே உலகம் என்று எண்ணும் நமக்கு வெளி உலக தகவல்களை அள்ளி கொடுப்பதற்காக பல தளங்கள் உள்ளது அந்த வகையில் இன்று கூகிள் உதவியுடன் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு எத்தனை கி.மீ தூரம் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


வெளி ஊருக்கு செல்ல வேண்டி இருந்தால் கூகிள் மேப் உதவியுடன் இடம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களை எளிதாக கண்டுபிடிபோம் அதே வகையில் செல்லும் இடத்தின் தூரத்தை கி.மீ மற்றும் மைல் அளவில் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.distancefromto.net/

இத்தளத்திற்கு சென்று From மற்றும் To என்பதில் நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதை கொடுத்து Measure Distance என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் உடனடியாக வரும் திரையில் நமக்கு இரண்டு ஊருக்கும் எத்தனை கி.மீ என்பதை துல்லியமாகவும் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான மேப்-ஐயும் காட்டுகிறது. கூகிள் மேப்-ல் இதைவிட சிறப்பான வசதிகள் இருக்கும் போது நாம் ஏன் இந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் கூகிள் மேப் பக்கம் திறக்க எடுத்துக்கொள்ளும் கால நேரத்தை விட இது வேகமாக இருக்கும்.ஓட்டுனர்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் எத்தனை கி.மீ தூரம் என்பதை கூகிள் உதவியுடன் கண்டுபிடிக்க உதவும் இத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி:winmani.com
Engr.Sulthan

Wednesday, April 24, 2013

சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்

சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்


எழுத்து : இப்னு சாபிரா

தாய்மை ஒரு பெண்ணிற்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயம். நிழலின் அருமை வெயிலின் போது தான் தெரியும் என்பதை போல, தாய்மையடைவதின் அருமை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிக்க நன்றாக புரியும். தாய்மையடைவது எவ்வளவு மகிழ்ச்சியானதோ, அதே நேரத்தில் கர்ப்ப காலமும் குழந்தை பெற்றுக் கொள்வதும் அதற்கு நேர் எதிரானது என்பதை பெண்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கின்றனர். 

இயற்கை மார்க்கமான இஸ்லாம், தாய்மையடையும் போது ஒரு தாய் அடையும் துன்பத்தை எடுத்துக்காட்டி, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை அழகாக எடுத்து காட்டுகிறது.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலி-யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. 
(அல்குர்ஆன் 31 : 14)

கர்ப்ப காலம், பிரசவம் ஒரு பெரும் சோதனை என்றிருக்கும் போது, இன்றைய நவீன விஞ்ஞானம் பிரசவத்தை இலகுவாக்கியிருப்பதை காட்டிலும், கடினம் ஆக்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சுக பிரசவம் என்பது இன்று அரிதாகி விட்டது. 

ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV வலைத்தளத்தில் 26.04.2011 அன்று வெளியான செய்தி ஒன்று திடுக்கிடச் செய்கிறது. கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் காரணமின்றி பிரசவங்களின் போது சிசேரியன் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் போலவே, ஏப்ரல் 16, 18 மற்றும் 19 தேதிகளில், மூன்று நாட்களில் மட்டும் கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் தாலுக்காவில் 19 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. 
சிசேரியன் செய்யப்பட்டதற்கான காரணம் விநோதமானது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் பணியாற்றும் மயக்கமடைய செய்யும் மருத்துவ நிபுணர் (Anaesthetist) பத்து நாட்களுக்கு விடுமுறையில் செல்ல இருந்ததால், பிரசவங்கள் முன்கூட்டியே சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவ அதிகாரியை இது சம்பந்தமாக விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொடூரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால், ஆலப்புழா அரசு மருத்துவமனையில் 48 மணி நேரங்களில் 4 மருத்துவர்கள் 21 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். காரணம் என்ன தெரியுமா? இந்த மருத்துவர்கள் தங்களுக்கு ஈஸ்டர் (புனித வெள்ளி) விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரசவங்களை முன்கூட்டியே சிசேரியன் மூலம் செய்துள்ளனா;.

கல்வியில் முதன்மை மாநிலம் என பெயர் எடுத்திருக்கும் கேரளாவிலே இந்த நிலமை என்றால், மற்ற மாநிலங்களின் நிலமையை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

எனவே, பெண்களே! பிரசவத்தின் போது மிகவும் கவனமாக இருங்கள். சுக பிரசவம் இல்லாமல், சிசேரியன் செய்யப்பட வேண்டும் என மருத்துவர் கூறினால் அதற்கான காரணத்தை கேளுங்கள்.

• சிசேரியன் செய்வதற்கான காரணம் என்ன?

• சிசேரியன் செய்யாமல் இன்னும் சில நாட்கள் சுக பிரசவத்திற்காக காத்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள் என்ன?

• வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனிற்காக சிசேரியன் செய்யப்படுகிறது என்றால், குழந்தையின் தற்போதைய நிலை என்ன ?

• சிசேரியன் செய்யாமல், சுக பிரசவத்திற்கு எதிர்பார்த்தால் குழந்தைக்கு ஏற்படும் பாதகங்கள் என்ன?

போன்றவற்றை தெளிவாக மருத்துவர்களிடம் கேளுங்கள். காரணமின்றி சிசேரியன் செய்யப்படுவதை தவிர்க்க பெண்களும், ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

இதைப் போலவே, கர்ப்ப காலத்தின் போதே சுக பிரசவத்திற்கான வழிமுறைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் பெண்கள் தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் சிசேரியன் தவிர்க்கலாம்.
மேலும் பல மருத்துவமனைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சைக்கு முனைவதை காண்கிறோம். அதுவும் முஸ்லிம்கள் என்றால் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது. எனவே கர்ப்பமுற்றவுடன் நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை என்பது நிர்பந்ததிற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று இருந்தால் மட்டுமே அங்கு காட்டுங்கள். 
பணத்திற்கு ஆசைப்படும் இஸ்லாத்தை வெறுக்கும் பல மருத்துவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

Sunday, April 21, 2013

உங்கள் ஸ்கைப்(Skype) உங்கள் மொழியில்….




ராச்காந் ராமசந்திரன் ஸ்கைப்(skype) என்கிற அழைப்பேசி தொடர்பாடலாக வந்த மென் பொருளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
முதலில் http://www.mediafire.com/?zhj4r40t3bja8re என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ் மொழிக்கோப்பை (Tamil.lang)பதிவிறக்கவும்.
பின் அதனை C:\Program Files\Skype\Phone இனுள் கோப்பை இடவும்.
ஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file… இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும்.
இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.
ஸ்கைப் (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும்.
இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குவதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணைத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும்.
இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஓளிப்பட /காணொளி(வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். ஆங்கில ஆண்டின் படி 2010 ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைப் குழுமத்தில் தலமை அலுவலகம் இலட்க்சம்பேர்க்கில் அமைந்துள்ளது.
ஸ்கைப்பின் விருத்தியாளர்களில் பெரும்பாலானவர்களும் 44% ஆன பணியாளர்கள் எசுத்தோனியாவில் உள்ள தலிலின், தார்ட்டுப் உள்ள அலுவலகங்களிலேயே பணியாற்றுகின்றனர்.
ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் ஸ்கைப் சகா-சகா முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது.
ஸ்கைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் ஆங்கில நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஐப்பசி மாதம் 10, 2011 அன்று ஸ்கைப்நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்கைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் ஆஸ்திரேலியா, பிறேசில், சிலி, டென்மார்க் டொமினிக்கன் றிப்பப்றிக் எசுத்தோனியா பின்லாந்து பிரான்சு சேர்மனி காங்காங் கங்கேரி ஐயர்லாந்து இத்தாலி சப்பான் மெக்சிக்கோ நியூசிலாந்து போலாந்து றொமேனியா தென்கொரியா சுவீடன் சுவிட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்கைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும்.
எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் ஸ்கைப்பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம்.
பிரான்சு சேர்மான் ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும்.
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஐப்பசி மாதம் 10, 2011 அன்று ஸ்கைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்கைப் அவுட் என்ற (Skypeout) ஸ்கைப் இன் ஓர் கட்டணம் செலுத்தப் பட்ட சேவையாகும்.
இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.
இதனை மூடிய Peer-to-peer முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலைஎழுது வலையமைப்பு ஆகும்.
இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் NAT ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது.

Friday, April 19, 2013

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம்


செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம்





மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். அந்த பிரதேசத்தில் நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.

அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

தனது சுய முயற்சியினால் வர்த்தகத்தில் முன்னேற்றமடைந்து வந்த 47 வயதான சிவகுரு ரகு மற்றும் 41 வயதுடைய அவரது அன்பு மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா கூரிய ஆயுதங்களினால் படுக்கையறையில் வெட்டியும் குத்தியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.



செங்கலடி நகரைப் பொறுத்தவரை 24 மணி நேரமும் பொலிஸாரின் ரோந்து கண்காணிப்புக்குரிய நகர் என்று கூறமுடியும். அப்படியிருந்தும் இந்த படுகொலைச் சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரின் கண்களுக்குப் புலப்படாமல் இடம்பெற்றுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வர்த்தகரான சிவகுரு ரகு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செங்கலடியைச் சேர்ந்த விப்ராவை விரும்பி திருமணம் செய்தவர். இவர்களுக்கு வைஷ்னவி (வயது 21) தலக்ஷனா (வயது 16) என இரு புதல்விகள் உள்ளனர். இந்த இரு பெண்மக்களையும் மிகவும் அன்போடு வளரத்து வந்தார்கள்.


ஆரம்பத்தில் சிறியளவில் வர்த்தகத்தை ஆரம்பித்த அவர் தனது மனைவியின் பக்கபலத்துடன் பொருளாதரத்தை வளப்படுத்திக் கொண்டார். இவரது குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான சூழலைக் கொண்டது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் விதியின் விளையாட்டு சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வர்த்தகரும் மனைவியும் படுக்கையறையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொலிஸார் சற்று நேரத்திலேயே இவ்விடத்திற்கு விரைந்த போதிலும் கொலையாளிகள் தொடர்பான எந்தவொறு தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் இக்கொலைகள் முன்மாதிரியைப் பின்பற்றி நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இடம்பெற்றிருப்பதை உணரமுடிந்தது.


எனினும் குடும்ப உறவினர்களில் ஒத்துழைப்பின்றி இக்கொலைகள் செய்திருக்க முடியாது என்ற ஒரேயோரு துடுப்பு மாத்திரமே புலனாய்வுத் துறையினருக்கு எஞ்சியிருந்தது. அந்த அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ப+ஜித ஜெயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாலை வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்தனர். அதையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸ் பலனாய்வுப் பிரிவினரும் மோப்ப நாய்கள் சகிதம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கொலையாளிகளின் தடயங்களைத் தேடினார்கள் தடயங்கள் கிடைக்கவில்லை நாய்களை மோப்பம் பிடிக்க விட்டார்கள் அந்த நாய்கள் கொலையாளிகளைத் தேடி ஓடின ஆனாலும் சம்பவ இடத்திலிருந்து 250 மீற்றரைக் கூட தாண்டவில்லை மோப்ப நாய்களால் கூட கொலையாளிகள் சென்ற பாதை மற்றும் மறைந்துள்ள இடத்தை கூட துல்லியமாக அறிய முடியவில்லை.

எவ்வாறிருப்பினும் பொலிஸார் முதலில் குடும்ப உறுப்பினரர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர் அதன் மூலமேனும் பொலிஸாருக்கு துப்புத் துலங்கவில்லை. பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் சிஐடி யினர் கொழும்பிலிருந்து வருகை தந்து புலனாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டார்கள். ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கிரான் செனவிரெடன, சார்ஜனட்களான நஜிமுடீன், சறுக், ரபிக் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான தாஹிர், அனுராத, புருசோத்மன், நலிம், வன்னிநாயக, கிஸ்ஸானாயக்க மற்றும் விதான ஆகியோரைக் கொண்ட விஷேட பொலிஸ் குழுவொன்றும் விசாரணையில் ஈடுபட்டது அதனையடுத்து ஓரிரு நாட்கள் கடந்த பின்னர் இளய மகளின் காதல் விவகாரம் கசியத் தொடங்கியது.

இதையடுத்து சந்தேகப்பட்ட காதலனின் தொலைபேசி அழைப்புகள் கண்கணிக்கப்படன அதன் மூலமாக கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனொருவன் கைது செய்யப்படார். அதனைத் தொடர்ந்து காதலன் மற்றும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர். இர்கள் அனைவரும் செங்கலடி மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவர்கள் என்பது மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

கொல்லப்பட்டவர்களது இளய மகள் ரகு தலக்ஷனா அவரது காதலன் சிவநேசராசா அஜந் அவரது நண்பர்களான புவனேந்திரன் சுமன் மற்றும் குமாரசிங்கம் நிலக்சன் ஆகியோரே சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டனர்

பொலிஸ் விசாரணையையடுத்து ஏறாவூர் சுற்றுலா நீதி மன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச் சாலையில் (பாடசாலை மாணவர்கள் என்ற காரணத்தினால்) தனியான அறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மூலம் பல்வேறு திகிலூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளின் காதல் விவகாரத்தை விரும்பாத தந்தை ரகு பலமுறை எச்சரிக்கை செய்ததுடன் காதலனை தாக்கியுள்ளார். இதையடுத்து காதலுக்கு பெற்றோர் இடையூறாகவேயிருப்பார்கள் என்று முடிவு செய்த இவர்கள் வஞ்சந்தீர்க்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். பாடசாலையிலும் ரியுசன் வகுப்பறையிலும் பழிதீர்க்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

கடந்த சித்திரை மாதம் 7 ஆந் திகதி மாலை ரகு தனது மனைவி மக்களுடன் புத்தாண்டு உடு துணிகள் வாங்குவதற்காக மட்டக்களப்பு நகருக்குச் சென்றனர் அந்த நேரம் தொடக்கம் இளைய மகள் தனது கையடக்கத் தொலைபேசி ஊடாக எஸ்எம்எஸ் மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

காதலனும் நண்பர்களும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாகக் கூறி பெரும் எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளைப் பெற்று இடித்துத் தூளாக்கி கைவசம் வைத்திருந்தனர்.

ரகு தனது குடும்பத்தாருடன் புத்தாண்டுக்குத் தேவையான உடு துணிகள் வாங்கவதற்குச் சென்ற பின்னர் மகள் தலக்ஷனா காதலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்திருக்கிறார்.

வீட்டின் திறப்பு சமையலறை யன்னல் ஓரத்தில் உள்ளது நீங்கள் வீட்டிற்குச் சென்று குசினியில் மீன்கறி கட்டியில் தூக்க மாத்திரைத் தூளைக் கலந்துவிடுமாறு கூறியிருக்கிறாள். காரியம் கச்சிதமாக மூடிந்திருக்கிறது.


அன்றிரவு 7 மணிக்குப் பின்னர் வீடு ரகுவின் குடும்பத்தினர் திரும்பியிருக்கிறார்கள்;. வழமை போல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆனால் தங்களின் இளைய மகள் காதலனுடன் சேர்ந்து தங்களுக்கு எதிராக செய்திருந்த சூழ்ச்சிணை அறிந்திருக்க வில்லை.

சம்பவ தினம் இரவு ரகுவின் மூத்த மகள் வைஷ்னவி வழக்கம் போல அம்மம்மாவின் வீட்டிற்குச் தூங்கியிருக்கிறாள் தாய் விப்ரா மூத்த மகளுக்கு இரவு சாப்பாடு எடுத்துச் சென்றிருக்கிறார்;. மூத்த மகள் அதில் ஒரு கவளத்தை வாயில் வைத்து விட்டு“கசக்கிறது அம்மா” என்று உணவைத் துப்பியுள்;ளார். தாயார் “உனக்கு சாப்பிட விருப்பம் இல்லாட்டி இப்படித்தான் சொல்ர”என்று கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் தந்தை ரகுவும் உணவை உண்ட போது ஏதோ ஒரு கசப்பு தன்மை காணப்படுவதை உணர்ந்தார்.

அன்றிரவு ரகுவும் மனைவியும் வழமை போல்; ஓர் அறையிலும் இளைய மகள் மற்றைய அறையிலும் உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள். அத்தினம் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக அளைய மகள் தொலைபேசி மூலம் தனது காதலனுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களை அழைத்து வீட்டின் முன் கதவை திறந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறாள் கொலையாளிகளி உள்ளே நுழைந்து படுக்கையறைக்குள் சென்று கைத்தொலைபேசி வெளிச்சத்தின் உதவியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த விப்ராவை அடையாளங்கண்டு தாக்கி கழுத்தை அறுத்துள்ளனர். இச்சமயம் அருகில் படுத்திருந்த ரகு எழுந்து கொலையாளிகளுடன் போராடியுள்ளார். கொலையாளியிலாருவர் ரகுவின் வாயை பொத்தியுள்ளார் அந்தநேரம் ரகு கொலையாளியின் கையைக்கடித்து காயப்படுத்தியுள்ளார். கொலையாளிகள் ரகுவை பொல்லால் கடுமையாகத் தாக்கி கழுத்தையும் அறுத்துள்ளார்கள். அச்சமயம்; தாக்கும் சத்தம்கேட்டு விப்ராவின் தந்தை சுந்தரமூர்த்தி மகளின் வீட்டிற்கு வந்தபோது படுக்கையறையில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரகுவை பொல்லால் அடிப்பதை அவதானித்தார்.

அதனைக் கண்டதும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செய்வதறியாது தடுமாறினார் உடனடியாக திரும்பி தனது வீட்டிற்குச் சென்று மருந்து உட்கொண்டுவிட்டு மீணடும் வந்தபோது நபரொருவர் ஒடுவதை அவதானித்திருக்கிறார். அப்போது மகளின் வீட்டுக்கதவின் குறுக்குப் பொல்லு விழுந்த சத்தமும் கேட்டது. அவ்வேளை வீட்டில் படுத்திருந்த தலக்ஷனா “அம்மா அம்மா” என்று கூப்பிடும் சத்தம் கேட்டதும் சுந்தரமூர்த்தி “சத்தம் போட வேண்டாம் மகள் வந்து குசினி பக்க கதவ திற” என்றார் உள்ளே வந்து பார்த்தபோது மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்ணுற்றார்.

அயல் வீட்டாரை அழைத்தார் எவருமே வரவில்லை வீட்டின் முன்னால் இருந்த செங்கலடி பிரதேச வைத்திய சாலைக்குச் சென்று நிலைமையைக் கூறினார். அங்கு செங்கலடி சந்தியில் பொலிஸாரிடம் கூறுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பொலிஸார் வந்து பார்வையிடடனர்.;

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தில் பல்வேறு ஊகங்கள உலாவின. முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் யாராவது சம்மந்தப்பட்டிருக்கலாம்? குடுத்பத்தில் யாராவது பின்னணியிலிருந்திருக்கலாம்? வர்த்தகப் போட்டியாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவின. இருந்தபோதிலும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இளைய மகள் தலக்ஷனாவின் நடவடிக்கைகள் முகபாவங்களைக் கண்டு மரணச் சடங்கிற்கு வந்த பலரும் அவளின் மீது சந்தேகப்பட்டு கண்புருவங்களைச் சுருக்கிப் பார்த்தனர். ஏதேதோ பேசிக்கொண்டனர்.

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

கொல்லப்பட்டவர்களின் இரண்டாவது மகள் தலக்ஷனா (தற்போது சந்தேக நபர்களில் ஒருவர்) சாட்சியமளிக்கையில்,

“ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் நான், அப்பா, அம்மா, அக்கா அனைவரும் சித்திரரைப் புத்தாண்டிற்காக உடுப்பு எடுக்க மட்டக்களப்பிற்குச் சென்று அன்றிரவு 7 மணிக்கு பின்பு வீட்டிற்கு வந்தோம்.

அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாடு எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கறி கசக்கிறது என்றார். அதற்கு அம்மா “உனக்கு இதுதான் கத” என்று சொன்னார். அப்பாவும் கறியைச் சாப்பிட்டுவிட்டு “ஓம் கசக்கிறதுதான்” என்றதும் அக்கறியை வீசிவிட்டோம். அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சி கறியை சாப்பிட்டோம்.

அத்தினம் நள்ளிரவு வேளையில் அலரல் சத்தம் கேட்டது நுளம்பு வலைக்குளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிடடேன் அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினி கதவை திறக்குமாறு கேட்டார் திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன் அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்” என்றார்.

இது தொடர்பான மரண விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்

“சம்பவ தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலரும் சத்தமும் வந்தது உடனே குசினி பக்கம் சென்றேன் கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யுன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். மின்விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக்கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை நான் அதிர்த்தியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன். அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காண முடிந்தது.

நான் மகளின் வீட்டிற்குச் சென்று தம்பி தம்பி என்று மருமகனைக் கூப்பிட்டேன் எந்த பதிலம் கிடைக்கவில்லை பின்னர் மகள் மகள் என்று கூப்பிடடேன் பதில் எதுவும் இல்லை அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப் பக்கக் கதவைத் திறக்கச் சொன்னேன. திறந்து “ என்ன அம்மப்பா” என்று கேட்டாள் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன் அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்துவரவிலலை முன்னால் உள்ள ஆஸ்பித்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். ஆங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்களள் ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தைக் கூறினேன் விரைந்து வந்து பார்த்தார்கள் இவ்வளவுதான் என்னால் கூற முடியும்”என்றார்

மரண விசாரணை சாட்சியங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கiயின் படி இரண்டு மரணங்களும் கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பொலிஸார் உறவினர்கள், அயலவர்கள் பாடசாலை சமூகம் மற்றும் சக மாணவர்கள் என பலரையும் விசாரணைக்குட்படுத்தியதாகவும் இருவர் இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்கென கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இந்த விசாரணைகளின் படி பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவலின் பிரகாரம் புத்தாண்டிற்கு முதல் நாள்; 13 ஆந் திகதி குமாரசிங்கம் நிலக்சன் என்பவர் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கித்துள் பிரதேசத்தில் அவரது வீட்டிலிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் இளைய மகள் அவரது காதலன் மற்றும் நண்பர் என சந்தேக நபர்கள் புதுவருட தினமன்று கைது செய்யப்பட்hர்கள். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியதாக பொலிஸார் கூறினர்.

இக்கொலை தொடர்பாக பொலிஸ் தரப்பு தகவல்கள் மூலம் தெரிய வருவதாவது:

கொலையாளிகள் அஜந்தின் வீட்டிலிருந்த கத்திகள் மற்றும் கோடரிப்பிடி முகமூடி கையுறை காலுறை தூக்கமாத்திரை மற்றும் மிளகாய்த்தூள் போன்றவற்றை பாடசாலை பையில் எடுத்துக் கொண்டு செங்கலடி பிள்ளையார் கோவில் பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். அதன் பின்னர் சந்தை வீதியிலுள்ள சுமனின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வைபவ வீடொன்றில் சோடனை செய்வதற்காக செல்வதாக கூறி அவரையும் அழைத்துக் கொண்டு பிள்ளையார் கோவில் மதில் பகுதியில் பதுங்கியிருந்து தக்ஷனாவுடன் எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

“பெற்றோர் உறங்கிவிட்டனர் வரலாம்” என எஸ்எம்எஸ் வந்தவுடன் இவர்கள் மூவரும் ஆயுதங்களுடன் வீட்டில் முன் மதிலால் பாய்ந்து வளவிற்குள் சென்றதும் தலக்ஷனா முன் வாசல் கதவை திறந்து உள்ளே வரவழைத்து பெற்றோரின படுக்கையறையை திறந்து விட்டுள்ளார். இந்த நேரம் ரகுவின் வீட்டு நாய் குசினி கதவருகில் நின்று குரைத்துக் கொண்டிருந்தது. தலக்ஷனா நாயை கட்டுப்படுத்தியுள்ளார்.

கொலையாளிகள் வெளியேறிய பின்னர் கையுறைகள் முகமூடிகள் கொலை சம்பவத்தின் போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகள் அம்மன்புரம் ஆற்றோரம் பிரம்பு புதருக்குள் புதைக்;கப்பட்டிருந்தன.

இவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வர்த்தகரின் மகள் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை பயன்படுத்தி வௌ;வேறு இலக்கங்களில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாக அறிய முடிகிறது.

தலக்ஷனா சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பின்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்

நான் அஜந் என்பவரை காதலித்தது உண்மை. முகமூடி அணிந்து அவர்களை மிரட்;டுவதற்காகவே அவர்களை வர சொன்னனே தவிர கொலை செய்யும் நோக்கத்திற்காக அல்ல. இவர்களது நடமாட்டத்தை கண்டு நாய் குரைத்ததும் வெளியே வந்து நாயைக் கலைத்து விட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தார் அப்பாவை அஜந் அடித்துக் கொண்டிருந்தார் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டனார் வந்த வேளை மூவரையும் அனுப்பிவிட்டு நான் பயத்தினால் எனது அறையை பூட்டிவிட்டு தூங்கிவிட்டேன். என தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக சந்தேகநபர்கள் கூறியுள்ளனர்.

ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டமொன்று இருந்தது. அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

எனினும் தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை இக்காலகட்டத்தில் அனைவரது உள்ளங்களையும் உலுப்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

-பேரின்பராஜா சபேஷ் 
நன்றி வீரகேசரி 

Thursday, April 18, 2013

SLTJ புழுதிவயல் கிளையின் ஏற்பாட்டில் தெருமுனை பிறச்சாரம்


SLTJ புழுதிவயல் கிளையின் ஏற்பாட்டில் தெருமுனை பிறச்சாரம்

கடந்த  2013,3,8 அன்று SLTJ புழுதிவயல் கிளையின் ஏற்பாட்டில்  சகோ: ஹிஸாம் அவர்கலாள் ​தெருமுனை பிறச்சாம் நடைபெற்றது.




Wednesday, April 17, 2013

அமெரிக்காவில் நடந்த குண்டுவெடிப்பு செய்திகள் மக்களை திசைதிருப்புவதற்காக நடத்தப்பட்டதாக யூகிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடந்த குண்டுவெடிப்பு செய்திகள் மக்களை திசைதிருப்புவதற்காக நடத்தப்பட்டதாக யூகிக்கப்படுகிறது. 


எத்தனை பேருக்கு தெரியும் ஆப்கானில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அமெரிக்க வாண்தாக்குதலால் நடந்த குண்டுவெடிப்பை பற்றியும் அதில் 30 பேர் இறந்ததும் அதிகமானவர்கள் காயம் அடந்ததும், எத்தனை பேருக்கு தெரியும்............. ? 

அதிகமாக ஷேர் செய்யவும்.............

நடந்த இடம்: Uruzgan மத்திய மாகாணம்

Difference between Resume, C.V. and Bio Data.