Wednesday, May 22, 2013

கலப்பட தேங்காய் எண்ணெய் Mineral oil side effects

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..
பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை .

Thursday, May 9, 2013

Intel's Core i7-4770K Overclocked to 7.0 GHz


Intel's Core i7-4770K Overclocked to 7.0 GHz


While the Haswell launch is not far away, an overclocker who goes by the nickname "rtiueuiurei" has managed to get his/her hands on an engineering sample of the upcoming Core i7-4770K, and overclock it to an insanely high frequency.
The chip has been overclocked over 7 GHz, to precisely 7012.65 MHz. This was accomplished using a base clock of 91.07 MHz and a multiplier of 77.0. Of course, to keep such a ridiculous overclock stable the CPU needs an insanely high voltage. A staggering 2.56 V was used to accomplish this. Now, it is always possible that CPU-Z read the voltage wrong, because it is quite difficult to imagine that any modern CPU would survive such voltages. That said, we can only assume that "rtiueuiurei" had a very adequate cooling solution to accompany this.
Sadly, we can also question the screenshot, as the CPU-Z ID has been blurred out as well as a number of other things, so there is no way to retrace the post.

Wednesday, May 8, 2013

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper

உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம். வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும்
. பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution
240x320 அதை கொடுத்தால் போதும். வலைதள முகவரி : www.reddodo.com/