Tuesday, March 30, 2010

ட்ரங்கன் மங்க்கி ஸ்டைல் டிரைவிங்.

ட்ரங்கன் மங்க்கி ஸ்டைல் டிரைவிங்.

பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் இறந்து விட்டனர்.
ஒரே ஒரு குரங்கு மட்டும் பிழைத்திருந்தது (குரங்கு
குரங்காட்டியுடன் பயணித்தது)
போலிஸ் அந்த குரங்கிடம் விசாரித்தனர்:-



போலிஸ்: எப்படி விபத்து நடந்தது? அந்த நேரம் டிரைவர் என்ன செய்துகொண்டிருந்தார்?
குரங்கு: இது போன்று சைகை காண்பித்தது.



போலிஸ்: அந்த நேரம் கண்டக்டர் என்ன செய்து கொண்டிருந்தார்?

குரங்கு: அதற்கும் இது போன்று சைகை காண்பித்தது.



போலிஸ்: பயணிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
குரங்கு: அதற்கும் இது போன்று சைகை காண்பித்தது.



போலிஸ்: சரி, நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?
குரங்கு: ஸ்டியரிங் அருகில் சென்று இது போன்ற சில செய்கைகளை செய்து காண்பித்தது .


Monday, March 29, 2010

ஐ-போன் vs நோக்கியா - எது பெஸ்ட்?

ஐ-போன் vs நோக்கியா - எது பெஸ்ட்?







செல்வந்தர்களுக்காகவே மின்னணு சாதனங்களை தயாரித்து தரும்
நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம்.ஆமாம் இந்த
நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்கள் எல்லாமே பணக்காரர்களால் மட்டுமே
வாங்கமுடியும். அந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கும் .

பணக்காரர்களும் தங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களாக
காட்டிக்கொள்ள பணத்தை தண்ணியாக செலவு செய்து இந்நிறுவன பொருள்களை வாங்கி
உபயோகிப்பார்கள். இந்த நிறுவனம் தயாரித்து தரும் சாதனங்களில் அதிகமான
வசதிகள் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக வடிவமைப்பு அபாரமாக இருக்கும்.
அதில்தான் எல்லோரும் மயங்கி விடுவார்கள். அந்த மயக்கத்தில் அந்த
தயாரிப்பில் கொடுக்கின்ற காசுக்கு இல்லாத சிலவசதிகள் வாங்குவோருக்கு
பெரிதாக தெரியாது.அது தான் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றியின் ரகசியம்.

பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்குகின்ற சாதனங்களில் கொடுக்கின்ற
பணத்திற்கு உள்ள வசதிகள் உள்ளனவா? என்று பார்த்து வாங்க வேண்டும்.ஆனால்
பெரும்பாலானோர் அப்படி செய்வதில்லை.வாடிக்கையாளர்களின் இந்த மனநிலையை
ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

கம்ப்யூட்டர், ஐபாட் போன்ற சாதனங்களை தயாரித்து வழங்கி வரும் ஆப்பிள்
நிறுவனம் செல்போன் சந்தையிலும் இறங்க 'ஐபோன்' என்ற தனது தயாரிப்பை களம்
இறக்கியது. 16GB நினைவகம் கொண்ட போனின் விலை 39,000 விலைக்கும், 8GB
நினைவகம் கொண்ட போன் 37,000 என்ற விலைக்கும் அறிமுகப்படுத்தியது.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் பல வாடிக்கையாளர்கள் போட்டி
போட்டுக்கொண்டு வாங்கினார்கள், சிலபேர் ஷோரூம்களுக்கு முன்னாள் இரவு
முழுவதும் காத்துக்கிடந்து வாங்கினார்கள். தனது தயாரிப்புக்கு உள்ள அமோக
ஆதரவை பார்த்த ஆப்பிள் நிறுவனம் விற்பனையை அதிகரிக்க இன்னொரு தந்திரம்
செய்தது.

அதாவது உலகம் முழுக்க ஒரு நேரத்தில் சாதனத்தை விற்பனைக்கு விடாமல்
குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் விற்பனை செய்தது.இதனால்
அறிமுகப்படுத்தப்படாத மற்ற நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த
போனை எப்படியாவது வாங்கி பயன்படுத்தி பார்த்து விடவேண்டும் என்ற பேராசையை
வளர்ந்தது.இதனால் ஆப்பிள் ஐ போனின் விற்பனை சூடுபிடித்தது. ஆனால் அவ்வளவு
பணம் கொடுத்து வாங்கிய போன் உண்மையிலேயே கொடுத்த பணத்திற்கு உரிய வசதிகளை
இருக்கின்றனவா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'ஐபோன்' ஒரு கையால் தொட்டு இயக்கப்படும் (touch screen) போன் என்பதால் அந்த
நிறுவனத்தோடு போட்டிபோட மற்ற நிறுவனங்களும் தங்கள் சார்பில் தொட்டு
இயக்கும் போன்களை அறிமுகப்படுத்தியது.

இதில் நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்திய 5800xpressmusic என்ற மாடல்
நோக்கியாவின் கையால் தொட்டு இயக்கம் முதல் போன் என்பதால் அந்த மாடலுக்கும்,
ஐபோனுக்கும் பலத்த போட்டி நிலவியது. செல்போன் விற்பனையில் தாத்தாவான
நோக்கியா நிறுவனம் தனது மாடலில் ஆப்பிள் ஐபோனால் தர முடியாத பல வசதிகளை
உட்புகுத்தி அறிமுகப்படுத்தியது.

அதில் முக்கியமானது போனின் விலை,ஆமாம் கொடுக்கின்ற காசுக்கு உரிய
வசதிகளுடன் நோக்கியாவின் 5800 xpressmusic வெறும் இப்போது இந்தியாவில்
வெறும் 13,500 என்ற விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.இந்த போன்
அறிமுகப்படுத்தப்பட்ட போது 19,800 என்ற அளவில் விலை இருந்தது
குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் ஐபோனில் கொடுக்கின்ற காசுக்கு உரிய வசதிகள் இல்லையா? என்று
நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக இல்லை என்று சொல்லமுடியும். இங்கே
ஐபோனுக்கும் நோக்கியா 5800xpressmusic போனுக்கும் உள்ள வசதிகளின்
வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளேன். படித்துவிட்டு நீங்களே எந்த போனை
வாங்கலாம் என்று முடிவுசெய்து கொள்ளுங்கள்.

ஐபோனுக்கும், நோக்கியா 5800 xpressmusic போனுக்கும் உள்ள வசதி
வித்தியாசங்கள் :

1. 1500 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற போன்களில் கூட F.M வசதி உள்ளது.ஆனால்
ஐபோனில் இல்லை.நோக்கியா 5800 மாடலில் RDS வசதியுடன் F.M RADIO வசதி உள்ளது.

2. ஐபோனில் BLUTOOTH வசதி உள்ளது ஆனால் அதன் மூலம் பாடல்கள்,வீடியோ,
ரிங்டோன் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. நோக்கியாவில்
இது தண்ணி பட்டபாடு .

3. ஐபோனில் கேமரா வசதி உள்ளது.ஆனால் அதில் VIDEO RECORDING செய்ய முடியாது
.மூன்றாம் தரப்பு நிறுவனம் வழங்கும் அப்ளிகேஷனை பயன்படுத்திதான் இந்த
வசதியை பெறமுடியும்.(ஆப்பிள் நிறுவனத்தின் APPLE 3GS என்ற புதிய மாடலில்
மட்டுமே வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது) நோக்கியாவில் இந்த வசதி
இயற்கையாகவே உள்ளது.

4.நோக்கியாவில் எம்.பி 3 பாடல்களை,வீடியோ காட்சிகளை ரிங்டோனாக பயன்படுத்த
முடியும், ஆனால் ஐபோனில் முன்பே பதியப்பட்ட ரிங்டோன்களை மட்டுமே
பயன்படுத்தமுடியும்.அதே போல் ரிங்டோனின் சத்தமும் மிகக்குறைவாக இருக்கும்.



5.நோக்கியாவில் நீங்கள் தொடர்ந்து எட்டு மணி நேரங்கள் பேசலாம், அதன்
STANDBY நேரம் 406 மணிநேரம், பாட்டரியை கழற்றி மாட்ட முடியும், ஆனால்
ஐபோனில் தொடர்ந்து 5 மணிநேரம் மட்டுமே பேசமுடியும், அதன் STANDBY நேரம் 300
மணி நேரம் மட்டுமே, பாட்டரியை கழற்ற முடியாது.

6. நோக்கியாவில் ஸ்பீக்கர் ஒலி அளவு மிகச்சிறப்பாக உள்ளது. ஆனால் ஐபோனில்
குறைந்த அளவே கேட்கிறது.எம்.பி 3 பாடல்களை ஹெட் போன் இணைத்தால் மட்டுமே
நல்ல ஒலி அளவில் கேட்க முடியும்.

7. நோக்கியாவில் DUAL LED FLASH' உள்ளது,ஆனால் ஆப்பிள் ஐபோனில் FLASH
கிடையாது.

8.ஐபோனின் எடை 133 கிராம், நோக்கியாவின் எடை 109 கிராம்

9. நோக்கியாவில் 3.2 MEGAPIXELS கேமரா உள்ளது. ஐபோனில் 2MEGAPIXELS
மட்டுமே.
(ஆப்பிள் நிறுவனத்தின் APPLE 3GS என்ற புதிய மாடலில் மட்டுமே 3 MEGAPIXELS
கேமரா உள்ளது)

10.ஐபோனின் திரை அளவு 3.5" INCH, நோக்கியாவின் திரை அளவு 3.2" INCH
நோக்கியாவின் SCREEN RESOLUTION 640*360 என்ற அளவில் உள்ளது, ஆனால் ஐபோனில்
SCREE RESOLUTION 480*320 மட்டுமே

11.நோக்கியாவில் வீடியோ கால் செய்யும் வசதி உள்ளது,ஐபோனில் இந்த வசதி
இல்லை, 3G வசதி இரண்டு போன்களிலும் உள்ளது.நோக்கியாவை நம் வீட்டு 'டிவி'
யுடன் இணைக்கமுடியும், ஐபோனில் அந்தவசதி இல்லை,அதேபோல் ஐபோனில் VOICE
DIALING வசதியும் இல்லை.

12. ஆப்பிள் ஐபோனில் பாடல்களை பணம் கொடுத்து மட்டுமே தரவிறக்கம் செய்ய
முடியும், ஆனால் நோக்கியாவில் ஒரு வருடத்திற்கு இலவசமாக பாடல்களை
தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

13.நோக்கியா சிம்பியன் O.S வகையை சார்ந்தது, இதன் மூலம் ஏராளமான
மேம்படுத்தப்பட்ட வசதிகளை தொடர்ந்து பெறமுடியும், ஆனால் ஐபோன் அதன்
தனிப்பட்ட MAC O.S வகையை சார்ந்தது,

14. எல்லாவற்றுக்கும் மேலாக நோக்கியா எக்ஸ்பிரஸ் மியூசிக் போனின் விலை
இந்தியாவில் இப்போது 13,500மட்டுமே, ஆனால் ஐபோனின் விலை இப்போதும்
இந்தியாவில் 30,000 ரூபாய்.

இப்போது நீங்களே சொல்லுங்கள் ஐ-போனை விட நோக்கியா பெஸ்டா இல்லையா..?

Saturday, March 27, 2010

வருத்தபடாத வாலிபர் சங்கம்...!!

வருத்தபடாத வாலிபர் சங்கம்...!!

உழைப்பு உயர்வு தரும்,
உயர்வு பணம் தரும்,
பணம் திமிரை தரும்,
திமிர் ஆணவம் தரும்,
ஆணவம் அழிவைத் தரும்,
சொ உழைப்பை எதிர்போம்,
ரெச்ட் எடுப்போம்.....

இவன்

வண்டு முருகன்
வட்டசெயளார்.

Wednesday, March 17, 2010

test post

test test test test test test test test test test test test test test

Monday, March 15, 2010

In Zimbabwe, the whole village can eat an elephant one.

In Zimbabwe, the whole village can eat an elephant one.
As soon as the African elephant die, he will immediately become a staple for the natives.Some photos are strict enough














Tuesday, March 2, 2010

வெப் கமரா அவதானம் தேவை மெயிலில் படித்தது அனைவருக்கும் உதவுமே என்று அனுப்பியுள்ளேன்....

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?

எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?


பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?


அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள [b]Asian School of Cyber Law [/b]வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.




'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்'
- [b]ரோகஸ் நாக்பால், [/b][b]ப்ரசிடண்ட் ஆப் ஆசியன் ஸ்கூல் ஆப் சைபர் லா[/b]


'தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.'
- [b]விஜய் முகி – [/b][b]கணிணித்துறை வல்லுனர்[/b]

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் ([b]Trojan Hors[/b]e ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.


ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.

இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

ஆம் நம்புங்கள்; அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.


மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் [b]அனி ஜோலகர்[/b] ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே [b]கணிப்பொறியில் ட்ரோஜன்[/b][b] [/b]என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.


இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.


கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

3ஜி" யில் என்னென்ன வசதிகள் இருக்கு?

கவல் தொழில்நுட்பத்துறையில இலங்கை  முன்னேறிக்கிட்டு வருதுன்னு சொன்னாலும் பல நாடுகள்ல தண்ணிபட்ட பாடா இருக்குற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான "3 ஜி தொழில்நுட்பம் இன்னும் இலங்கை ல முழுசா வந்தபாடில்ல.மற்ற நாடுகள்ல 3 ஜி போயி 4 ஜி தொழில்நுட்பத்த கொண்டுவர தயாராயிட்டு இருக்காங்க...

இந்த தொழில்நுட்பத்தை நாடு முழுவதுமுள்ள எல்லா மொபைல் ஆபரேட்டர்காரங்களும் கொண்டு வர்றப்போ அதோட புரட்சி பெரிய அளவுல இருக்குமுங்க...

சரி அப்படி என்ன ஸ்பெசலா இருக்கு இந்த 3 ஜியில,

* நாம இப்போ உபயோகப்படுத்துகின்ற தொழில்நுட்பம் 2.5 ஜி அலைவரிசை, இதனால பெரிய அளவுல டிஜிட்டல் சமாச்சாரங்கள நாம அனுபவிக்க முடியாது.

* ஆனா 3 ஜி தொழில்நுட்பம் பல புதிய டிஜிட்டல் வசதிகளை நமக்கு தரும்.

* 3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமா 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும்.அதிகபட்சமா 2mbps வேகம் வரைக்கும் இணைய வசதி கிடைக்கும். இதனால் வேகமாக தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப முடியும்.

* இப்போ நாம நமது லேப்டாப் அல்லது கணினியில மோடம் இல்லேன்னா வை-பை மூலமா இணைப்பு குடுத்து இன்டர்நெட் யூஸ் பண்ணிக்கிடிருக்கோம், ஆனா 3 ஜி தொழில்நுட்பத்துல பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமா நாம ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறமுடியும்,"INTERNET STICK" ," HSPDA" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இது குறித்தான விபரங்களை இந்த
http://europe.nokia.com/A41464148 லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்.

* நம்ம மொபைல்ல நம்ம கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பாத்துக்கிட்டே பேசலாம்.இத "video telephone" ன்னு சொல்வாங்க. "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.

* வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங்,
இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? கிரிக்கெட்ட கூட உங்க மொபைல்ல லைவ்வா பாக்க முடியும்.

* இன்டர்நெட் ரேடியோ மூலமா உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்துல நம்ம மொபைல்ல கேட்க முடியும்.

* சிறப்பான மொபைல் ஆன்லைன் கேமிங் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

* 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்த வகையான போன்கள் இந்திய பணமதிப்பில் 7000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

O F F I C E

20139493.png