3ஜி" யில் என்னென்ன வசதிகள் இருக்கு?

கவல் தொழில்நுட்பத்துறையில இலங்கை  முன்னேறிக்கிட்டு வருதுன்னு சொன்னாலும் பல நாடுகள்ல தண்ணிபட்ட பாடா இருக்குற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான "3 ஜி தொழில்நுட்பம் இன்னும் இலங்கை ல முழுசா வந்தபாடில்ல.மற்ற நாடுகள்ல 3 ஜி போயி 4 ஜி தொழில்நுட்பத்த கொண்டுவர தயாராயிட்டு இருக்காங்க...

இந்த தொழில்நுட்பத்தை நாடு முழுவதுமுள்ள எல்லா மொபைல் ஆபரேட்டர்காரங்களும் கொண்டு வர்றப்போ அதோட புரட்சி பெரிய அளவுல இருக்குமுங்க...

சரி அப்படி என்ன ஸ்பெசலா இருக்கு இந்த 3 ஜியில,

* நாம இப்போ உபயோகப்படுத்துகின்ற தொழில்நுட்பம் 2.5 ஜி அலைவரிசை, இதனால பெரிய அளவுல டிஜிட்டல் சமாச்சாரங்கள நாம அனுபவிக்க முடியாது.

* ஆனா 3 ஜி தொழில்நுட்பம் பல புதிய டிஜிட்டல் வசதிகளை நமக்கு தரும்.

* 3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமா 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும்.அதிகபட்சமா 2mbps வேகம் வரைக்கும் இணைய வசதி கிடைக்கும். இதனால் வேகமாக தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப முடியும்.

* இப்போ நாம நமது லேப்டாப் அல்லது கணினியில மோடம் இல்லேன்னா வை-பை மூலமா இணைப்பு குடுத்து இன்டர்நெட் யூஸ் பண்ணிக்கிடிருக்கோம், ஆனா 3 ஜி தொழில்நுட்பத்துல பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமா நாம ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறமுடியும்,"INTERNET STICK" ," HSPDA" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இது குறித்தான விபரங்களை இந்த
http://europe.nokia.com/A41464148 லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்.

* நம்ம மொபைல்ல நம்ம கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பாத்துக்கிட்டே பேசலாம்.இத "video telephone" ன்னு சொல்வாங்க. "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.

* வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங்,
இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? கிரிக்கெட்ட கூட உங்க மொபைல்ல லைவ்வா பாக்க முடியும்.

* இன்டர்நெட் ரேடியோ மூலமா உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்துல நம்ம மொபைல்ல கேட்க முடியும்.

* சிறப்பான மொபைல் ஆன்லைன் கேமிங் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

* 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்த வகையான போன்கள் இந்திய பணமதிப்பில் 7000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.