Thursday, July 22, 2010

Unnai Paartha Pinbu Naan FROM KADHA MANNAN



Your Ad Here

Monday, July 19, 2010

cows & cows & cows



Your Ad Here

Dolphin Jumps Out of Tank During Show



Your Ad Here

Friday, July 16, 2010

فيديو كليب دمعتي اليتيمة



Your Ad Here

Saturday, July 10, 2010

தவறாகப்புரிந்துகொள்ளுதல்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்



உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!

Wednesday, July 7, 2010

படித்ததில் பிடித்தது !!

படித்ததில் பிடித்தது !!

வயல்வெளி
பார்த்து
ஓடையில்
குளித்து

எதிர்வீட்டில்
விளையாடி
எப்படியோ
படித்த நான்
ஏறிவந்தேன்
நகரத்துக்கு

சிறு அறையில்
குறுகிப்படுத்து
சில மாதம்
போர்தொடுத்து
வாங்கிவிட்ட
வேலையோடு
வாழுகிறேன்
கணிப்பொறியோடு !


மனசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
மாறிப்
போகுமோ?

மௌசு
தொட்டு
வாழும்
வாழ்க்கை
பழகிப்
போகுமோ
வால்பேப்பர்
மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து
போகுமோ
சொந்த
பந்த
உறவுகளெல்லாம்
ஷிப்
பைலாய்
சுருங்கிப்
போகுமோ ?
வாழ்க்கை
தொலைந்து
போகுமோ
மொத்தமும் !
புரியாது
புலம்புகிறேன்

நித்தமும்
தாய்
மடியில்
தலைவைத்து
நிலவு
முகம்
நான்
ரசித்து
கதைகள்
பேசி
கவலைகள்
மறந்த
காலம்
இனிதான்
வருமா ?



சொந்த
மண்ணில்
சொந்தங்களோடு
சோறு
திண்பவன்
யாரடா ?
இருந்தால்
அவனே
சொர்க்கம்
கண்டவனடா !

Saturday, July 3, 2010

அலுவலகங்களில் நடக்கும் ஒரு உண்மைக்கதை...



ஒரு காலத்தில் இந்தியாவில் ஒரு படகு குழு
இருந்தது.




இந்திய அணியும் ஜப்பான் அணியும் வருடா வருடம்
போட்டி நடத்த ஒப்பந்தம் செய்தனர்.





இரு அணிகளும் மிகவும் கடுமையாக போட்டி போட்டனர்
ஆனால் ஜப்பான் இறுதியில் ஒரு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





இந்தியா அணி இதனால் மிகவும்
சோர்வடைந்து. ஆனால் முக்கிய அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்து ஆராய முடிவு
எடுத்தனர்.




கடினமாக ஆராய்ந்த பிறகு அவர்கள் ஒன்றை கண்டு
பிடித்தனர். ஜப்பான் அணியில் படகை செலுத்த ஏழு பேரும் அவர்களுக்கு ஒரு
தலைவரும் இருந்தனர்.



ஆனால் இந்திய அணியில் ஒரு படகோட்டியும் ஏழு
தலைவர்களும் இருந்தனர்.



இத்தகைய இக்கட்டான
சுழ்நிலையில் இந்திய உயர் அதிகாரிகள் ஒரு முடிவு செய்தனர். ஒரு ஆலோசனை
மையத்தை அணுகி அவர்களிடம் இருந்து ஒரு தீர்வு காண முற்பட்டனர்.

பல ஆய்வுகளுக்கு பின்னர் அந்த ஆலோசனை மையம் ஒரு
அறிக்கையை தாக்கல் செய்தது அதில் இந்திய அணியில் மிக குறைந்த அளவு
படகோட்டிகள் இருப்பதாக கூறினர்.




அறிக்கையை பார்த்த பின்னர் இந்திய அணியில் சில
மாற்றங்கள் செய்தனர். ஏழு தலைவர்களுக்கு பதிலாக நாலு தலைவர்களும் , இரண்டு
மேலாளர்களும், ஒரு தலைமை மேலாளரும் இருக்குமாறு அணி மாற்றி அமைக்கப்பட்டது.




பின்னர் நடந்த போட்டியில்
ஜப்பானியர்கள் இரண்டு மைல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



தோல்வி காரணமாக அந்த ஒரு படகோட்டியை மேல்
அதிகாரிகள் பணிநீக்கம் செய்தனர்.


ஆனால் இந்திய அணியின் தலைமை
அதிகாரிகள் போட்டியை நான்றாக ஊக்க படுத்தியதற்காக அவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.



மேலும் அந்த ஆலோசனை மையம்
ஆராய்ந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய அணியின் ஊக்கமும்
உற்சாகமும் நன்றாகத்தான் இருந்தது அனால் உபகரணங்கள்தான் சரியில்லை என்றது.
அதனால் அடுத்த போட்டிக்கு இந்திய அணி புதிய படகை தயார் செய்து கொண்டு
இருக்கிறது.



இது மெய்யாலுமே இந்திய அலுவலகங்களில்
நடக்குதுங்கோ. அலுவலக ஆசாமிகளுக்கு இது புரியும்.

இந்த மாதிரிதாங்க இன்றைக்கு இருக்கும் நிறைய
தொழில்நுட்ப அலுவலகங்களில் நடந்துகிட்டு இருக்கு.


தத்துவமுங்கோ...

தத்துவம் என்: 1001
வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

தத்துவம் என்: 1002
லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க...

தத்துவம் என்: 1003
பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்...
அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

தத்துவம் என்: 1004
வகுப்பறை என்பது ரயில் மாதிரி
முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)
நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)
கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)
நல்லா ஓடுது...

தத்துவம் என்: 1005
ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!
பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்...

தத்துவம் என்: 1006
வெற்றியை தேடி அலைந்த போது "வீண் முயற்சி" என்றவர்கள்.
வெற்றி கிடைத்ததும் "விடா முயற்சி" என்றார்கள்.
இதுதான் உலகம்.

தத்துவம் என்: 1007
நீ செய்யும் தவறு கூட
புனிதம் ஆகும் 
அதை நீ ஒப்பு கொள்ளும்
போது...



கவிதை என் : 2001
அருகில் இருந்தும் பேச முடியவில்லை
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை - எக்ஸாம் ஹால்லில்...
என்ன கொடுமை சார்...

கவிதை என் : 2002
பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!
எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!
மலரிடம் சொன்னது முள்...

கவிதை என் : 2003
ஆசை படுவதை மறந்து விடு!
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

கவிதை என் : 2004
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே
என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை என் : 2005
வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.

கவிதை என் : 2006
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கவிதை என் : 2007
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்
நீ என்னை அணைக்கும் வரை...
இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை என் : 2008
நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்
இப்படிக்கு கவலைகள்.

கவிதை என் : 2009
நண்பன் மீது கோபம்
கொள்ளலாம் ஆனால் 
காதலி மீது கோபம்
கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான் 
காதலி புரியாமல்
கொள்வாள்.

கவிதை என் : 2010
நெஞ்சை தொட்ட கவிதை 
தூசி பட்ட கண்களும் 
காதல் பட்ட இதயமும் 
எப்போதும் கலங்கி
கொண்டே இருக்கும்...

கவிதை என் : 2011
காற்றில் கூட நீ
இருக்கிறாய் என்பதை உணர்தேன் 
நீ தூசியை வந்து என்
கண்ணை கலங்க வைத்த போது


மொக்கை என்: 3001
வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?
விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.
வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?
விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்...
அதான் இவ்ளோ...

மொக்கை என்: 3003
ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)
கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

மொக்கை என்: 3004
லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

மொக்கை என்: 3005
தினந்தோறும் எனது பிரார்த்தனை...
எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்
அது போதும் எனக்கு...

மொக்கை என்: 3006
ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?
ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்

மொக்கை என்: 3007
எப்படி "ANGRY"
இனிப்பாக மாற்றுவது?

"J"
சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

இது ஒரு விற்பனையாளரின் கதை!!!

ஒரு ஏமாற்றமடைந்த
குளிர்பானம் விற்பனையாளர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பி
வருகிறார்.

அவரது நண்பன் அவரிடம்
நீங்கள் அராபிய நாடுகளில் வெற்றி அடையாததற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

அதற்கு அந்த
விற்பனையாளர் எனக்கு அராபிய நாட்டிற்கு மாற்றம் கிடைத்த பொழுது நான்
மிகவும் சந்தோசம் அடைந்தேன். எப்படியாவது அந்த நாட்டில் வெற்றியை
நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

ஆனால் எனக்கு அதில்
பிரச்சனை இருந்தது. அது என்ன என்றால் எனக்கு அராபிய மொழி தெரியாது.
இருந்தாலும் நான் மனம் தளரவில்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. படத்தின்
மூலமாக சொன்னால் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தில் மூன்று விளம்பர
படங்களை தயார் செய்தேன்.

முதல் படத்தில் ஒரு
மனிதன் பாலைவனத்தில் மிகவும் களைத்து, தள்ளாடிய நிலையில் மயக்கம் அடைவது
போலவும்.

இரண்டவது படத்தில்
அந்த மனிதன் எங்களது குளிர் பானத்தை அருந்துவது போலவும்

முன்றாவது படத்தில்
அந்த மனிதன் மிகவும் புத்துணர்வுடன் நடப்பது போலவும் 

தயார் செய்து அதை
அனைத்து இடங்களிலும் பிரபலம் அடையச் செய்தேன்.

அதற்கு அந்த
விற்பனையாளரின் நண்பன் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்க வேண்டுமே
என்று கேட்டான்.

அதற்கு அந்த
விற்பனையாளர் என்ன சொல்லி இருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா...































விற்பனையாளர்
கூறியதாவது: நீ சொல்வது சரிதான்... எனக்கு அராபிய மொழி தெரியாது.
அதுமட்டும் அல்ல அராபிய மக்கள் வலது புறத்தில் இருந்து இடது புறமாக
படிப்பார்கள் என்பதைக் கூட நான் அறியவில்லை!!!!

Friday, July 2, 2010

பொருத்தமான வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

வ்வொருவரும் தன்னுடைய வாழ்வில் யாரேனும் ஒருவரை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் தன்னுடைய குணம், ரசனை, எண்ணம், லட்சியம் போன்றவைகளுக்கு ஏற்ப வழிகாட்டியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். உதாரணமாக அழகை விரும்பாதவர்கள் கிடையாது. பெண்களாக இருந்தால் ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு, தமன்னா, இலியானா, நயன்தாராவையோ, ஆண்களாக இருந்தால் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான், சூர்யா, மாதவன், பரத் போன்றவர்களையோ வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்கிறார்கள்.

வெளுத்தது எல்லாம் பால் அல்ல என்ற உண்மையை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவரின் புறத்தை மட்டமல்லாது, அகத்தையும் ஆராய்ந்த பின்னரே வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜிதேந்திரா நாக்பால் என்பவர் ஒரு வழிகாட்டியைத் தேர்ந்தெடுக்கும்போது 5 விஷயங்களை மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

* தன்னம்பிக்கை: 'ஒருவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான கை தன்னம்பிக்கை' என்று குறிப்பிடுவார்கள். தன் மீதும், தன்னுடைய செயல்பாடுகள் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றி பெற முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்க நினைத்திருக்கும் நபர் தன்னம்பிக்கை உடையவரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* அறிவு: தன்னுடைய தொழில் குறித்தும், உலக விஷயங்கள் குறித்தும் அறிந்தவராக இருக்க வேண்டும். 'எனக்கு எல்லாம் தெரியும்' என சிலர் ரீல் விடுவார்கள். இதைப்போன்று 'படம் ஓட்டுபவர்களை' தேர்ந்தெடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

* தனித்தன்மை: சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்து, அதில் ஒருசில மாற்றங்களை மட்டும் செய்து தன்னுடையதாக விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு இல்லாமல் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு, அதன்படி நடப்பவராக இருக்க வேண்டும்.

* இரக்கம்: மற்றவரிடம் அன்பு காட்டும் குணமும், இரக்க மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் மனிதக் குணங்களில் முக்கியமானது பிறர் மீது அன்பு செலுத்துவது. எனவே, யாரிடமும் பாகுபாடு காட்டாமல் அனைவரிடமும் அன்புடன் பழகுபவராக இருக்க வேண்டும். 

* தனித்திறமை: நீங்கள் எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறீர்களோ, அந்தப் பாதையில் சிறந்து விளங்கும் ஒருவரையே வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் சிறந்த பாடகராக வேண்டும் என்றால் மிகச்சிறந்த பாடகர் ஒருவரை உங்களுடைய வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கலாம்.

மேற்கண்ட குணங்களைக் கொண்ட ஒருவரை நீங்கள் உங்களுடைய வழிகாட்டியாகத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். எனவே, வழிகாட்டியைத் தேர்வு செய்யும்போது விழிப்போடு இருங்க.