Thursday, December 22, 2011

கொலை வெறி பாடல் அராபி மூலம்

கொலை வெறி பாடல் அராபி மூலம் 



பிரபலம் நடித்த நாடகம் 

Monday, December 19, 2011

பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ரசித்தவை!


1) கிராபிக்ஸே இல்லாமல் எப்படி முழு படமும் எடுத்தார்கள்? 
    பார்த்துவிட்டு கிங்காங் இயக்குனர் குழப்பம்.! @ thoatta 

2) மனைவியை ஊருக்கு அனுப்ப ரயில் நிலையம் வரும் ஆண்கள் எனக்கு சிவாஜியாக தெரிகிறார்கள் # கண்ணுல சோகம்.. உள்ளுக்குள்ள உற்சாகம் .. உலக நடிப்புடா சாமி ! @g_for_guru

3) தூக்கம் : அலாரம் அடிக்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது வருவது @ kgjawarlal 

4) துணிக்கடைகளில் இருக்கும் பெண் பொம்மைகளுக்கு கூட ஆபாசம் தேவை படுவது ஏனோ @soniaarun 

5) தற்போது பலரால் பேசப்படும் இரண்டு விஷயங்கள்.. 1. ஐஷ்வர்யா ராயின் டெலிவரி 2. ஐஷ்வர்யா தனுஷின் கொலவெறி..!!! @@Its_ArunS

6) ஏழாம் அறிவு சரித்திர படம்! ஆனா வேலாயுதம் ஒரு சரித்திரமே நடிச்ச படம்! # கொலைவெறி விஜய் ஃபேன்ஸ் கிளப்"@athisha 

7) ஒஸ்தி படத்தில் சிம்புவின் போலீஸ் கெட் எப் ஐ பார்க்கும் போது சன் டிவி மலரும் மொட்டும் நிகழ்ச்சிக்கு வந்த சிறுவன் மாதிரி இருக்கு @kanapraba


8) நல்ல வேலைக்காரன் தான் நன்றாக வேலை செய்வதாக நம்புகிறான்:
திறமையான வேலைக்காரன் அவன் நன்றாக வேலை செய்வதாக மற்றவர்களை நம்ப வைக்கிறான். @thoatta

9) ராமராஜன் நடிச்சபடம் வில்லுப்பாட்டுக்காரன்.அத பாத்துபுட்டு செத்துபோனான் எங்கஊட்டுக்காரன் @thirumarant

10) கஷ்டப்படாம இருக்கணும்னா கஷ்டப்படணுமாம்! 
ஆனா ஜாலியா இருக்க ஜாலியா இருந்தா போதும்!! @ oruththan


11) நடுநிசி நாயும்…! குடிகாரன் வாயும்…! சும்மாவே இருக்காது போல 
# ஒரே பெனாத்தல். @NavneethTamizh


12) இந்தியாவில் வேகமாய் அழிந்துவரும் உயிரினங்கள், புலி, யானை, மற்றும் தமிழக மீனவன்.! @thoatta


13) 6மாசபயணத்தில் செவ்வாய்கிரகம் செல்ல பயிற்சி பெறும் விண்வெளி வீரர்கள்:.. எங்காளுங்க சரக்கு அடிச்ச‌ 10 நிமிஷத்திலயே செவ்வாய்க்கு போய்டுவாங்க.@AjayT20 

14) பணத்தை துரத்தும் மனிதர்கள் தனக்கு பின்னால் தன் குடும்பம் வருவதை கூட மறந்து ஓடுகின்றனர். @7thsense7 

15) தோளுக்கு மேல் வளர்ந்தவனை அடிப்பதே தவறு,
      இப்படி வெட்டலாமா? # மரம் @Friend_Spaul 

16)நல்ல குடும்பத்து பெண்கள் காதலில் விழுவதில்லையாமே ? அப்போ ,என் காதலி குடும்பம் அவ்வளவு கேவலமானதா ? @udanpirappe 

17) பணம், நேரம், உணவு, தூக்கம், சிரிப்பு இவற்றை எல்லாம் தியாகம் செய்பவர்களை துறவி, முனிவர் என்றார்கள்.
இப்பொழுது "BOY FRIEND " என்கிறார்கள். @urmoorthy 

18) வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எழவுக்கு வரும் அளவிற்கு நல்ல காரியத்திற்கு வருவதில்லை. @araathu

19) பட்டினிக்கும் உண்ணாவிரதத்திற்கும் உள்ள வித்தியாசம் :
அழுக்கு சட்டை – வெள்ளை சட்டை ! @ krpthiru

20) நாம் மாறும்போது தானும் மாறியும், நாம் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. 
அதற்கு நம் நிழலே போதுமே! @4urc 

21) காசு இல்லாட்டி ஒண்ணுமே வாங்க முடியாதாமேன்னா கடன் வாங்கலாமேங்கறான் பக்கத்து டேபிள் கடங்காரன்.! @minimeens 

22) காலையில் மனைவி திட்டியதற்கு நானும் பதிலுக்கு பயங்கரமாக திட்டிவிட்டேன்- ஆபிஸ் ப்யூனை. @naiyandi

23) L போர்டு ஸ்டிக்கர்னாலும் சூப்பர் ஸ்டைலா டிஸைன் பண்ணி கார்ல ஒட்டீருக்கீங்க பாஸ்! நல்லாருக்கு! என்றேன்!
முறைத்தான்! லயன்ஸ் கிளப்பாம்! :-) @RajanLeaks 

24) நகரத்தில் அறிவாளியாக இருப்பதை காட்டிலும் கிராமத்தில் வெகுளியாக இருப்பதை விரும்புகிறேன் – நிம்மதி @naiyandi

25) எல்லோருமே நேர்வழியில வந்திருந்தா உலகம் இவ்வளவு முன்னேறியிருக்காதோ, என்னவோ..

26)ஏஷியன் பெயின்ட்ஸ் லையே இல்லாத வண்ணங்கள்..பியூட்டி பார்லர் ல இருந்து வர்ற பொண்ணுங்க முகத்துல..ஏன் இப்படி… @thirumarant 

27) make money னு ஒரு பக்கி mail அனுப்புது.. ஒரு வேல கள்ள நோட்டு அடிக்க சொல்லி கொடுப்பானுவளோ ???

28)அன்று தாலாட்டைகேட்டு தாய்ப்பாலை குடித்து குழந்தைகள் வளர்ந்தன! 
இன்று டப்பாங்குத்து பாடலைகேட்டு டப்பாபாலை குடித்து குழந்தைகள் வளர்கின்றன!

29)தமிழ்நாட்டுல கரண்ட் பில்ல ஆன்லைன்ல கட்ட வசதி இருக்கு, But..Computer ஆன் செய்ய தான் கரண்ட் வசதி இல்லை..என்ன கொடும சார் இது @Prabu_B 

30) வாகனம் ஓட்டுதல் என்கிறது ஒரு கலை! எந்த மொடல் வாகனமாவே இருந்தாலும் ஓட்டுறவன் கைலதான் அதோட அழகே! @Me_Newton

31) சச்சின் சதத்தை எட்டவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். 94 அடித்ததற்காக எவருக்கும் பாராட்ட தெரியவில்லை! @YesTN

32) தன் மனைவி ஐஸ்வர்யாவின் படம் எடுக்கும் ஸ்டைலை பார்த்துவிட்டு தான் தனுஷ் 'ஒய் திஸ் கொலைவெறி' பாடலை பாடி இருக்க வேண்டும்.!@ thoatta


33) எந்த பெண்ணாவது காதல் தோல்வியால் கவிதை எழுதியது உண்டோ???? @Prabu_B

34) உன் மௌனம்தான் என்னை கொல்லும் முதல் ஆயுதம் !!!
வேலாயுதம் கூட இரண்டாவது இடம்தான் !!!

35) அடப்பாவிகளா.. 'my' அப்படீன்றதே ரெண்டு எழுத்து. அதையும் சுருக்குறேன்னு 'ma' அப்படீன்னு மாடு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க!
@mayavarathaan 


36) புரட்சியாளர் ஆவதற்கு எளிய வழி புரிஞ்சது, புரியாதது எல்லாவற்றையும் கண்டபடி விமர்சனம் செய்யணும்.@arasu1691 


37) செல்லில் காதலர்கள் எஸ்ஸெம்மெஸ் அனுப்பிக்கொள்ளும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
ஒருநாள் மொபைல் வழியாகவே அவர்கள் ஜூனியர்ஸ் குதித்து வரக்கூடும்.@ iParisal 

38) ரோட்ல இறங்கினா பொண்ணுங்க செல்லை காதுல வெச்சுக்க ஆரம்பிச்சுடறாங்க' என்று திட்டாதீர்கள். எதிர்முனையில் இருப்பது உங்கள் மகனாக இருக்கக்கூடும்.@iParisal 


39) நேற்று சினிமாவிற்கு ஒரு பெண்ணோட வந்திருந்தியே அவள்தான் உன் காதலியா? 
காலைக்காட்சியா……….மாலைக்காட்சியா..? @ 4urc 

40) கிரிக்கெட்டில் உலகசாதனை என்று சொல்றாங்களே விளையாடுவது பத்து நாடு…இதுல சாதனை செஞ்சா எப்படிய்யா உலகசாதனை ஆகும்! # டவுட்டு @kusumbuonly..

விகடன் 


 
படம் 
மதுரங்குளி, விருதோடை கிராமத்தில் அமைந்துள்ள அல் பாஸ் (Al – Bas) சர்வதேச பாடசாலை.


Thursday, December 15, 2011

இ(ம்சை) மெயில் வேண்டாமே!




 இன்றைய தகவல் தொடர்பில் முக்கிய மற்றும் முதல் இடத்தை பிடித்திருப்பது இ- மெயில் என்றால் மிகை இல்லை. காரணம், இதை கையாளுவதும் எளிது. 
பாதுகாப்பதும் எளிது. கூரியர், தபால், போன், எஸ்.எம்.எஸ். போன்ற தகவல் 
சாதனங்களை விட செலவு மிகக் குறைவு. மேலும், போன்கள் மூலமும் மெயில் 
பார்ப்பதும், பதில் அளிப்பதும் சுலபமாகி இருக்கிறது என்பதால் அதன் பயன்பாடு
ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

மெயிலில் விஷயங்களை - விவரங்களை பரிமாறிக் கொள்ளும் போது சில நுணுக்கமான விஷயங்களை கவனித்து செயல்படுவது அவசியம்.

காரணம், இமெயில் என்பது உங்களோடு தொடர்புடையது என்றாலும் அது பல 
நேரங்களில் உங்களையும் உங்களுடன் தொடர்பில் இருப்பவரையும் பாதிப்புக்கு 
உள்ளாக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நமது இமெயில் அடுத்தவருக்கு இம்சை 
தரும் மெயில் ஆகிவிடக்கூடாது.

1 மொழி முக்கியம்

பலர் முழு மெயிலையும் (ஆங்கில) பெரிய எழுத்தில் அனுப்புகிறார்கள். 
இப்படி நீங்கள் அனுப்பினால், யாருக்கு மெயில் அனுப்புகிறீர்களோ அவர்கள் 
மீது கோபமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பலர் மெயிலை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போது உரிய மரியாதை மொழி 
இல்லாமல் அனுப்பிவிடுகிறார்கள். இதை தவிர்ப்பது நல்லது. அனைவரும் மரியாதை 
மற்றும் அன்பை விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

மெயில் அனுப்பும் பலர் எஸ்.எம்.எஸ். சுருக்க மொழி அல்லது தங்கிலிஷ் -ல் 
அனுப்புகிறார்கள். இதை தவிர்ப்பது நல்லது. எதிர் முனையில் உங்களின் மெயிலை 
அதற்குரியவர் படிக்கும் போது, உடன் யார் எல்லாம் இருப்பார்கள் என்று சொல்ல 
முடியாது. மேலும், பணி தொடர்பான, சீரியஸான விஷயத்தை சுருக்க மொழி அல்லது 
தங்கிலிஷில் அனுப்புவதை பலரும் விரும்புவதில்லை. அந்த வகையில் முறையாக நல்ல
மொழியில் உங்கள் இமெயில் இருப்பது நல்லது.



2. CC மற்றும் BCC-க்களை கவனியுங்கள்.

பலருக்கு மொத்தமாக ஒரு குறிப்பிட்ட மெயிலை அனுப்பும் போது பேருக்கு 
மெயிலில் To பகுதியில் மொத்த மெயில் ஐ.டிகளையும் சேர்த்து அனுப்பி 
விடுகிறார்கள். இது இரு வழிகளில் சிக்கலை ஏற்படும்.

முதல் விஷயம்.. நீங்கள் ஒரு மெயிலை நூற்றூக்கானவர்களுக்கு மொத்தமாக To 
பகுதி மூலம் அனுப்பினால், அதை பார்க்கும் நபர், அவரை நீங்கள் நூற்றோடு 
ஒன்றாக சேர்த்துவிட்டதாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், அத்தனை பேரின் மெயில் ஐ.டி.களும் அனைவருக்கும் செல்லும் 
என்பதால் உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் இமெயில் முகவரி, அவருடன் 
தொடர்பில்லாதவர்களின் கைக்கு போய் சேர வாய்ப்பு இருக்கிறது. அதாவது, இதை 
அனைவரும் விரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.

பிறகு எப்படிதான் தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் அனைவருக்கும் சுலபமாக வாழ்த்துகளை அனுப்புவது என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கான பதிலை பார்க்கும் முன் சில அடிப்படை விஷயங்களை பார்ப்பது நல்லது.

மெயில் அனுப்பும் போது யாருக்கு நேரிடையாக அனுப்புகிறோமோ அவருக்கு To 
பகுதி மூலம் அனுப்ப வேண்டும். ஒருவருக்கு மெயில் அனுப்பும் விஷயம் 
தொடர்புடைய இன்னொருவருக்கு தெரிய வேண்டும் என்றால் அதற்கு CC பகுதியை 
பயன்படுத்திக் கொள்ளலாம். CC என்பது Corbon Copy என்பதன் சுருக்கம்.

உதாரணத்துக்கு, ஒரு பிரச்னை தொடர்பாக போலீஸ் கமிஷனருக்கு புகார் கடிதம் 
இமெயில் மூலம் அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதன் நகலை முதல் 
அமைச்சர் சிறப்பு புகார் பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் CC போட்டு 
அனுப்ப வேண்டும். அப்போது இந்த புகார் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க 
வாய்ப்பு இருக்கிறது. அதாவது, மெயிலை பெறும் போலீஸ் கமிஷனர் இதன் நகல் 
முதல் சிறப்பு புகாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை மெயிலில் 
இருக்கும் CC மூலம் தெரிந்துக் கொள்வார்.

மொத்தமாக அதிக எண்ணிக்கையிலான மெயில்களை அனுப்ப வேண்டும். ஆனால், 
ஒருவருக்கு அனுப்பியதை மற்றவர்களுக்கு தெரிய வேண்டியதில்லை என நினைத்தால் 
மெயிலில் இருக்கும் BCC வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். BCC என்பது Blind 
Corbon Copy என்பதன் சுருக்கம்.

3. வேகமான விவேகமான பதில்!!

மெயில் உங்களின் இன்பாக்ஸில் வந்து விழுந்ததும், பதில் கொடுத்துவிடுவது 
நல்லது. அதற்கு Reply என்ற பட்டனை தட்டினால் போதும், யாருக்கு பதில் 
கொடுக்க வேண்டுமே அவர்களின் மெயில் ஐடி உடன் மெயில் தயாராகி விடும். ஒரு 
மெயில் பல கை தாண்டி வந்திருக்கிறது என்றால் Reply to All பட்டனை தட்டினால்
போதும். இது மிக முக்கியம். உங்களின் உயர் அதிகாரி, அவருக்கு கீழ் உள்ள 
இன்னொரு அதிகாரி மூலம் உங்களிடம் ஒரு விவரம் கேட்க சொல்கிறார் அல்லது 
செய்யச் சொல்கிறார் என்றால், அதற்கான பதிலை நீங்கள் இரு அதிகாரிகளுக்கும் 
ஒரே நேரத்தில் Reply to All மூலம் தெரிவித்து விட முடியும்.

அடுத்து மிக முக்கியமான விஷயம்.. சில விஷயங்கள் உணர்ச்சி பூர்வமாக 
அல்லது பிரச்னைக்கு உரியதாக இருக்கும். அது போன்ற நேரங்களில் 'மெயில் 
கிடைத்தது, விரைவில் பதில் அனுப்புகிறேன்' என்று பொத்தாம் பொதுவாக மெயிலை 
மட்டும் தட்டிவிட்டு விட்டு அமைதியாகி விட வேண்டும்.

மேலும், பலர் மெயில் அனுப்பிவிட்டு மெயில் கிடைத்ததா? மெயில் கிடைத்ததா?
என எஸ்.எம்.எஸ். அல்லது போன் மூலம் துளைத்து எடுத்துவிடுவார்கள். நாம் 
வெளியில் எங்கேயாவது இருந்தோம் அல்லது மீட்டிங்கில் இருந்தோம் என்றால் 
சிக்கல்தான். இது போன்ற பிரச்னையை தவிர்க்க 'ஆட்டோ ரெஸ்பான்ஸ்' என்கிற 
வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சுமார் சுமார் இரு மாதத்துக்கு ஒரு 
முறை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வசதி உங்களின் மெயிலில் 
'ஆப்ஷன்ஸ்' என்கிற பகுதியில் இருக்கிறது. இதே போல் ஒவ்வொரு முறையும் 
கடிதத்தை அடித்துவிட்டு உங்கள் பெயர், பதவி முகவரி, செல்போன் எண்ணை 
அச்சடிப்பதற்கு பதில் 'சிக்னேச்சர்' என்கிற ஆப்ஷனை பயன்படுத்தினால், மெயில்
அனுப்பும் போது எல்லாம் இந்த சிக்னேச்சர் விவரம் தன்னிச்சையாக மெயிலில் 
வந்து உட்கார்ந்துக் கொள்ளும்.

4. அலுவலக மெயில் ஐடியை பயன்படுத்தும் போது..!

நீங்கள் பயன்படுத்துவது அலுவலக மெயில் ஐடி என்றால், அது உங்கள் 
நிறுவனத்தின் சொத்து என்பதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். அதிலுள்ள 
விவரங்களை எப்போது வேண்டுமானலும் அலுவலகத்தின் அதிகாரிகள் படிக்க முடியும்.
பாஸ்வேர்ட் உங்களிடம் இருந்தாலும் அதனையும் தாண்டி அவர்கள் அதை பார்க்க 
முடியும் என்பதால் பர்சனல் விஷயமாக யாருக்கும் அலுவலக மெயில் ஐடியிலிருந்து
அனுப்பாதீர்கள். நான் கம்பெனி விஷயத்தை யாருடனும் பகிர்ந்துக் 
கொள்ளவில்லையே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், பர்சனல் விஷயத்தை பகிர்ந்து
கொள்ள அலுவலக மெயில் ஐடியை பயன்படுத்தும் போது அது பல நேரங்களில் பொது 
விஷயமாக மாறி உங்களுக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு இருக்கிறது.

இமெயில் தானே என்று அலட்சியமாக கையாளாமல், கொஞ்சம் கவனத்துடன் இருந்து பிரச்னைகள் எதுவும் வராமல் தடுத்துக் கொள்வோமே !


விகடன்

________________________________
M.S.M ASFAQ
NO.518,
PULUTHIVAYAL,
PALAVI,
SRI LANKA

0094 716757517



--

Saturday, December 10, 2011

CIA உளவு விமானம் ஈரானிடம் எப்படிச் சிக்கியது!

CIA உளவு விமானம் ஈரானிடம் எப்படிச் சிக்கியது!
[ Friday, 09 December 2011, 06:33.50 AM. ]
ஈரான் கைப்பற்றியுள்ள உளவு விமானம், தம்முடையதுதான் என்ற உண்மையை செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் மிகத் துல்லியமான, அதிக பெறுமதிமிக்க இந்த விமானத்தை ஈரானிடம் இழந்திருக்கிறது அமெரிக்கா

விமானம் தற்போது ஈரானிய ராணுவத்தின் வசம் உள்ளது. சி.ஐ.ஏ. உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்கா இழந்துள்ள RQ-170 மாடல் விமானம், வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ. ரகசியமாக உபயோகித்த விமானம். பாகிஸ்தானில் பின்லேடன் மறைந்திருந்த கம்பவுண்டை வானில் இருந்து மாதக் கணக்கில் உளவு பார்த்து தகவல் கொடுத்த விமானமும் இதுவே.

இந்த விமானத்தில் இருந்து கிடைத்த லைவ் வீடியோ ட்ரான்ஸ்மிஷனை வைத்தே, பின்லேடனின் நடமாட்டம் அந்த கம்பவுண்டுக்குள் உள்ளது என்பதை சி.ஐ.ஏ. உறுதி செய்து கொண்டது. பின்லேடன் கொல்லப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரே, அந்த ஆபரேஷனுக்கு RQ-170 உளவு விமானம் உபயோகிக்கப்பட்ட தகவலை சி.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது.

சி.ஐ.ஏ.-க்கு இது மிகப்பெரிய இழப்பு என்பதை சி.ஐ.ஏ. அதிகாரிகளே ஒப்புக்கொள்கின்றனர். RQ-170 விமானம் சி.ஐ.ஏ.-க்கு மிக முக்கியமானது என்ற வகையில் அதன் இருப்பு பற்றியே சி.ஐ.ஏ. ரகசியம் காத்து வந்தது. நீண்டகாலமாக இந்த விமானத்தின் போட்டோக்கள்கூட வெளியே செல்லாதபடி பார்த்துக் கொண்டது. (இன்றுகூட வெளியே உலாவும் போட்டோக்களில் பெரும்பாலானவை கிராபிக் அனிமேஷன்கள். மிகச்சிலவே நிஜமான போட்டோக்கள்!) 
RQ-170 தமது நாட்டுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்தபோது கைப்பற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விமானம் தம்முடையதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், விமானம் ஈரானிய வான்பரப்பில் பறந்ததா என்பதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர். விமானம் கைப்பற்றப்பட்ட தினத்தில் சி.ஐ.ஏ.-யின் ஆபரேஷன் ஒன்றுக்காகவா பறக்க விடப்பட்டது என்ற கேள்விக்கு பென்டகன் பேச்சாளர் ஜோர்ஜ் லிட்டல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

தமது நாட்டு அணு ஆலைகளை உளவு பார்க்கவே விமானம் பறந்ததாக கூறுகின்றது ஈரான்.

இந்த விவகாரத்தில் ஒரு தொழில்நுட்ப தந்திரம் செய்யப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. குறிப்பிட்ட விமானத்தில் இருந்து வருவது போன்ற போலியான சிக்னல்களை சி.ஐ.ஏ. ஏற்படுத்தியதாகவும், அந்த சிக்னல்களின்படி விமானம் ஆப்கானிஸ்தானுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஒன்றுக்காக பறந்து கொண்டிருப்பது போன்ற செயற்கைத் தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

அதன்படி விமானம் ஆப்கானுக்கு மேலாக இருப்பதாக மற்றையவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ஆக்சுவல் விமானம் ஈரானிய வான்பரப்பில் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

இரு தினங்களுக்குமுன் (ஞாயிற்றுக்கிழமை) ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.எஸ்.ஏ.எஃப் (International Security Assistance Force), இதே விமானம் பற்றி தமது செய்திக் குறிப்பில் ஒரு தகவல் வெளியிட்டிருந்தது. மேற்கு ஆப்கான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த RQ-170, காலநிலை காரணமாக திசைமாறிச் சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் குறிப்பு வெளியாவதற்கு முன்னரே, விமானம் ஈரானால் கைப்பற்றப்பட்டதாக இப்போது தெரிய வருகின்றது.

விமானம் ஈரானிடம் இழக்கப்பட்டதையோ, அது ஈரானிய வான்பரப்பில் பறக்க விடப்பட்டதையோ மறைக்கவே, ஐ.எஸ்.ஏ.எஃப் செய்திக் குறிப்பில் இந்த செய்தி இணைக்கப்பட்டதாக இப்போது ஊகிக்கிறார்கள். காரணம், RQ-170 ஆபரேஷன்கள் ரகசியமானவை. அவை பற்றிய விபரங்கள் ராணுவ செய்திக் குறிப்புகளில் வெளியாவதில்லை.

இந்தத் திசைதிருப்பலை ஈரான் எப்படிக் கண்டுபிடித்தது என்பதும், பறந்து கொண்டிருந்த விமானத்தை எப்படி தரைக்கு கொண்டு வந்தது என்பதும் இந்த நிமிடம்வரை மர்மமாகவே உள்ளது.

--


Tuesday, December 6, 2011

37 கோடிக்கு விற்கப்பட்ட ஒட்டகம் !!!

குவைத் : குவைத்தில் பிடோர் எனும் ஒட்டகம் 37 கோடிக்கு விற்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததோடு கின்னஸ் சாதனையாகவும் இடம் பெற்றுள்ளது. இத்தகவலை குவைத்திலிருந்து வெளிவரும் அல்-ஷாஹித் எனும் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இவ்வளவு விலைக்கு விற்கப்படுவதற்கான காரணத்தை ஒட்டகத்தின் உரிமையாளர் கூறும் போது அந்த ஒட்டகம் தனித்துவமானதும் எல்லையற்ற அழகும் உடையதாகும் என்று கூறினார். மேலும் இவ்வொட்டகம் முஸ்லீம்களின் இறை தூதுவரான முஹம்மதும் அவர் தோழர்களும் பயன்படுத்திய ஒட்டகங்களின் வம்சாவழியில் வந்தது என்றும் கூறினார். 

மேலும் இந்த ஒட்டகத்தின் தொகையான 2 மில்லியன் குவைத் தினார்களை (அதாங்க நம்ம ஊர் மதிப்பில் 37 கோடி) பணமாகவே பெற்றுள்ளார். செக் அல்லது டி.டி பெற்று கொள்ள மறுத்து விட்டார். நவீன கார்கள் என்ன ஒரு சிறு சொகுசு ஜெட்டையே வாங்க கூடிய விலையில் ஒரு ஒட்டகம் விற்பனையானது ஆச்சரியமாகவே கருதப்படுகிறது.

Source 


--

இஸ்லாமாபாத் : நம்பினால் நம்புங்கள் ஆனால் நடந்தது உண்மை தான். ஆம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு ஒன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் இருந்து செயல்படும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனல் இத்தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து எல்லை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு பஹவல்புர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பகுதியில் நுழைந்துள்ளது.அக்குரங்கை பிடிக்க மக்கள் எடுத்த முயற்சிகள் தோற்று போனதால் காவல்துறையிடம் மக்கள் புகார் செய்தனர். பின்பு காவல்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில் பஹவல்பூர் வனவிலங்கு துறையினர் அக்குரங்கை கைது செய்து பஹவல்பூர் மிருக்காட்சிசாலையில் அடைத்தனர். 

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவிய புறா ஒன்றை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்து பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பியதாக சொல்லி ஆயுத காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Saturday, December 3, 2011

தற்கொலை செய்யும் பறவைகள்



பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம். இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.




ஆம் நண்பர்களே..! கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவலை பறவைகளின் ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் என்றால் நம்புவீர்களா 1?. ஆம் நண்பர்களே..! புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள்.





உயர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன.



இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


டிஸ்கி.- இப்படியெல்லாம் பறவைகள் தாங்களே கற்களை தின்றுவிட்டு தற்கொலை செய்வது அறிந்துதானோ என்னவோ நம்ம ஊர் நியாயவிலைக் கடைகளில் கல்லைக் கலந்து மக்களை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்களோ...???!!!! என்னக் கொடுமை சார் இது...!!

இந்த தகவலை http://www.panithulishankar.com என்ற தளத்திலிருந்து எடுத்து இங்கு பந்திதேன்



--