நகர வாழ்க்கை

நகர வாழ்க்கை




யமஹா கும் ,பல்சர் கும் போட்டி,ஆனால்
ஜெயித்தது ஆம்புலன்ஸ்!

சிறகில்லாமல் பறக்கலாம்,ஆனால்
கருணம் தப்பினால் மரணம்!

குழந்தைக்கு நிலா சோறு ஊட்டலாம் ,ஆனால்
மெர்குரி வெளிச்சத்தில் பௌர்ணமி தொலைந்து விட்டது!

நிலம் சொந்தமில்லை,ஆனால்
சுவர் மட்டுமே நம் உரிமை-அடுக்கு மாடி குடியிறுப்பு!

அழகிய நீரூற்று! ஆனால்
அதே நீர், வீட்டில் புழங்க,குழாய் வழியாக

வீட்டில் இருந்தபடியே ஏராளமான விளையாட்டுக்கள்,பொழுதுபோக்குகள் ,ஆனால்
கை விரல் நுனியில் தொலை இயகருவியில்(அதானுங்க ரிமோட்)

"அம்மா" என்று என் குழந்தை கூற பூரித்தேன்,அனால்
அது கூறியது என்னை இல்லை,பார்த்துகொண்ட ஆயாவை


வாழும்போதே நரகம்-இந்த மாநகரம்

சொர்ர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா!
வாராது,வாராது ,வரவே வராது !
18082009057.jpg
IMG_0271.jpg