தலைப்பே சரியில்லையே. அட்ரஸ் சொல்ல ஒரு டாக்டரா? அல்லது அட்ரஸே இல்லாத டாக்டரா என்று எண்ண வேண்டாம். இந்த டாக்டர் ஊர் ஒன்றின் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால், உடனே அந்த ஊரின் பெயர், அது உள்ள நாடு எது என்று சொல்லிவிடுவார். இந்திய முகவரியை டைரியில் பார்க்கலாமே என்று சொல்கிறீர்களா? இந்த டாக்டர் ஒன்றல்ல, 246 நாடுகளில் உள்ள ஊர்களுக்கான அஞ்சல் குறியீட்டு எண்ணைக் கொடுத்தால் அதற்கான ஊர் பெயர் தருவார். ஊர், தெரு முகவரி கொடுத்தால், அஞ்சல் குறியீட்டு எண் தருவார். இது அட்ரஸ் டாக்டர் என அழைக்கப்படும் இணைய தளமாகும். இதன் சரியான முகவரி http://www.addressdoctor.com.
இந்திய நகரம் ஒன்றின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு இடப்பட்டிருந்தால், இரண்டின் பெயருக்கான குறியீட்டு எண் கிடைக்கும். மதுரை அருகே உள்ள திருமங்கலம், சென்னை திருமங்கலம் என இரண்டு ஊர்களுக்குமான அஞ்சல் குறியீட்டு எண்ணைத் தந்த போது, மாநிலம், தாலுகா வாரியாக விபரங்கள் கிடைக்கின்றன. இந்த தளமானது தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.
ஆங்கிலம் மட்டுமின்றி, சீனம், ஜப்பானியம் என வேறு மொழிகளைப் பயன்படுத்தித் தேடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. எத்தனை மொழிகள், எத்தனை நாடுகளுக்கான ஊர்களைக் கண்டறியலாம் என்ற தகவல்கள் இதே தளத்தில் தரப்பட்டுள்ளன. கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.