Wednesday, November 24, 2010

ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிக்கும் நடிகைகளுக்கும் என்ன உறவு?

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்.......

ஸ்ரீவித்யா
தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவியாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும், தளபதியில் அம்மாவாகவும் நடித்தார்.

சுஜாதா
அவர்கள் படத்தில் மனைவியாக நடித்த இவர் கொடிபறக்குது, உழைப்பாளி போன்ற படங்களில் அம்மாவாக நடித்தார்

லட்சுமி
நெற்றிக்கண் படத்தில் தந்தை ரஜினிக்கு மனைவியாகவும், படையப்பா படத்தில் அம்மாவாகவும் நடித்தார்.

ஜெயசுதா
அபூர்வராகங்களில் மகளாக நடித்த இவர் பாண்டியனில் அக்காவாக புரமோஷன் பெற்றார்.

விஜயசாந்தி
நெற்றிக்கண்ணில் மகளாக தங்கையாக நடித்து மன்னனில் மனைவியாக உயர்ந்தார்.

மீனா
அன்புள்ள ரஜினிகாந்தில் ரஜினியால் கொஞ்சப்படும் சிறுமியாக நடித்துவிட்டு எஜமான், வீரா, முத்து ஆகிய படங்களில் காதலியாக, மனைவியாக நடித்தார்.
எதிர்காலத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் பாட்டியாகவும், ஸ்ரேயா  ரஜினியின் அம்மாவாகவும் நடிக்க வாய்ப்பிருக்கிறது. அரசியலில் மட்டுமல்ல...சினிமாவிலும் எது வேண்டுமானாலும் நடக்கும்