பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்:- பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்:- கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்:- அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்:- மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்:- அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்:- ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்:- முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்:- வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்:- முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்:- ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்:- சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...