விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை


உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.

நன்றி தினமணி