தலைப்பு படித்ததுமே புரிந்து இருக்கும் இது தைரியமில்லாதவர்களுக்கான பதிவு கிடையாதென்பது,
மூன்றாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் ராஜ துரோகம் செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையே இதுவரையில் வழங்கப்பட்டவைகளில் மிக கொடூரமான மரண தண்டனையாக கருதப்படுகின்றது,அது எந்த அளவுக்கு கொடுரமானதென்று பார்ப்போம்,முதலில் குற்றவாளி தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு குதிரையீன் பின்புறம் கட்டப்பட்டு இழுத்து வரப்படுகின்றான்,பின்பு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் இடப்படுவான்,சாகும் வரையில் கிடையாது பாதி உயிர் போனநிலையில் இறக்கிவிடுவார்கள்,பின்பு உடலின் முக்கியமான பாகங்களை(ஆணுறுப்பு,இதயம்,கல்லீரல்)குற்றவாளி உயிரோடு இருக்கும் போதே வெட்டி எடுத்து தயாராக இருக்கும் நெருப்பில் போட்டு விடுவார்கள்,இதோட விட்டார்களா ?,தலையை துண்டாக வெட்டி விடுவார்கள்,பின்பு உடலை நான்கு துண்டுகளாக வெட்டி ஊரின் முக்கியமான இடங்களில் மக்களின் பார்வைக்கு வைத்து விடுவார்கள்,இந்த உடலை நான்காக பிரிக்க சில சமயங்களில் இரண்டு கைகள்,கால்களையும் நான்கு குதிரையீன் கால்களில் கட்டி நான்கு வெவ்வேறு திசைகளில் பிய்த்துக்கொண்டு ஓடுமாறு செய்வார்கள்,கொஞ்சம் விளக்கமாக பார்க்க இந்த படங்களைப் பாருங்கள்

CannibalHolocaust படம் பார்த்து இருப்பீர்கள்,1980 களில் வெளிவந்து உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியப் படம்,இந்தப் படத்தில் Impalement எனும் முறையை மிகத் தெளிவாக காண்பித்து இருப்பார்கள்,கிரேக்க ரோமானிய காலங்களில் இந்த வகை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது,குற்றம் சாட்டப்பட்டவரின் உடலில் ஒரு நீளமான ஈட்டியை சொருகி விடுவார்கள்,சொருகப்பட்ட ஈட்டி பிறப்புறுப்பில் சொருகப்பட்டு வாய் வரை நீண்டு இருக்கும்,மிக வலி வேதனை தரக்கூடிய முறை,குற்றவாளி மூன்று நாட்கள் கூட உயீர் போகாமல் வலியுடன் இருப்பார்,சில நேரங்களில் குற்றவாளி பெண்ணாக இருப்பின் கற்பழிக்கப்பட்டு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு பின்பு தண்டனை நிறைவேற்றப்படும்,கீழ் உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு தெளிவாகப் புரியும்,
அடுத்தது சீனாவில் 1905 வரை நடைமுறையில் இருந்த ஒரு மரணதண்டனையைப் பற்றி பார்ப்போம்,Lingchi எனப்படுகின்ற ஆயிரம் தூண்டுகளாக வெட்டுதல்,இந்த தண்டனையை ஒரு கத்தியைக் கொண்டே நிறைவேற்றி உள்ளார்கள்,குற்றம் சாட்டப்பட்டவரின் உடலை ஆயிரம் தூண்டுகளாக மூன்று நாட்களுக்கு வெட்டுவார்கள்,கடைசி துண்டு வெட்டும் போதும் கூட உயீர் இருக்கும் மாறு பார்த்துக்கொள்வார்கள்,ராஜ துரோகம் செய்பவர்களுக்கும் தனது பெற்றோரை கொலை செய்பவனுக்கும் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது,பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும், குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்தைப் பொருத்து இந்த தண்டனையை பிரித்துள்ளார்கள்,சிறிய குற்றமாக இருப்பின் முதலில் அவரின் கழுத்தை அறுத்து உயீர் போன பின்பு உடலின் பிற பகுதிகள் வெட்டப்படும்,பெரும் குற்றங்களுக்கு முதலில் கை,தோள்ப்பட்டை,கால் இதுமாதிரி படிப்படியாக வெட்டப்படும்,உயீர் போகாமல் பாகங்களை நீக்குவதற்கு அவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்துள்ளார்கள்,
கிரேக்கத்தில் Brazen Bull எனும் முறை பழக்கத்தில் இருந்துள்ளது,எருது போன்ற வடிவில் பித்தளைனால் செய்யப்பட்ட ஒரு பொருள்,உட்புறம் காலியாக ஒரு பகுதியில் கதவுடனும் இருக்கும்,குற்றவாளியை உட்புறமாக வைத்து வெளியே சூடேற்றுவார்கள்,பித்தளை சூடாகி மஞ்சள் நிறமாகும்வரை இது நடக்கும்,உள்ளே குற்றவாளி சூட்டில் வெந்து இறந்துவிடுவான்,அதன் தலைப்பாகம் சில சிக்கலான குழாய்களால் உருவாக்கப்பட்டு இருக்கும்,இதனால் உள்ளே அலறும் குற்றவாளியீன் அலறல் கூட எருதுவின் சத்தத்தைப் போலவே இருக்கும்,குற்றவாளி இறந்த பின்பு திறந்து எஞ்சி இருக்கும் எழும்பு துண்டுகளை நகைகள் செய்யப் பயன்படுத்துவார்களாம்,
இன்னும் தோலுரித்தல்,கொதிக்கும் எண்ணையில் போடுதல் போன்ற கொடூரமான தண்டனைகள் நிறைய இருந்துள்ளது,இவைகளில் மேலே உள்ளதே கொடுரமானவைகளாக நான் கருதுவதால் அவைகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.
பண்டைய சீனாவில் குற்றவாளிகளுக்கு மேலும் இரண்டு கொடிய மரணதண்டனைகள் கொடுக்கப்பட்டதாக படித்திருக்கிறேன்...
1. குற்றவாளியை நிர்வாணமாகி, பட்டினிப்போடப்பட்ட சுண்டெலிகள் இருக்கும் சட்டியின் மேல் குற்றவாளியின் கால்களை விரித்து உட்காரவைத்து கட்டிவிடுவார்கள். பசியில் இருக்கும் சுண்டெலிகள் ஆசனவாய் வழியாக உள்ளே சென்று குதறிஎடுத்துவிடும். :)))
2. குற்றவாளியை படுக்கவைத்து அவரது நடு நெற்றியின் நேர் மேலாக குளிர்ந்த தண்ணிர் நிறைந்த குடுவையை தொங்கவிடுவார்கள். அதிலிருந்து குளிர்ந்த நீர் சொட்டு சொட்டாக குற்றவாளியின் நடு நெற்றியில் விழும். முதலில் சாதாரணமாக இருக்கும் போகப்போக ஒரு பாறாங்கல் நெற்றியில் விழும் எபக்ட் இருக்குமாம்....குடுவை தண்ணீர் தீரும் வரை இந்த அந்த சித்ரவதையை அணுஅணுவாக அனுபவிக்கவேண்டும்...தண்ணீர் தீரும்போது குற்றவாளி இறந்திருப்பான்...