Saturday, March 30, 2013

ஹலால் உணவுகளும் E இலக்கமும்...!



ஹலால் உணவுகளும் E இலக்கமும்...!
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக ஏ.எஸ். மொஹமட் சப்ரின்)

நாட்டில் அண்மைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான பிரச்சினைகளில் பூதாகாரமாக வெடித்த ஒரு பிரச்சினையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் வழங்கப்பட்டுவந்த / வழங்கப்பட்டு வருகின்ற  ஹலால் தொடர்பான பிரச்சினையை கூறலாம். இப்பிரச்சினையை தொடர்ந்து முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியிலும் பல வகையான ஹலால் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்பட்டிருப்பதை நாம் காணலாம். எந்த அளவுக்கெனில், பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் கூட மாணவர்களின் பிழையான விடைக்கு 'இது ஹராம்' (கூடாதது/விலக்கப்பட்டது) என்று கூறும் அளவுக்கு அந்நிய மதத்திலுள்ள படித்தவர்களுக்கு  மத்தியிலும்  இப்பிரச்சினை சென்றடைந்திருக்கிறது என்பதும் அவர்கள் அது தொடர்பில் தெளிவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது.

எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் எடுக்கப்பட்ட, ஏற்றுமதிப் பொருட்களுக்கு மாத்திரமே ஹலால் இலட்சினை கட்டாயம் என்ற தீர்மானத்தின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் பொருட்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது தொடர்பில் குழப்பநிலை காணப்படுவது தெளிவாகும். இது இவ்வாறிருக்க சமூக வலைத்தளங்களிலும் (social networks) குறுந்தகவல்கள் (SMS) மூலமாகவும் பல வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. ACJU உம் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பரிமாறப்படும் தகவல்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதுதான் E இலக்கங்கள் குறித்த செய்திகள். பல E இலக்கங்களை ஹராம் என்று அடையாளமிட்டு அவற்றை விட்டு விலகி இருக்குமாறு அறிவுரை கூறப்படுகிறது. இவற்றின் உண்மை நிலை எந்த அளவு என்பது தெரியாமலே, ஒரு நல்ல விடயத்தை செய்கிறோம் என்ற அடிப்படையிலேயே பலரும் இவற்றை பகிர்வதை நாம் பார்க்கிறோம். இவ் E இலக்கங்கள் குறித்தும் அவற்றின் உண்மை நிலை குறித்தும் சிறிது ஆராய்ந்து அதன் பின்னர் அவற்றை பகிர்வதே பொருத்தமான முறையாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாக) பேசுவது, அதிகமாக (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்கு தரவேண்டியதை) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதை) தருமாறு கோருவது, அன்னையரை புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்கு தடை விதித்து வந்தார்கள். (புஹாரி 6473).

இவ்வடிப்படையில் அண்மையில் முகப்புத்தகத்தில் (facebook) பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படமே கீழே தரப்பட்டிருக்கும் புகைப்படமாகும். அதில் கூறப்பட்டுள்ளவாறு அவை அனைத்தும் பன்றிக் கொழுப்பின், அதாவது animal triglyceride இன் அடையாளங்கள் தானா என்பது குறித்து பார்ப்போமாயின்,
முதலில், இவ் E இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமைக்கு, பலரும் பல விதமான கருத்துக்களையும் காரணங்களையும்  தெரிவிக்கின்ற போதிலும் E இலக்கத்தை வழங்கும் ஏக நிறுவனமான ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணைக்குழுவின் (Europian food safety authority) உத்தியோகபூர்வ கருத்துப்படி உணவு சேர்மானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இலகுத்தன்மைக்காகவுமே இவ் E இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

E இலக்கம் வழங்கும் பொறிமுறையில் E100 தொடக்கம் E199 வரையான இலக்கம் உணவில் சேர்க்கப்படும் நிற வகைகளுக்கும் (colours) E200 தொடக்கம் E299 வரையான இலக்கம் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் (preservatives) சேர்மானங்களுக்கும் E 300 தொடக்கம் E 399 வரையான இலக்கம் ஆண்டியாக்ஸிடண்ட்கள் (antioxidants) சேர்மானங்களுக்கும் E 400 க்கு மேற்பட்ட இலக்கங்கள் மற்றைய வகை (stabilizers, emulsifiers போன்ற) சேர்மானங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

இப்போது மேலே காணப்படும் புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு E இலக்கத்தினையும் அவை எதை குறிக்கின்றது, உண்மையில் அவை பன்றிக் கொழுப்பின் அடையாளங்கள் தானா என்பதை பார்ப்போமாயின்,

E 100 :- இது செம்மஞ்சள், மஞ்சள் நிறத்தை தருவதற்காக பயன்படுத்தப்படும் curcumin என்ற நிறப்பொருளாகும். curry, processed cheese, fish fingers போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இவ் நிறப்பொருலானது மஞ்சள் தாவரத்தின் (turmeric plant) கிழங்கிலிருந்து (rhizome) பிரித்தெடுக்கப்படுகிறது.

E 110 :- மஞ்சள் நிறத்தை தரக்கூடிய sunset yellow FCF அல்லது orange yellow S எனும் நிறப்பொருளாகும். powdered soup, yoghurt, confectionary, jam போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்நிறப்பொருள் இரசாயன செய்முறை (synthetic) மூலம் பெறப்படுகிறது. 4-aminobenzene suphonic acid, hydrocholoric acid, sodium nitrite or sulphuric acid மற்றும் sodium nitrite போன்ற இரசாயனங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்நிறம் தயாரிக்கப்படுகிறது.

E 120 :- இயற்கையான சிவப்பு நிறத்தை தரக்கூடிய cochineal அல்லது carminic acid அல்லது carmines எனப்படும் நிறப்பொருளாகும். alcohol பானங்கள்,carbonated drinks, soup, desserts போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்நிறப்பொருள் மத்திய அமெரிக்கா, ஆபிரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெருமளவில் வர்த்தகரீதியாக Dactylopidea coccus எனப்படும் ஒரு வகை பெண் வண்டின் உலர்ந்த உடல் பகுதிகளிலிருந்து alcohol ஐ அகற்றியதன் பின்னர் cochineal பெறப்படுகிறது. வியாபார ரீதியில் நிறமூட்டும் பொருளான carminic acid ஆனது அம்மோனியம்,பொட்டசியம், சோடியம் போன்ற நேர் அயான்களுடன் இணைத்து விற்பனைக்கு காணப்படுகிறது.

E140 :- பச்சை நிறத்தை தரக்கூடிய chlorophylls மற்றும் chlorophillins எனப்படும் நிறப்பொருளகும். பச்சை நிறத் தாவரங்களில் ஒளித்தொகுப்புக்கு (உணவு உற்பத்தி) பொறுப்பான பச்சையவுருவ மணியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இப்பொருளானது முழுக்க முழுக்க தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவதுடன் confectionary, jams, soups, chewing gum போன்ற உணவுப்பொருட்களில் பாவிக்கப்படுகின்றது.

E141 :- எண்ணெய் பொருட்களில் கரையக் கூடிய செம்புடன் கலந்த chlorophyll (Cu) ஆகும் (copper complexes of chlorophyll and chlorophyllins).

E153 :- vegetable carbon என்று அழைக்கப்படும் கருப்பு நிற நிறமாக்கி ஆகும். jams, fruit juices போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இப்பொருள் தாவர மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

E210 :- நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய Benzoic acid எனப்படும் preservative ஆகும். ஆய்வுகூட நிபந்தனைகளில் சோடியம் ஐதரொக்சைட், நீர், எதனோல், மற்றும் எதைல் பென்சோஏட் (ethyl benzoate) போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

E213, E214, E216 :- முறையே, நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுக்கக்கூடிய Calcium benzoate, ethyl p-hydroxybenzoate, propyl p-hydroxybenzoate  எனப்படுகின்ற preservatives ஆகும். இவை ஆய்வுகூட நிபந்தனைகளில் இரசாயனங்களை  பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.

E234 :- பால் உற்பத்திப் பொருட்களில் காணப்படுகின்ற Lactococcus lactis எனப்படும் பக்டீரியா இனால் உற்பத்தி செய்யப்படுகின்ற polypeptides எனப்படும் நொதியத்தை (enzyme) ஒத்த பொருளாகும். நுண்ணங்கிகளின் வளர்ச்சியை தடுப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

E252 :- மாமிசப் பொருட்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப் படும் potassium nitrate எனப்படும் உணவுச் சேர்க்கை ஆகும். இது ஒரு ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்படும் இரசாயனப் பொருள் ஆகும்.

மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் E இலக்கங்களின் இயற்கைத் தன்மையையும் அவை பிரித்தெடுக்கப்படும் விதத்தினையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது இவை எதுவும் பன்றிக் கொழுப்பு இல்லை என்பது தெளிவாகிறது. அதிலும் E 120 எனப்படும் உணவுச் சேர்மானம் மட்டுமே ஒரு வகை வண்டிலிருந்து பெறப்படுவதும் ஏனையவை பல தாவரப் பொருட்களாகவும் இரசாயனச் சேர்க்கைகளகவும் காணப்படுகின்றது.

நாம் இவ்வகையான தகவல்களை பகிரும் போது, எம்மால் முடிந்த ஒரு நல்ல வேலையை செய்கிறோம் என்ற நோக்கில் செய்கின்ற போதும் ஒரு வதந்தியை பரப்புவது பாவமான காரியமாகும். எனவே, ஒரு விடயத்தை பகிரும் முதல் அது பற்றிய உண்மை நிலையை அறிந்த பின்னரே அதை பகிரும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுவோம்.
நன்றி jaffnamuslim.com

Wednesday, March 27, 2013

ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்பு குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து

நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை..!
இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.

ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.


இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.


பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் & ஜோன்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!




Monday, March 25, 2013

Do not get cheated by fake images.

Do not get cheated by fake images.

பொதுபல சேனாவுக்கு உதவப்போகும் மொபிட்டல்..!

  பொதுபல சேனாவுக்கு உதவப்போகும் மொபிட்டல்..!
[மொபிடல்] பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ பாடலை அவர்களது ரிங்க் டோன் லிஸ்டில் செர்த்து அதனால் கிடைக்கும் பணத்தை இனவாதிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. எமக்கு அந்தப்பாடலில் எந்த பிரச்சினயையும் இல்லை.. ஆனால் பணம் வழங்குவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்???
மொபிடெல் பாவனையாளர்கள் அவர்களது வாடிக்கையளர் நிலையத்தை தொடர்பு கொண்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...
பாடலில் ஒரு வித பிரச்சினயையும் இல்லை, ஆனால் ஏன் அப்பணத்தை அவர்களுக்கு வழங்குவது? அப்படியாயின் நாமும் ஒரு பாடலை அல்லது எதாவது ஒன்றை தந்தால் எமக்கும் அவ்வாறு தருவீர்களா என்று கேளுங்கள்...
இது நிறுத்தப்படாவிடின் நாம் வேறு ஒன்றை தெரிவு செய்ய வேண்டி வரலாம் என்றும் சொல்லுங்கள்..
We Have No Objection in the Song but How Can You Fund to a Group??? Please Share!!

Saturday, March 23, 2013

அடுத்த தேசத்துக்கு மகுடம் கண்காட்சி புத்தளம், சிலாபம் பகுதியில்

அடுத்த வருடத்திற்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி புத்தளம், சிலாபம் பகுதிகளின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அப்பிரதேசத்தில் இடம்பெறுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்துள்ளார்.

அம்பாறையில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில்...

நாட்டு மக்கள் அனைவரும் பேதங்களை களைந்து தேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 30 வருட யுத்தினால் நீங்கள் பட்ட கஷ்டம், வேதனையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. எல்லோரும் அச்சமின்றி வாழ முடியும். கிழக்கில் அபிவிருத்தி வேலைகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன. கிழக்கின் உதயம் உங்களின் உதயம். அது உங்களினதும் உங்களது பிள்ளைகளினதும் எதிர்காலமாகும். 

இந்த தேசத்திற்கு மகுடம் மூலம் கிழக்கு மாகாணம் நீங்கள் எதிர்பாராத வகையில் இன்னும் இன்னும் அபிவிருத்தி காணவுள்ளது. இதனையெல்லாம் நீங்கள் அனுபவிக்க வேண்டும். உங்களது பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்.

பொய் பிரசாரங்களை ஒருநாளும் நம்ப வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரும் இன, மத, மாகாண பேதம் எதுவும் இல்லாமல் நாம் ஒன்றாக வாழ வேண்டும். சமாதானமாகவும் ஒரு தாயின் பிள்ளைகள் போலவும், சம உரிமைகளோடும் வாழ வேண்டும்.

எனவே நாட்டில் சமதான சகவாழ்வும் அபிவிருத்தியுமே முக்கியமானது. அதுதான் அவசியமும் எமது தேவையுமாகும் என்றார்.

கண்காட்சி இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய வரவேற்றார். இதனையடுத்து மூவின மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இங்கு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

ஒரு இனிமையான கிராத்!!


Thursday, March 21, 2013

பொது பல சேனாவுக்கு நன்றிகள்

(அப்துல்சலாம் யாசீம்) 
தற்போது இலங்கையில் ஹலால் ஒழிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்கள் அணியும் ஹபாயாவை தடைசெய்ய முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை நடாத்தி வரும் பொது பலசேனாவுக்கு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக முஸ்லிம்  வாலிபர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
ஹலால்,ஹபாயா போன்ற விடயங்கள் முஸ்லிம்களுக்கு வெற்றியே தவிர தோல்வி இல்லை. தோல்வியடைவது பொது பல சேனாவே தான்! காரணம் ஹலால் விடயத்தில் சில மார்க்க அறிவு அற்றவர்கள் ஹலால்,ஹராம் என்று விளங்காமல் சந்தையில் கிடைக்கும் பொருற்கள் அனைத்தையும் வாங்கி சாப்பிட்டார்கள். இருந்தபோதிலும் ஹலால் தடை செய்யப்பட்டதன் பின்னால் எங்களது உணவில் ஹராம் கலந்து விடுமோ என்று ஆராய்ந்து சாப்பிடக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த எதிர்ப்பை காட்டிய பொது பல சேனாவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எங்களது இறைவன் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு யாரும் அநியாயம் செய்தால் அவர்களுக்கு நீங்கள் அநியாயம் செய்ய வேண்டாம்.உங்களுக்கு எதிராக ஏதாவது ஒரு விடயத்தில் எதிர்ப்பு காட்டினால் அவ்விடயத்தின் மறுபக்கத்தில் நான் நலவையே வைத்திருக்கின்றேன்.அதற்கு உதாரணமாக ஹலால் சான்றிதழ் விளக்கப்பட்டமையாகும்!
இரண்டாவதாக ஹபாயா விளக்கல் கோசத்தின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு நன்மையே அதிகமாகும்.இதற்கான காரணம் இஸ்லாமிய சரீஆ சட்டப்படி ஒரு பெண் ஆணின் துனையின்றி வெளியே செல்லக்கூடாது. இருந்தும் கடந்த காலங்களில் பெண்கள் மற்றும் யுவதிகள் தனிமையில் பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்தார்கள். ஹபாயா பிரச்சனையை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாக தற்பொழுது அனைத்து பெண்களும் தனிமையில் பிரயாணம் செய்ய பயப்படுகின்றார்கள். பெண்களும் சரீஆ சட்டப்படி பிரயாணம் செய்வதற்கு வழிபிறந்துள்ளது.
இளம் யுவதிகள் தனிமையில் பாடசாலை,பிரத்தியேக வகுப்புக்களுக்கு தனிமையில் செல்வதற்கு பயப்படுகின்றார்கள்.இதனால் பெற்றோர்களுடனோ அல்லது கூலிக்கமர்த்தப்பட்ட வாகனத்திலோ மரியாதையாக சென்று வருவதற்கு பழக்கப்படுகின்றார்கள்.அன்று பிரயாணம் செய்த சில பெண்கள் பஸ் வண்டியினுள் எல்லோருடனும் சரளமாக பேசிக்கொண்டு  பிரயாணத்தை மேற்கொண்டார்கள். ஆனால் தற்பொழுது அந்த நிலைமை மாறி வருவதை உணரக்கூடியதாக உள்ளது.
தேவையற்ற ஆண்கள் பேசினாலும் பேசாமல் செல்லக்கூடிய நிலைமை உண்டாகின்றது. ஏனென்றால் சில மதவாதிகள் பிரச்சனை உண்டாக்கி விடுவார்களோ அல்லது மரியாதையை குறைத்து விடுவார்களோ என்றொரு பயத்தினால்  சரீஆ சட்டம் சொல்லக்கூடிய முறையில் இஸ்லாமிய பெண்ணாகவே பயணம் செய்யக்கூடிய  நிலைமைக்கே ஆளாகின்றனர். பொது பல சேனா இதையொரு எதிர்ப்பாக அடக்கு முறையாகவே கையாண்டது. ஆனால் இது முஸ்லிம் சமூதாயத்திற்கு மறுபுறத்தில் நன்மையையே பயக்கின்றது.
இப்படியொரு நிலமை ஹலால் விடயத்திலும்,ஹபாயா விடயத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்று விளங்கியிருந்தால் இதை எதிர்த்திருக்க மாட்டார்கள். 
முஸ்லிம்கள் அவர்களது அல்லாஹ் எந்த எதிர்ப்பிலும் வெற்றியை வைத்திருக்கின்றான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள்.இந்த நம்பிக்கையை எங்கள் இறைவன் அல்லாஹ் அவர்களுக்கு நிருபித்து காட்டிவிட்டான். அல்லாஹ் இல்லையென பொது பல சேனா  விமர்சித்தாலும் இதுதான் அல்லாஹ்வின் சக்தி என்று எதிர்ப்பின் மூலம் பொதுபல சேனாவுக்கு காட்டிவிட்டான் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 20, 2013

நான் ஒரு வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?

இந்தியரும் அமெரிக்கரும் ஒரு சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர். அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர். 
அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து இந்தியரிடம் காட்டி, ‘நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! பார்த்தியா யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?.. என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல் உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா? என்று சவால் வேறு விட்டார் இந்தியரிடம். 

விடுவாரா இந்தியர். ‘.உள்ள வா. உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்த பையனிடம் சென்ற இந்தியர், அவனிடம் கேட்டார், நான் ஒரு வித்தை காட்டுறேன் பார்க்கிறியா?..

பையனும் சரியென்று தலையாட்ட கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3-வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த பையனை ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்த பையன் கேட்டான், ‘எல்லாம் சரி. இதில் வித்தை எங்கே இருக்கிறது?.’

இந்தியர் அமைதியாக பதில் அளித்தார், இப்போ ‘என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு. நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்.’

ஹா.. ஹா.. ஹா.. யாருகிட்ட.. எப்படி நாம்ம ஆளுக…(பேஸ்புக்கில் படித்தது)

Tuesday, March 19, 2013

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள். தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!
காஸ்மீரில் என்ன நடக்குது என்றே நம்மில் பலருக்கு தெரியாது .பல உண்மைகளை குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கும் ஊனமான ஊடகமே .விக்கிலீக்ஸ் அங்கு நடந்த அநியாயங்களை அட்டுழியங்களை அம்பலபடுத்தியது குறிப்பிடதக்கது . இதற்க்கு எல்லாம் காரணம் கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்

பெண்களைப் கைது செய்து தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம், புதிய ஆயுதங்களை பரிசித்து பார்க்க இந்த மக்களை கொல்லலாம். இன்னும், இன்னும்.எது வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் கேட்க மாட்டார்கள் இந்தியாவை எந்த மேற்குலக அரசும் அது பற்றி கேட்காது எவர் தமக்காக பேசாவிட்டாலும் வீரச் செருக்குடன் வீதியில் இரங்கி போராடும் மக்கள் மனம் உடைந்து விடவில்லை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி என்ற பட்டியலில் இருந்து கஷ்மீரை நீக்கினாலும் கஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை எதுவும் செய்து விடாது

ஆசியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது. ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு, காணும் இடமெல்லாம் மரண ஓலங்கள் காணும் இடமெல்லாம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் படுகொலைகள்

உலகின் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் பாரிய இனப்படுகொலையை இந்திய இராணுவம் சத்தமின்றி நிகழ்த்தி வருகிறது.

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது; என்னை கொன்று விடுங்கள்’ என்கிறார் அவர். அந்த இராணுவ சிப்பாயின் வன்புணர்வுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் தன் உடைகளைக் களைந்து கொண்டே, ‘உன் ஆசைப்படியே நடக்கட்டும்’ என அவருடைய நெற்றியில் தானியங்கித் துப்பாக்கியை வைத்துச் சில சுற்றுகள் தோட்டாக்களை செலுத்துகிறான். தன் காரியத்தைத் தொடர்கிறான்”.

இதுபோன்ற ஓராயிரம் கதைகளை, காஷ்மீர் சென்று வந்துள்ள மனித உரிமைக் குழுக்கள் பதிவு செய்துள்ளன. இந்தச் சம்பவம் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவமும் அதன் துணைப் படைகளும் நாள்தோறும் காஷ்மீரில் வாடிக்கையாக நடத்தும் அட்டூழியங்களில் ஒன்றுதான் மேலே பதிவுசெய்யப்பட்ட சம்பவம்.

1989-2009 வரையிலான காலப்பகுதியில் மட்டும் காஷ்மீரில் 8,000 பேரை காணவில்லை. 70,000 பேர் போலி மோதல் சாவுகளிலும் அரசின் பாதுகாவலிலும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறிய 1990 முதல் மட்டும் 15,000 மனுக்களை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த மரண எண்ணிக்கைகூட, மிகக் குறைந்த அளவில்தான் கணக்கிடப்பட்டுள்ளது என்று தகவகல்கள் தெரிவிக்கின்றது காஷ்மீரில் தொடரும் மனித உரிமை மீறல்கள் விக்கிலீக்ஸ் வழியே கசியும் உண்மைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்தியா, காஷ்மீரில் அப்பட்டமாகமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள விவகாரம் விக்கிலீக்ஸ் மூலம் கசியத் தொடங்கியுள்ளது.செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002-ஆம் ஆண்டிலிருந்து 2004வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச்சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர்.

இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும்தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டுகால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை – எனப் பல்வேறுகொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் இக்கொடுமைகள் பற்றிஆதாரங்களுடன் ஆவணமாகச் சமர்ப்பித்துள்ளனர். இது, அமெரிக்க அரசுக்கு கேபிள் செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, 2007-ஆம் ஆண்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கைதிகளை வதைத்து இந்திய இராணுவம் மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்துள்ளதாகவும், இந்திய இராணுவம் போஸ்னியாவில் நடந்ததைப் போல இனப்படுகொலையில்ஈடுபடுகிறது என்றும் மற்றொரு கேபிள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளோ, பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்டவர்களோ அல்ல என்றும், அவர்கள் காஷ்மீரின் சாமானிய குடிமக்கள்தான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மைகள் அம்பலமானதும், தனது அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்தவை என்று இவற்றைத் தட்டிக் கழிக்கிறார், முதல்வர் ஓமர் அப்துல்லா. காஷ்மீரின் போலீசு தலைமை இயக்குனரான எஸ்.எம்.சோஹய், இவை ஆதாரமற்ற அவதூறுகள் என்கிறார்.

அருந்ததி ராய், சையத் அலி ஷா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குபோட்டு எச்சரிக்கும் இந்திய ஆட்சியாளர்களோ, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ஆவணங்களைப் பொய் என்று இட்லரின் கோயபல்ஸ் பாணியில் குற்றம் சாட்டி, தேசியவெறியைக் கிளறிவிட்டுத் தப்பித்து . ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்று சொல்லுவார்கள் .அதே போல் அப்பகுதி மக்களும் போரடி கொண்டும் சுட்டொலிக்க பட்டுக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.இதற்க்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும் .காஸ்மீர் மக்களுக்காக பல முற்போக்கு சிந்தனையாளர்கள் குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள் .குறிப்பாக அருந்ததி ராய் பல புத்தகங்கள் அப்பகுதி மக்கள் எவ்வாறுஅடக்கு முறைக்கு ஆட்படுத்த படுகிறார்கள் என்பதை மிக தெளிவாக பதிவு செய்து உள்ளார்கள்