(அப்துல்சலாம் யாசீம்)
தற்போது இலங்கையில் ஹலால் ஒழிக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்கள்
அணியும் ஹபாயாவை தடைசெய்ய முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை
நடாத்தி வரும் பொது பலசேனாவுக்கு நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக
முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
ஹலால்,ஹபாயா போன்ற விடயங்கள் முஸ்லிம்களுக்கு வெற்றியே தவிர தோல்வி இல்லை.
தோல்வியடைவது பொது பல சேனாவே தான்! காரணம் ஹலால் விடயத்தில் சில மார்க்க
அறிவு அற்றவர்கள் ஹலால்,ஹராம் என்று விளங்காமல் சந்தையில் கிடைக்கும்
பொருற்கள் அனைத்தையும் வாங்கி சாப்பிட்டார்கள். இருந்தபோதிலும் ஹலால் தடை
செய்யப்பட்டதன் பின்னால் எங்களது உணவில் ஹராம் கலந்து விடுமோ என்று
ஆராய்ந்து சாப்பிடக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த எதிர்ப்பை
காட்டிய பொது பல சேனாவுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எங்களது இறைவன் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உங்களுக்கு யாரும்
அநியாயம் செய்தால் அவர்களுக்கு நீங்கள் அநியாயம் செய்ய வேண்டாம்.உங்களுக்கு
எதிராக ஏதாவது ஒரு விடயத்தில் எதிர்ப்பு காட்டினால் அவ்விடயத்தின்
மறுபக்கத்தில் நான் நலவையே வைத்திருக்கின்றேன்.அதற்கு உதாரணமாக ஹலால்
சான்றிதழ் விளக்கப்பட்டமையாகும்!
இரண்டாவதாக ஹபாயா விளக்கல் கோசத்தின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு நன்மையே
அதிகமாகும்.இதற்கான காரணம் இஸ்லாமிய சரீஆ சட்டப்படி ஒரு பெண் ஆணின்
துனையின்றி வெளியே செல்லக்கூடாது. இருந்தும் கடந்த காலங்களில் பெண்கள்
மற்றும் யுவதிகள் தனிமையில் பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்தார்கள். ஹபாயா
பிரச்சனையை கட்டவிழ்த்து விட்டதன் காரணமாக தற்பொழுது அனைத்து பெண்களும்
தனிமையில் பிரயாணம் செய்ய பயப்படுகின்றார்கள். பெண்களும் சரீஆ சட்டப்படி
பிரயாணம் செய்வதற்கு வழிபிறந்துள்ளது.
இளம் யுவதிகள் தனிமையில் பாடசாலை,பிரத்தியேக வகுப்புக்களுக்கு தனிமையில்
செல்வதற்கு பயப்படுகின்றார்கள்.இதனால் பெற்றோர்களுடனோ அல்லது
கூலிக்கமர்த்தப்பட்ட வாகனத்திலோ மரியாதையாக சென்று வருவதற்கு
பழக்கப்படுகின்றார்கள்.அன்று பிரயாணம் செய்த சில பெண்கள் பஸ் வண்டியினுள்
எல்லோருடனும் சரளமாக பேசிக்கொண்டு பிரயாணத்தை மேற்கொண்டார்கள். ஆனால்
தற்பொழுது அந்த நிலைமை மாறி வருவதை உணரக்கூடியதாக உள்ளது.
தேவையற்ற ஆண்கள் பேசினாலும் பேசாமல் செல்லக்கூடிய நிலைமை உண்டாகின்றது.
ஏனென்றால் சில மதவாதிகள் பிரச்சனை உண்டாக்கி விடுவார்களோ அல்லது மரியாதையை
குறைத்து விடுவார்களோ என்றொரு பயத்தினால் சரீஆ சட்டம் சொல்லக்கூடிய
முறையில் இஸ்லாமிய பெண்ணாகவே பயணம் செய்யக்கூடிய நிலைமைக்கே ஆளாகின்றனர்.
பொது பல சேனா இதையொரு எதிர்ப்பாக அடக்கு முறையாகவே கையாண்டது. ஆனால் இது
முஸ்லிம் சமூதாயத்திற்கு மறுபுறத்தில் நன்மையையே பயக்கின்றது.
இப்படியொரு நிலமை ஹலால் விடயத்திலும்,ஹபாயா விடயத்திலும் முன்னேற்றம்
ஏற்படும் என்று விளங்கியிருந்தால் இதை எதிர்த்திருக்க மாட்டார்கள்.
முஸ்லிம்கள் அவர்களது அல்லாஹ் எந்த எதிர்ப்பிலும் வெற்றியை
வைத்திருக்கின்றான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள்.இந்த நம்பிக்கையை எங்கள்
இறைவன் அல்லாஹ் அவர்களுக்கு நிருபித்து காட்டிவிட்டான். அல்லாஹ் இல்லையென
பொது பல சேனா விமர்சித்தாலும் இதுதான் அல்லாஹ்வின் சக்தி என்று
எதிர்ப்பின் மூலம் பொதுபல சேனாவுக்கு காட்டிவிட்டான் எனவும் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.