பிரான்சில் ரெட் புல்(Red Bull) குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரான்சில் ஏராளமான குடிபானங்களுக்கு பொதுமக்கள் அடிமையாவது மட்டுமல்லாமல், அதன் விளைவுகளினாலும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மிக பிரபலமான ரெட் புல் குளிர்பானத்திற்கு புதிய வரியை விதிக்க நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த ரெட் புல் பானத்தின் விலை 1 லிட்டருக்கு 1 யூரோ என்ற விகிதத்தில் விற்கப்படுகின்றன.
மேலும் இந்த பானத்தில் ஆல்கஹால், அதிகமான இனிப்பு போன்றவை கலந்துள்ளன.
இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு நெஞ்சுவலி போன்றவற்றை ஏற்படுத்துகின்றன என்றும் கர்ப்பிணி பெண்கள், இளம் வயதினர் இதனை அருந்துவது ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.