
புது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாகின்றது என்ற பிரச்சனை பெரும்பாலான கருவிகளில் காணப்படுகின்றது. தற்சமயம் அதிகம் விற்பனையாகும் பிரபல போன்களான லெனோவோ கே3 நோட், யுரேகா, யுபோரியா, மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க், சியோமி எம்ஐ 4ஐ போன்ற போன்களுக்கு கூட இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. உயர் ரக ஸ்மார்ட்போன்களான ஒன் ப்ளஸ் 2 மற்றும் சோனி எக்ஸ்பீரியா இசட் போன்ற போன்களுக்கும் இந்த பிரச்சனை உண்டு. இதை எப்படி தீர்ப்பது என்பதை இங்கு பார்ப்போம்.

போனில் விளையாடுவது மற்றும் அதிகமாக ஆப்ஸ் பயன்படுத்துவது போன்ற செயல்களால் போன் அதிகளவில் சூடாகின்றது. இதை தவிர்க்க என்ன செய்யலாம்.

தேவையில்லாத தொடர்புகளை செயல் இழக்க செய்தல் அவசியம்
முதலில், இருக்கும் இடத்தை குறிக்கும் அப்ளிகேஷனை செயல் இழக்கம் (disable) செய்தல் வேண்டும். இந்த மேப் அதிக அளவு பேட்டரியை இழுக்கும். தற்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் போன் கண்டுபிடித்து கொண்டேயிருப்பதால் தேவையில்லாமல் அதிக அளவில் போன் சூடாகின்றது. இது மட்டுமில்லாமல் மற்ற ஆப்ஸ்களான ஃபேஸ்புக், கூகுள், ப்ளூடூத், வை-பை போன்றவகைகளையும் செயல் இழக்கம் செய்யாமல் (disable) அப்படியே விட்டால் போனுக்கு அதிக அளவு சூடாகின்றது.

மொபைல் தரவுகளை அதிக நேரம் பயன்படுத்துவது
3G மற்றும் 4G போன்ற தரவுகளை அதிக நேரத்திற்கு பயன்படுத்தினால் போனுக்கு வெப்பம் உண்டாகும். ஸ்மார்ட்போனை தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதற்கு பயன்படுத்தினால் போன் வெப்பம் அடைகின்றது. GPU தொடர்ந்து ஓடி கொண்டிருந்தாலும் போனுக்கு கெடுதல்தான். விளையாட்டுக்கு 20 நிமிடத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்தல் அவசியம்.

பல பின்னணி பயன்பாடுகள்
உங்கள் மொபைலில் பல பின்னனி பயன்பாடுகள் (Background application) பயன்படுத்தினாலும் போன் சூடாகக் கூடும். இதை தவிர்க்க கிலின் மாஸ்டர் போன்ற தேவையில்லாத பின்னனி ஆப்ஸை கொல்லும் ஆப்ஸை பயன்படுத்துவது அவசியம்.

அப்டேட்ஸ்
உங்கள் ஸ்மார்ட்போனின் ஓஎஸ் மற்றும் மற்ற ஆப்ஸ்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளவும். இப்படி செய்யவில்லை என்றால் மொபைலுக்கு சூடு அதிக அளவில் ஏற்பட்டு விரைவில் பாதிப்பு வந்து விடும்.

பழைய பேட்டரியை பயன்படுத்துவது
பழைய மற்றும் தரத்தில் குறைவான பேட்டரியை பயன்படுத்துவதால் போன் சூடாகக் கூடும். ஆகவே எப்பொழுதும் தரமான பேட்டரியை குறிப்பிட்ட டீலர்களிடம் இருந்து வாங்கி போனுக்கு பயன்படுத்துங்கள்.

வை-பை மற்றும் மற்ற சேவைகளை பயன்படுத்துவது
பலர் மொபைல் போனில் பல வேலைகளை செய்ய பயன்படுத்துகின்றனர். 3ஜி, 4ஜி போன்ற தரவுகளை அதிக அளவில் போனில் பயன்படுத்துவதால் போனுக்கு அதிகம் சூடாகின்றது. இதனால் பேட்டரியும் சீக்கிரம் காலியாகி விடும். ஆகையால் அதிக லோடு போனுக்கு வேண்டாமே.

அதிகமாக ஆப்ஸ் நிறுவுவது
போனில் அதிக அளவில் பின்னனி ஆப்ஸ்களை நிறுவினாலும் போனுக்கு கெடுதல் தான். ஃபேஸ்புக் மற்றும் மெசேன்ஜர் போன்ற ஆப்ஸ்களை அதிக அளவு பயன்படுத்தினால் போன் சூடாகும். நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ்களை அவ்வபோது நீக்கி விடுங்கள்.

அதிக நேரத்திற்கு கேம்ஸ்
அதிக நேரம் போனில் கேம்ஸ் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். நல்ல தரமான உயர் ரக ஸ்மார்ட்போன்கள் கூட இதனால் பாதிப்பு அடையும் வாய்ப்பு உள்ளது. 20 முதல் 25 நிமிடத்திற்கு ஒருமுறை பிரேக் எடுத்தல் அவசியம். இதனால் போனுக்கு அதிக அளவில் சூடாவதை குறைக்க முடியும்.

செயல் மேம்படுத்துதல் (Processor Optimization)
உங்கள் மொபைலை பல விதங்களில் மேம்படுத்தியும் சூடாகின்றதா. பின்பு நீங்கள் செய்ய வேண்டியது ரோம் (ROM) ஆப்ஸை நிறுவ வேண்டும். இது உங்கள் போனை சூடாவதிலிருந்து காக்கும்.

சார்ஜ் செய்யும்போது ஸ்மார்ட்போன் வேண்டாமே
இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். இருந்தும் செய்வோம். ஆம் சார்ஜ் செய்யும் போது போனை பயன்படுத்துவது. தரவுகளையும், கேம்ஸையும் போன் சார்ஜ் ஆகும் போது பயன்படுத்தினால் போன் விரைவில் கெட்டு போகக் கூடும். ஆகையால் அந்த செயலை நிறுத்தி போனை காத்து கொள்வோம்.