பொது இடங்களில் உள்ள கணினிகளை பாவிக்கும் போது உங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக

கவனிக்க வேண்டிய 5 அடிப்படை விடையங்கள் தொடர்பாக இந்த கட்டுரை
ஆராய்கின்றது. அதில் முதலாவது நீங்கள் சில இணையங்களை பயன்படுத்துவதற்கோ
அல்லது உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்கோ உறுப்பினர் பெயர்
கடவுச்சொற்களை பாவித்திருப்பீர்கள் அவ்வாறு பாவித்திருந்தால்...
அந்த இணையப்பக்கத்தில் "log out" என்ற கட்டளை இருக்கும் அதில் அழுத்தி அப்பக்கத்தின் பாவனையினை நீங்கள் தற்போது பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அத்துடன் நீங்கள் உள் நுழைவதற்கு பயன்படுத்திய உறுப்பினர் பெயருக்கான தடங்களை அழிப்பதற்கு
ஏதாவது ஒரு பெயரை அந்த இடத்தில் கொடுத்து ஒரு முறை முயற்சி
செய்துவிடுங்கள்(இது உங்கள் தடத்தினை அழிப்பதற்காக மட்டுமே இதனால் வேறு
எந்த செயற்பாடுகளும் நடைபெறமாட்டாது. உங்களால் பிழையான ஒரு பெயருடன் அந்த இணைய பக்கத்திற்க்குள் நுழையவும்

முடியாது, உங்களது உறுப்பினர் பெயர்களுக்கான தடங்களை அழிப்பதற்கு பல
வழிமுறைகள் உண்டு மற்றுமொரு கட்டுரையில் இது தொடர்பாக பார்க்கலாம்.) சில
இணையப்பக்கங்கள் மற்றும் தொடர்பாடல் மென்பொருட்கள் automatic login என்ற
ஒரு தெரிவுக்கான பகுதியை நீங்கள் அங்கு உறுப்பினராக உள்நுழையும் போது
காட்டி நிற்கும்.
பொது இடங்களில்
கணினிகளை பாவிக்கின்ற போது நீங்கள் இந்த தெரிவை தெரிவு செய்வீர்களேயானால்
உங்கள் உறுப்பினர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பது அந்த கணினியில்
பதியப்பட்டுவிடும். இது மறுமுறை இந்த பக்கத்தினை திறக்கும்
போது உங்களிடம் உறுப்பினர் பெயர் கடவுச் சொல்லினை கேட்டு சிரமப்படுத்தாமல்
இருப்பதற்கான ஒரு வசதியாகும். ஆனால் பொதுவான கணினிகளில் நீங்கள் இதனை
பயன்படுத்துவது உங்கள் பெயரில் மற்றவர்களும் ஒரு இணைய பக்கத்தை வலம்வருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.
இரண்டாவது ஒரு பொதுவான
கணினியில் நீங்கள் பாவனையினை முடித்துவிட்டு செல்லும்போது அந்த கணினியில்
உங்கள் முக்கியமான தகவல்களை விட்டுவிட்டு செல்லாதீர்கள் குறிப்பாக உங்களை
பற்றிய விபரங்களையோ அல்லது உங்கள் நிறுவனம் வேலை தொடர்பாக நீங்கள்
இணையத்தின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்ட விடையங்களையோ நீங்கள் இப்படியான
கணினி திரைகளில் விட்டுவிட்டு சென்றால் அது மற்றவர்களின் தவறான பயன்பாட்டிற்கு உட்படலாம்.
மூன்றாவது ஒரு பொதுவான கணினியில் நீங்கள் இணையத்தினை பயன்படுத்தியிருக்க முடியும் அந்த கணினியில் பார்த்த இணையப்பக்கங்களையோ அவற்றின் முகவரிகளையோ முடியுமானவரை History பகுதிக்கு சென்று அழித்துவிடுங்கள்.
அவற்றோடு Delete Files, Delete Cookies என்பனவற்றினையும்
செய்வீர்களேயானால் அது மேலும் சிறந்தது. முக்கியமாக சில இணைய உலாவிகள்
(Internet browsers) தன்னியங்கி முறையில் கடவுச்சொல்களை சேமிப்பதற்கான கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கும். என்பதனால் அவ்வகையான உலவிகளில் இணையத்தில் உலாவரும்போது உங்கள் இணைய

உலாவி தற்போது தன்னியங்கி முறையில் கடவுச்சொல் உறுப்பினர் பெயர் என்பனவற்றினை சேமிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பொதுவாக தன்னியங்கி
முறையில் சேமிப்பதற்கும் ஒரு வேண்டுகோள் உங்களிடம் கேட்கப்படும். அதைக்
கொண்டே நீங்கள் இந்த விடையத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
நான்காவது விடையம் மிகவும் முக்கியமானதும் வழமையாக நடைபெறுவதுமாகும் அதாவது ஒரு பொது கணினியினை நீங்கள் பயன்படுத்துகின்ற போது உங்கள் அயலில் இருப்பவர் தொடர்பில் அவதானமாக இருங்கள். அவர் உங்களுடைய முக்கியமான விடையங்களை கவனித்துக்கொண்டிருக்கலாம் அல்லது உங்கள் விபரங்களை குறித்துக்கொண்டு இருக்கலாம் இவ்வாறும் உங்கள் இணைய இரகசியங்கள் திருட்டுப்போகலாம்.
ஐந்தாவது பொது இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய மிகவும்
பெறுமதிவாய்ந்த விடையங்களை பயன்படுத்தாதீர்கள். அதாவது இணையத்தில் கணக்கு
அட்டை பாவனை மற்றும் இணைய
கட்டணங்களை செலுத்துதல் வங்கி கணக்குகளை பார்வையிடுதல் என எந்தவித
செயற்பாடுகளையும் செய்யாதீர்கள். ஏனெனில் அக்கணினிகளில் உங்கள் தரவுகளை
மற்றும் உங்கள் செயற்பாடுகளை சேமித்துக்கொண்டு இருக்கக்கூடிய மென்பொருட்களோ
அல்லது உங்கள் கணினி திரையினை தொலைவில் இருந்து கண்காணிக்கக்கூடிய மென்
பொருட்களோ நிறுவப்பட்டிருக்கலாம். அவை நீங்கள் பொது இடங்களில் உள்ள
கணினிகளை பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து அடிப்படைகள். அவை Microsoft தனது பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளை தழுவியவை.