Monday, May 31, 2010

பொன்மொழிகள்-நன்மொழிகள்

பொன்மொழிகள்-நன்மொழிகள்

  • பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்; ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.

பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.

வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால் மதிப்பைப் பெற முடியும்.

மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.

அதிருப்திகளுக்கெல்லாம் பெயர் சுயநலமே.

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.

பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.

''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.


துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;

நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.


முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால் உலகுக்குத் தெரிவதில்லை.

தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால் உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.

ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.

பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.


என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் சரி;

எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.

Saturday, May 29, 2010

கருப்பானவர்கள் கண்டிப்பாக படிக்கவும்

பலரு‌ம் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ஒரு த‌ா‌ழ்வு மன‌ப்பா‌ன்மையை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். ஏதோ வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டு‌ம்தா‌ன் அழகாக ‌இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம், கரு‌ப்பு எ‌ன்றா‌ல் வெறு‌ப்பத‌ற்கான ‌நிற‌ம் எ‌ன்று‌ம் கருது‌கிறா‌ர்க‌ள்.

இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனை நா‌ங்க‌ள் கூற‌வி‌ல்லை. ம‌ற்றவ‌ர்களை அழகா‌க்கு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌ர் ம‌ஞ்சு மாதாவே ந‌ம்‌மிட‌ம் கூறு‌கிறா‌ர்.


எனவே நா‌ம் கரு‌ப்பாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று கவலை‌ப்படுப‌வர்க‌ள் தொட‌ர்‌ந்து இ‌ந்த க‌ட்டுரையை‌ப் படி‌க்கலா‌ம்.

ம‌ஞ்சு மாதா : பொதுவாக கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள் தா‌ங்க‌ள் கரு‌ப்பாக இரு‌ப்பதை ‌நினை‌த்து கவலை‌ப்படுவா‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ன்னுடைய கரு‌த்து எ‌ன்னவெ‌ன்றா‌ல் கரு‌ப்பான தோலை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் உ‌ண்மை‌யி‌ல் ச‌ந்தோஷ‌‌ப்பட‌த்தா‌ன் வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் ந‌ல்ல ஆரோ‌க்‌கியமான தோ‌ல் கரு‌ப்பு‌த் தோ‌ல்தா‌ன்.



கரு‌ப்பாக இரு‌ந்தாலு‌ம் கலையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பல‌ர் உ‌ண்டு. வெறு‌ம் வெ‌ள்ளை தோ‌ல் ம‌ட்டு‌ம் இரு‌ந்து‌வி‌ட்டா‌ல் அழகாக இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். மேலு‌ம் அல‌ங்கார‌ங்க‌ள் செ‌ய்வ‌திலு‌ம், நகைகளு‌க்கு‌ம் கரு‌ப்பானவ‌ர்க‌ளு‌க்கு‌‌த் தா‌ன் அ‌திகமாக பொரு‌ந்து‌ம்.

கரு‌ப்பாக இரு‌க்கு‌ம் தோ‌லி‌ற்கு ந‌ல்ல த‌ன்மை இரு‌ப்பதை நா‌ன் பா‌ர்‌த்து‌ள்ளே‌ன். பொதுவாக கரு‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்டவ‌ர்களு‌க்கு அ‌திகமாக முக‌ப்பருவு‌ம் வருவ‌தி‌ல்லை. கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ரி‌ன் முக‌ம் முழு‌க்க முக‌ப்பருவாக இரு‌‌ப்பதை பொதுவாக பா‌ர்‌த்‌திரு‌க்கவே முடியாது. வெ‌ள்ளையாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பலரு‌ம், முக‌ம் முழுவது‌ம் மு‌க‌ப்பரு வ‌ந்து அவ‌தி‌ப்படுவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம்.

கரு‌ப்பாக இரு‌ப்பவ‌ர்க‌ள், அவ‌ர்களது ‌நிற‌த்‌தி‌ற்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌க் கூடிய, உட‌ல் வாகு‌க்கு பொரு‌ந்து‌ம் ஆடைகளையு‌ம், அல‌ங்கார‌த்தையு‌ம் செ‌ய்து கொ‌ண்டா‌ல் அவ‌ர்களை ‌விட அழகானவ‌ர்க‌ள் வேறு யாரு‌ம் இரு‌க்க முடியாது.

வெ‌ளி‌ர் ‌நிற‌த்‌திலான ஆடைக‌ள், எ‌ளிய அல‌ங்கார‌ம் போ‌ன்றவை கரு‌ப்பானவ‌ர்களை அழகாகா‌க் கா‌ட்டு‌ம். மேலு‌ம், பொ‌ன் ‌சி‌ரி‌ப்பு‌ம், பொ‌ன் நகையு‌ம் கூட அவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் இ‌ன்னு‌‌ம் அழகாக‌த் தோ‌‌ன்று‌ம். வெ‌ள்ளை‌க் க‌ல் ப‌தி‌த்த நகைக‌ள், த‌ங்க நகைக‌ள் போ‌ன்றவை வெ‌ள்ளையானவ‌ர்களை ‌விட, கரு‌‌ப்பானவ‌ர்களு‌க்கு‌த்தா‌ன் எடு‌ப்பாக‌த் தோ‌ன்று‌ம். இது அனைவரு‌ம் அ‌றி‌ந்ததே.

அதே‌ப்போல, வெ‌ள்ளையான‌வ‌ர்க‌ளி‌ன் முக‌த்‌தி‌ல் ‌சிறு மறுவோ, க‌ட்டி என எது வ‌ந்தாலு‌ம் அ‌ப்ப‌ட்டமாக வெ‌ளியே‌த் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் கரு‌ப்பானவ‌ர்களு‌க்கு அ‌ந்த ‌பிர‌ச்‌சினை இரு‌ப்ப‌தி‌ல்லை. அவ‌ர்களை எ‌ப்போது‌ம் அழகாக வை‌க்க இது ஒ‌‌ன்றே போதுமானது.

சில‌ பெ‌ண்க‌ள், அடு‌த்த மாத‌ம் என‌க்கு‌த் ‌திருமண‌ம், நா‌ன் கரு‌ப்பாக இரு‌க்‌கிறே‌ன், ஏதாவது செ‌ய்து எ‌ன்னை வெ‌ள்ளையா‌க்கு‌ங்க‌ள் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். இதுபோ‌ன்றவ‌ர்களு‌க்கு ஒ‌‌ன்று பு‌ரிய வை‌க்க ‌விரு‌ம்‌‌பு‌கிறே‌ன். ‌பிற‌க்கு‌ம் போதே கரு‌ப்பானவ‌ர்க‌ள்இ ஒரு ‌சில முறைகளா‌ல் லேசாக வெ‌ள்ளை ஆகலா‌ம். ஆனா‌ல் அதுவு‌ம் அ‌திக‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்க முடியாது. முக‌த்தை அழகாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டுமானா‌ல் பல ‌சி‌கி‌ச்சைக‌ள் உ‌ள்ளன. ‌திடீரென வெ‌ள்ளையா‌க்க எ‌ந்த முறையு‌ம் இ‌ல்லை. எனவேஇ உடனடியாக வெ‌ள்ளையா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அழகு‌க் கலை ‌நிபுண‌ரையு‌ம் ‌நி‌ர்ப‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம். அதனா‌ல் ஏதேனு‌ம் ப‌க்க ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் முறைகளை உ‌ங்களு‌க்கு செ‌ய்து ‌வி‌ட்டா‌ல் அது ‌பிர‌ச்‌சினையா‌க முடி‌ந்து ‌விடு‌ம்.

எனவேஇ நம‌க்‌கிரு‌க்கு‌ம் அழகை மேலு‌‌ம் அழகா‌க்கு‌ம் ப‌ணியை ம‌ட்டு‌ம் அழகு‌க் கலை ‌நிபுண‌‌ரிட‌ம் ஒ‌ப்பு‌வி‌‌ப்பது ந‌ல்லது.

சில எ‌ளிதான ‌முறைகளா‌ல் நமது சரும‌த்தை பாதுகா‌க்கலா‌ம். நமது சரும‌‌த்‌தி‌ற்கு‌ம் உணவு தேவை‌ப்படு‌கிறது. அது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதாவதுஇ வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது சரும‌த்‌தி‌ற்கு மு‌ல்தா‌னி மெ‌ட்டிஇ ச‌ந்தன‌ம்இ த‌யி‌ர்இ ம‌ஞ்ச‌ள்இ அ‌ரி‌சி மாவுஇ த‌க்கா‌ளி‌ச் சாறுஇ எலு‌மி‌ச்சை சாறு போ‌ன்ற எதையாவது ஒ‌ன்றை தட‌வி ஊற ‌வி‌ட்டு கழு‌வி வ‌ந்தா‌ல் இய‌ற்கையான முறை‌யி‌ல் அதே சமய‌ம் எ‌ளிய முறை‌யி‌ல் உ‌ங்க‌ள் அழகை‌ப் பேணலா‌ம்.


கரு‌ப்பான சரும‌‌ம் எ‌ன்று கவலை‌ப்படாம‌ல், ஆரோ‌க்‌கியமான சரும‌ம் எ‌ன்று ச‌ந்தோஷ‌ப்படு‌ங்க‌ள். அதுதா‌ன் உ‌ண்மை.

நன்றி இணையம்

அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? : வேண்டாம் விபரீதம்!

நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்.,
அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? : வேண்டாம் விபரீதம்!

ஒரு நாளைக்கு சராசரியாக 100 முறைக்கு மேல், விரல்களால்,
'டைப்' அடித்து எஸ்.எம்.எஸ்., அனுப்புபவரா?அப்படியானால், முதலில்
விழிச்சுக்குங்க… வேண்டாம் விபரீதம்! இதே எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ்.,
செய்த அமெரிக்க பள்ளிச் சிறுமி, ஆனீஸ் லெவிட்சுக்கு மணிக்கட்டு
மரத்துப்போய், கடைசியில், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும்
கையில் பிடிக்கவே முடியாமல் போய் விட்டது.

உங்களுக்கு மட்டுமல்ல, இப்படி 100, 'கீ'க்கு மேல் எஸ்.எம்.எஸ்.,
அனுப்புவோருக்கும், எஸ்.எம்.எஸ்., பார்ப்போருக்கும் கோளாறு வரும் என்று
உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது என்பது
மட்டும் நிச்சயம்.

இந்த பாதிப்புக்கு, 'கார்பல் டன்னல் சின்ட்ரோம்' என்று பெயர்.
கம்ப்யூட்டரில், கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி வேலை செய்வோருக்கும்,
அதிகமாக, 'மவுஸ்' பிடித்து வேலை செய்வோருக்கும் இந்த கோளாறு வரும்.
நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவராக இருந்தால், இந்த அனுபவம்
புரியும். எப்போதும் கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி, 'டைப்' செய்தும்,
'மவுஸ்' பிடித்தும் கொண்டிருந்தால், கை விரல்களில் உள்ள நரம்புகள்
பாதிக்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
முழங்கையில் இருந்து கை விரல்களில் நடுப்பகுதியில் ஒரு நரம்பு போகும்.
அதாவது, சாலையின் நடுவே எப்படி தடுப்பு போடப்பட்டுள்ளதோ, அப்படி இந்த
நரம்பு போகும்.
அடிக்கடி கம்ப்யூட்டர், 'மவுஸ்' பிடிப்பதால், மொபைல் எஸ்.எம்.எஸ்.,
அனுப்புவதால் இந்த நரம்பு பலவீனம் அடையும். ரத்த ஓட்டம் பாதித்து, திடீரென
மரத்துப் போகும். இதனால், கை விரல்களில் உணர்ச்சியே இருக்காது; அப்புறம்,
மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கை விரல்களால் பிடிக்கவே
முடியாமல் போய் விடும்.

இதற்கு தீர்வு என்ன? அறுவை சிகிச்சை ஒன்று தான். அறுவை சிகிச்சை செய்த
பின், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்.
மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டால், இந்த பிரச்னைகள்
எல்லாம் வராது. மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் வரம்பு மீறும் போது, கை
விரல்களில் ஒரு வித நமைச்சல் ஏற்படும். உள்ளங்கை அரிக்கும்; போகப் போக ஒரு
வித தடிப்பு உணர்வு ஏற்படும். கடைசியில் உணர்ச்சியே இல்லாமல் போய் விடும்.

கை விரல்கள் ஏதோ சம்பந்தம் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை போல, எதற்கும்
பயன்படாமல் போய்விடும்.

எஸ்.எம்.எஸ்., மூலம் கைவிரல் மரத்துப் போய், அறுவை சிகிச்சை செய்து
கொண்ட ஆனீஸ் லெவிட்ஸ் தன் அனுபவத்தை கூறுகிறார்:

எனக்கு மொபைல் போனில்
எஸ்.எம்.எஸ்., தருவது என்றால் மிகவும் பிடிக்கும். என் தோழிகள் எல்லாரும்
தகவல் பரிமாறுவதே அதில் தான். போனில் பேசாமல், இப்படி செய்வதை வழக்கமாக
கொண்டிருந்தோம்.
நான் ஒரு நாளைக்கு 100,'கீ'க்கு மேல் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்ப,
விரல்களால், 'டைப்' செய்வேன். அப்படி செய்த நான், ஒரு நாள், காலை
எழுந்ததும் கைவிரல்களில் ஒருவித நமைச்சல் காணப்பட்டது. போகப் போக,
விரல்களில் உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டபோது,
விரல்களில் சூடு பட்டும், எதுவும் உணர்வே தெரியவில்லை. டாக்டரிடம்
காட்டியதற்கு, உடனே அறுவை சிகிச்சை செய்து, கை விரல் நரம்பில்
உணர்ச்சியூட்ட முடியும் என்று கூறினார்.
அறுவை சிகிச்சை செய்த பிறகு தான், என்னால், மொபைல் போனை கைவிரல்களால்
பிடிக்க முடிகிறது.

— இவ்வாறு கூறிய ஆனீசிடம், 'இப்போது எஸ்.எம்.எஸ்.,
அனுப்ப முடிகிறதா?' என்று கேட்டது தான் தாமதம், 'எஸ்.எம்.எஸ்.,சா… அதை
மறந்து ரொம்ப நாளாச்சு; எதுவாக இருந்தாலும், தோழிகளிடம் போனில் சில நொடிகள்
பேசுவேன்…' என்று, 'பளீச்'சென சொன்னார்.

என்ன… நீங்க எஸ்.எம்.எஸ்., விரும்பியா? அப்படீன்னா, எச்சரிக்கையாக
இருங்க!

*****************************************

கைத்தொலைபேசி உலகம்

கவிதைகள்

மருத்துவ கட்டுரைகள்

மகளிர் கட்டுரைகள்



இன்றைய சிந்தனை

01. பேச்சின் ஆற்றல் தீ ப்பொறி போன்றது . நாவைக் கட்டுப்படுத்துன் மூலம் ஒருவரால் உலகத்தையே கட்டுப் படுத்த முடியும் எனவே பேச்சைக் குறையுங்கள்.

02. அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லாவிவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.

03. எந்த வித சுயநலநோக்கமும் இல்லாமல் பணம் புகழ் எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டவன் எவனோ அவன் புத்தரைப் போல மேன்மையான் ஆவான் இந்த உலகத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை அவனிடத்தில் இருந்து எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டிக்கும் -விவேகானந்தர்

04. நல்லுரைகளும், நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை.

05. என்னை நான் ஆழ்கிறேன் அதனால் எனக்குவரும் பிரச்சினைகளை நானே தீர்க்கிறேன்
(( என்னை நான் ஆழ்கிறேன் என்ன்றால்  எ"ன்னால் செயர்கரிய காரியங்களை சரியாக செய்கிறேன் என்று அர்த்தம்"..))
உங்களை நீங்களே ஆழுங்கள்..

06. சொல்வதைவிட செய்வதே மேல்......

07. என் ஆசைகளைக் குறைத்துக் கொண்டேன். ஆசைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்தேன். நான் மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்.

Tuesday, May 25, 2010

புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

"புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!
முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது என்றால் அவ்வளவு எளிதில்லை கேமராவில் ஃபிலிம் போடணும் பின் அதை சரியாக இணைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும், இல்லை என்றால் ஃபிளாஷ் மட்டும் தான் ஆகிட்டு இருக்கும் ஃபோட்டோ எடுத்து இருக்காது, பின் அதை கழுவ கொடுத்து அதில் எது நன்றாக வந்துள்ளதோ அதை பிரிண்ட் போடுவோம்.

crime3 "USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

தற்போது நிலைமை தலைகீழ் நவீன உலகத்தில் ஃபிலிம் எல்லாம் அதிசய பொருளாகி விட்டது டிஜிட்டல் கேமரா வந்த பிறகு. நவீன உபகரணங்கள் நம் வாழ்க்கையை எளிமை படுத்துவதை போல பல சிக்கல்களையும் உடன் கொண்டு வந்து விடுகிறது. யார் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் யாருடைய உதவியும் இன்றி படம் எடுக்கலாம் என்று ஆகி விட்டது. பிரிண்ட் போட்டு தான் நாம் படம் எடுத்ததை பார்க்க முடியும் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது. இதுவே பலரை தைரியமாக தவறு செய்ய தூண்டுகிறது.


கடந்த வாரம் என் படத்தை பிரிண்ட் போடுவதற்காக என்னுடைய USB ஸ்டிக்கில் உள்ள மற்ற அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு (தேட சிரமமாக இருக்கும் என்பதால்) பிரிண்ட் போட போகும் படத்தை மட்டும் காபி செய்து கொண்டு உடனடியாக (Instant) பிரிண்ட் போட்டு தரும் கடையில் சென்று கொடுத்தேன்.

நான் USB ஸ்டிக் கொடுத்து அவர்களுடைய Preview பார்க்கும் ஃபோட்டோ இயந்திரத்தில் அதை சொருகிய பிறகு நான் எப்போதோ டெலீட் செய்த படங்கள் எல்லாம் காட்ட எனக்கு அதிர்ச்சி ஆகி விட்டது.

crim1 "USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

எனக்கு இது வரை இதற்கென்று தனியாக உள்ள மென்பொருளை பயன்படுத்தினால் மட்டுமே டெலீட் செய்த கோப்புகளை பார்க்க முடியும் என்று நினைத்து இருந்தேன், ஆனால் இதில் எதையும் பயன்படுத்தாமல் அப்படியே அனைத்து தகவல்களையும் உடனே காட்டியது (ஒருவேளை இதில் ஏற்கனவே அதை போல மென்பொருள் உள்ளதா என்பது தெரியவில்லை). ஓரளவு இதை பற்றிய தொழில்நுட்பம் அறிந்து இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால் இதை பற்றி எல்லாம் எதுவுமே தெரியாதவர்கள் நிலையை நினைத்தால் ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

இதை நான் இங்கு கூற காரணம், தற்போது காதலர்கள், கணவன் மனைவிகள், மற்றும் ஒரு சில சிற்றின்ப காதலர்கள்!! என்று பலர் தாங்கள் மட்டும் பார்த்து ரசிப்பதற்காக தங்களை "ஏடாகூடமாக" படம் எடுத்து வைத்து கொள்கிறார்கள். இவர்கள் தாங்கள் டெலீட் செய்து விட்டதாக நினைத்து வேறு படங்களை பிரிண்ட் போட USB ஸ்டிக்கை கொடுத்தால் அவர்கள் கதி அதோ கதி தான்.

இதை வைத்து அவர்கள் மிரட்டப்படலாம், இந்த படங்கள் இணையத்தில் விடப்படலாம் (உங்கள் அனைவருக்கும் தெரியும் இதை போன்ற படங்கள் மின்னஞ்சலில் எப்படி காட்டு தீயாக பார்வர்டு ஆகும் என்பது), இணையத்தில் இதை போன்ற படங்களை வீடியோக்களை நல்ல விலைக்கு வாங்க இதற்கென்றே பல கும்பல்கள் உண்டு. விஷயம் வெளியே தெரிந்தால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை, அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது.

இதை போல எடுக்கப்பட்ட பல படங்கள் இணையத்தில் உலா வருகிறது, வீடியோக்கள் உட்பட. பள்ளி, கல்லூரி, அலுவலக, குடும்ப பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்ட தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் என்று பீதியை கிளப்புகிறது. இவர்களுக்கெல்லாம் அறிவே கிடையாதோ! என்று தான் நினைக்க தோன்றுகிறது. நாளை இது அனைவருக்கும் தெரிந்து அந்த பெண் உட்பட அந்த குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லையா! எப்படி இதை போல முட்டாள் தனமாக குறிப்பாக தைரியமாக படம், வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆண்களுக்கு பிரச்சனை இல்லை நம் சமூகம் பெரிதாக கருதாது ஆனால் பெண்களின் நிலைமை!!

crime "USB ஸ்டிக் புகைப்படங்கள்" ஒரு எச்சரிக்கை!

தற்போது நண்பர்களிடையே அடல்ட் படங்கள் உலா வருவது சகஜம், ஒருவரிடையே உள்ள லேப்டாப், டெஸ்க்டாப், USB ஸ்டிக் அல்லது மின்னஞ்சலில் என்று ஏதாவது ஒன்றில் ஒரு அடல்ட் படமாவது இல்லாமல் இருப்பது மிக அதிசயமான சம்பவம் ஆகும், அது நண்பர்களிடம் இருந்து வந்ததாகவும் இருக்கலாம் அல்லது தாங்களே தரவிறக்கம் செய்ததாகவும் இருக்கலாம். இதை தவறு என்று கொடி பிடிக்க வரவில்லை, அதை கூற நான் உத்தமனும் அல்ல.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்னொரு பக்கம் உண்டு, இரகசியம் இல்லாத மனிதன் கிடையாது, ஆனால் நாம் எப்படி தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் ஏமாந்து விடுவோம். ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் குருட்டு தைரியத்தில் இருப்பவர்களை என்னவென்று சொல்வது. எனவே இதை போல படங்களை எடுக்காதீர்கள், எடுக்க அனுமதிக்காதீர்கள் அப்படியே எடுத்தாலும் மிக எச்சரிக்கையாக இருங்கள், தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.

Tuesday, May 18, 2010

சில விளையாட்டுக்களில் கண் கலங்கும் சம்பவங்கள்

சில விளையாட்டுக்களில் கண் கலங்கும் சம்பவங்கள்


















இந்த பிரச்சனைக்குத் தான் நம்ம ஊர்ல வேல பல நல்ல விளையாட்டுகள கண்டு பிடிச்சி இருக்காங்க.
* ஓடிப் புடிச்சி
* திருடன் போலிஸ்
* கிச்சி கிச்சி தாம்பாளம்
* கோலி அடிப்பது
* பம்பரம்






Friday, May 14, 2010

சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களை விற்று சென்னைக்கு'கிளம்பிய' பள்ளி மாணவர்கள்

கோவை: சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களை விற்று சென்னைக்கு'கிளம்பிய' பள்ளி மாணவர்கள் நான்கு பேரை, போலீசார் சேலத்தில் மீட்டனர்.இந்த மாணவர்கள், பெற்றோருக்கு பயந்து கடத்தல் நாடகமாடி போலீசாரை குழப்பியது விசாரணையில் தெரியவந்தது.


கோவை நகரிலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார்(12), மூர்த்தி மகன் நவீன்(14),பழனிச்சாமி மகன் விஜயகுமார்(18), முத்துசாமி மகன் விக்னேஷ்(15) ஆகியோர்நண்பர்கள். நான்கு பேரும் சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டிள்ள என்.ஜி.ஆர்.,பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 10ம் தேதி மாலையில் பள்ளி மைதானத்தில்விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பிய இவர்கள், நேற்று முன்தினம் காலை வரை வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த பெற்றோர்,சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். ஒரே தெருவைச் சேர்ந்த நான்குமாணவர்கள் காணாமல் போனது, அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.நால்வரையும் இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ்.ஐ., ஆறுமுகம் தலைமையிலான போலீசார்தேடி வந்தனர்.


இந்நிலையில், வீட்டுக்கு போன் செய்து பெற்றோருடன் பேசிய ஒரு மாணவர்,'எங்களை ஒருவர் ோவையில் இருந்து ஜீப்பில் கடத்தி வந்துவிட்டார்; நாங்கள்,சேலம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருக்கிறோம்' என தெரிவிக்க, மீண்டும்பரபரப்பு தொற்றிக்கொண்டது.இது குறித்து தகவலறிந்த போலீசார், சேலம்போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தெரிவித்து, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் சுற்றியமாணவர்கள் நான்கு பேரையும் மீட்டு, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தங்கவைத்திருந்தனர். அதன்பின், சிங் காநல்லூர் போலீசார் சேலம் சென்று,மாணவர்களை கோவைக்கு அழைத்து வந்தனர்.


மீட்கப்பட்ட மாணவர்கள், போலீசாரிடம் கூறியதாவது:நாங்கள்சினிமா நடிகர் விஜய் ரசிகர்கள். அவரை பார்க்க சென்னை செல்லும்திட்டத்துடன் வீட்டிலிருந்த இரு சைக்கிள்கள் (அரசு இலவசமாக மாணவர்களுக்குவழங்கியது), மூன்று 'செட்' ஆடைகள் சகிதமாக கடந்த 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். சென்னைக்கு ரயிலில் செல்ல பணம் வேண்டும் என்பதால், இரு சைக்கிள்களையும் ஒண்டிப்புதூரிலுள்ள ஒரு முதியவரிடம் தலா 300 ரூபாய், 320 ரூபாய்க்கு விற்றோம்.அதில் கிடைத்தபணத்தை கொண்டு அன்று இரவே ரயிலில் சென்னை சென்றோம். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரவு முழுக்க சுற்றித்திரிந்த பின் மறுநாள் எங்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் கோவைக்கே திரும்ப முடிவு செய்து,அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் உதவி கேட்டோம்.


அவர், எங்களை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குஅழைத்துச் சென்று இறக்கினார். அங்கிருந்து, பஸ்சில் சேலம் மத்திய பஸ்ஸ்டாண்ட் வந்தோம். கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டதால்,பெற்றோருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தோம். நடிகரை பார்ப்பதற்காகவீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவித்தால் பெற்றோர் அடிப்பார்கள்என்பதால், எங்களை ஒருவர் ஜீப்பில் கடத்தி வந்ததாக பொய்யான தகவல்தெரிவித்தோம்.இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம்,மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை நேரடி விசாரணைநடத்தினார். துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, மாணவர்களை மீட்ட போலீசாரை பாராட்டினார்.



இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சினிமாநடிகர் மீதான மோகம், சிறுவர்களையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு,நான்கு மாணவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவமே உதாரணம். பெற்றோரைஉதறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறவும், அரசு வழங்கிய இலவச சைக்கிளை தவறான நோக்கத்துக்காக விற்கவும், போலீசாரால் மீட்கப்பட்ட பின் கடத்தல்நாடகமாடவும் தூண்டியிருக்கிறது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளி மாணவ,மாணவியர் நடிகர், நடிகரை பார்க்கும் ஆசையில், வீட்டிலிருந்து வெளியேறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. சினிமா மோகம் கொண்ட பிள்ளைகளை பெற்றோர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதும், அவர்களது செயல்பாடுகளை கவனிப்பதும்அவசியம். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Saturday, May 8, 2010

மனிதன் மனிதனாக இருக்க!

மனிதன் மனிதனாக இருக்க!
தூய்மையான எண்ணங்களே இருத்தல் வேண்டும்

மற்றவரின்
உணர்ச்சியை மதித்தல் வேண்டும்

துக்கம், இன்பம் இரண்டையும் சம
அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யாரையும் கேவலமாக நினைப்பது கூடாது.

தொழிலில்
பக்தி வேண்டும்

வீரம், விவேகம், மனவலிமை மிக்கவனாக இருத்தல்
வேண்டும்.

மற்றவருக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும், தீமைகள் அறவே
செய்யக்கூடாது.

எதிரியையும் நேசிக்கும் அன்பு வேண்டும்

மற்றவரின்
மனம் நோகாதவாறு பேசல், நடத்தல் வேண்டும்

எப்போதும் சக்திமிக்க
அறிவைப் பயன்படுத்த வேண்டும்.

பிறரின்
நன்மதிப்பை பெற:

* சுறுசுறுப்பு

* உற்சாகம்

* பிறர்
நலம் நாடுதல்

* பெரியோரை மதித்தல்.

குறைந்த
பேச்சு,
நிறைந்த கேள்வி,
தனித்த சிந்தனை,
நம் கருத்தில் தெளிவு,
பிறர்
கருத்தில் மதிப்பு.
இவை பின்பற்ற வேண்டிய சிறந்த விதிகள்.

Friday, May 7, 2010

உங்கள் ரசனைக்கு

தமிழ் தெழுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை

இது நிஜம சண்டை.




தெலுங்குப்படச் சண்டை



தமிழ் படச்சண்டை இது.



மீண்டும் சர்தார் வைத்தியரிடம் சென்று.

டாக்டர் : உங்களுக்கு பாடி வெயிட் ரொம்ப ஏறிப்போச்சு. கண்டிப்பா ஒரு முப்பது கிலோவாவது குறைச்சாகனும்.

சர்தார் : அதுக்கு என்ன செய்யணும் டாக்டர்.

டாக்டர் : ஓட்டப்பயிற்சிதான் செய்யணும். ஒருநாளைக்கு எட்டு கிலோமீட்டர் ஓடுங்க. இப்படி தொடர்ந்து 300 நாட்கள் ஓடினா கண்டிப்பா 30 கிலோவெயிட் குறையும்.

(300 நாட்களுக்குப் பின்….)

சர்தார் : (போனில்) டாக்டர்..எனக்கு ஒரு பிரச்சினை.

டாக்டர் : என்ன பிரச்சினை? உடம்பு எடையெல்லாம் குறைஞ்சிடுச்சா?

சர்தார் : அதெல்லாம் குறைஞ்சிடுச்சு டாக்டர். ஆனா டெய்லி எட்டு கிலோமீட்டர் ஓடினதுல இப்போ 2400 கிமீ தொலைவுல இருக்கேன். நான் எப்படி திரும்பறது…திரும்ப ஓடி வரணுமா?





Wednesday, May 5, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.



1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான  ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.  இதுவும்    மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை          பாதிப்படையும்.

6. தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்    பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான         உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

—————————————————————-

நன்றி:-இனைய நன்பர்

################################################################

நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

மாதச் சம்பளம் 5,00,000 ரூபாய் நீங்கள் தயாரா?

CAT, GRE, GMAT, GATE மாதச் சம்பளம் 5,00,000 ரூபாய் நீங்கள் தயாரா?

முதுகலைப் பட்டம் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பீர்கள்? 5,000, 20,000 அல்லது 50,000 ரூபாய்கள். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்… ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?

நீங்கள் திறமையானவராக இருந்தால் அதற்கு மேலும் கொட்டிக் கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

CAT (Common Admission Test), GRE (Graduate Record Examination), GMAT (Graduate Management Admission Test), GATE (Graduate Aptitude Test in Engineering)… இந்த நுழைவுத் தேர்வுகள்தான் வளமான வாய்ப்புகளுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் முள்வேலி. இந்த வேலியைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சமே லட்சங்களில்தான் சம்பளம் துவங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்து வேலை செய்பவர்கள்கூட, வேலையை உதறிவிட்டு இந்த நுழைவுத் தேர்வினை எதிர்கொண்டு தங்கள் எதிர்காலத்தை அப்டேட் செய்துகொள்கிறார்கள். M.B.A., M.S., M.Tech போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை வழங்குபவைதான் அந்த நுழைவுத் தேர்வுகள். கலை அல்லது இன்ஜீனியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி என்பதுதான் இந்தப் படிப்புகளுக்கான அடிப்படைத் தகுதிகள். இந்தியாவில் IIM, XLRI, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, மசாச்சூசட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) போன்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது அவசியம். இவை அனைத்தும் உலகத் தரக் கல்வி நிறுவனங்கள். இங்கு படித்துத் தேர்ச்சியடையும் அனைவருக்கும் உலகின் 'டாப் 100′ நிறுவனங்களில் வாய்ப்புகள் நிச்சயம் காத்திருக்கும்.

"ஒரு துளி பிழைக்கும் இடம் கொடுக்காத இந்தத் தேர்வுகளில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் எவரும் சாதிக்கலாம்!" என்று நம்பிக்கை வார்த்தை சொல்கிறார் ரகுநாத். CAT, GRE, GMAT தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்திய அளவில் முத்திரை பதித்திருக்கும் 'TIME' (Triumphant Institute of Management Education) பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் இவர்.


"இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் சிகிஜி தேர்வு மிகவும் கடினமானது என்ற பிம்பம் இருந்தாலும், இளைஞர்களின் 'மோஸ்ட் வான்டட்' தேர்வும் அதுதான். காரணம், அந்தத் தேர்வு முடிவினைத்தான் கிட்டத்தட்ட 100 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் கணக்கில்கொள்கின்றன.

வெர்பல்(verbal) எனப்படும் ஆங்கில அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் (quantitative aptitude) எனப்படும் கணிதத் திறன் சார்ந்த கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங் (logical reasoning) எனப்படும் யோசிக்கும் திறன் சார்ந்த கேள்விகள்தான் அனைத்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுத் திட்டங்களிலும் இடம்பெறும்.

CAT தேர்வினில் 60 முதல் 70 கேள்விகள் வரை கேட்கப்படும். இந்தத் தேர்வினை time stressed test என்று கூறலாம். சென்ற ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், அது மீண்டும் பேப்பர் – பென்சில் தேர்வாக மாற்றப்படலாம் என்பதால், இரண்டுவிதமான தேர்வுகளுக்குமே மாணவர்கள் தயாராக இருப்பது நல்லது. சரியான பதில் ஒன்றுக்கு 7.5 மதிப்பெண்கள். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் தலா 2.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். பொதுவாக, நமது மாணவர்கள் ஆப்டிட்யூட் பகுதியில் பெரும்பாலும் கெட்டி. ஆனால், வெர்பல் பகுதியில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். ஆனால், எந்தப் பயமும் பதற்ற மும் இல்லாமல் இவற்றைச் சமாளிக்கலாம்.

M.S படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு GRE. இந்தத் தேர்வை நடத்துவது அமெரிக்காவைச் சேர்ந்த ETS -Educational Testing Service என்ற அமைப்பு. இதை எழுத விரும்புபவர்கள் அதன் வெப்சைட்டில் (www.ets.org/gre) பதிவு செய்ய வேண்டும். 180 டாலர்கள் கட்டணம். தேர்வை வருடத்தின் எந்த நாளிலும் எழுதலாம். வெர்பல் பகுதிக்கு 800 மதிப்பெண்களும், குவான்ட்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிக்கு 800 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இந்திய மாணவர் 700-க்கும் குறைவாக ஆப்டிட்யூட் பகுதியில் மதிப் பெண்கள் வாங்கினால், அவரை ஒரு திறமைசாலியாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கருதுவது இல்லை. ஆனால், இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. நம் நாட்டின் பள்ளிக்கூடக் கணிதப் பாடத் திட்டங் களைப் போலத்தான் இருக்கும் கேள்விகள். வெர்பல், ஆப்டிட்யூட் பகுதிகளுக்குச் செல்லும் முன், அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வு வைப்பார்கள். அதில் இரண்டு தலைப்புகள் கொடுத்து அதைப்பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்த இரண்டு கட்டுரைகளும் ஏதேனும் சிக்கலான சூழ்நிலைக்குத் தீர்வு சொல்வதாக அமையும். உதாரணமாக, கூவம் நதியைச் சுத்திகரித்து சிங்காரச் சென்னையைச் சாத்தியப்படுத்துவது எப்படி?' என்பது மாதிரியான கேள்விகள். வெர்பல், குவான்டிடேட்டிவ் பகுதிகளின் முடிவுகள் தேர்வு முடிந்த உடனே தெரிந்துவிடும். அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வின் முடிவு ஆறு வாரங்களுக்குப் பிறகே நமக்கு அனுப்பிவைக்கப் படும்.

கொஞ்சம் கவனத்தோடு எழுத வேண்டிய தேர்வு GRE. ஏனென்றால், ஒரு முறை விடை அளித்த பிறகு, அந்தக் கேள்விக்கான பதிலை மாற்ற முடியாது. தெரியவில்லை என்பதற்காக, எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் விட்டுவிடவும் முடியாது. GRE தேர்வுடன் சேர்த்து TOEFL எனும் மற்றொரு தேர்வையும் எழுதினால்தான் வெளிநாடு களில் M.S. படிக்க முடியும். ஆங்கிலம் அல்லாத வேறு ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் ஆங்கிலத் திறமையை நிரூபிக்கும் தேர்வுதான் TOEFL. வாசிப்பது, எழுதுவது, கவனிப்பது, பேசுவது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்கள் ஆங்கிலத் திறனைச் சோதிப்பார்கள். இதில் மொத்த மதிப்பெண்களான 120-ல் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட சர்வசாதாரணமாக ஸ்கோர் செய்யலாம். நல்ல தயாரிப்பு இருந்தால் முழு மதிப்பெண்களையும் பெறலாம்.

பொதுவாகவே, CAT, GRE தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு, GMAT தேர்வு சுலபமானதாகவே இருக்கிறது. இந்தத் தேர்வு வெளிநாட்டுப் பல்கலைக்கழக M.B.A., படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு. இதன் வெர்பல் பகுதி மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் ஒப்பிடும் போது சற்றே கடினமானது. GMAT தேர்வு முடிவுகள் மட்டுமே வெளிநாட்டு M.B.A., படிப்புகளுக்குப் போதுமானது இல்லை. குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது வேலை அனுபவம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களையே ஏற்பார்கள். ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஃப்ரெஷர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த GMAT தேர்வுக்கும் TOEFL தேர்வு கட்டாயம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் IELTS எனும் தேர்வையும் ஆங்கிலத் திறனுக்கான தகுதியாக நிர்ணயித்திருக்கின்றன. ஏதேதோ சொல்கிறார்களே என்று தயங்க வேண்டாம். எல்லா படிப்புகளுக்கு மான அடிப்படைகள்தான் இவற்றுக்கும். தினசரி பயிற்சியும் முயற்சியும் இவற்றுக்கான கூடுதல் தேவைகள்!" என்று முடிக்கிறார் ரகுநாத்.

சென்ற ஆண்டு GRE தேர்வில் 1,540 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் வித்யா வெங்கட், அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர்ந்திருக்கிறார். "GRE தேர்வில் வெர்பல் பிரிவு கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் படிக்கும்போதே அதற்காக நிறைய நேரம் செலவிடுவது நல்லது. பொதுவாக, வெர்பல் தொடர்பான கேள்விகள் Barro''s புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படும். அதனால், அந்தப் புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டிப் பார்ப்பது நல்லது. தேர்வில் முதல் 15 கேள்விகளுக்கு அவசரப்படாமல் பதில் கூற வேண்டும். முதல் 15 கேள்விகளில் நாம் எப்படிப் பதில் சொல்கிறோமோ அதை வைத்துதான், அடுத்தடுத்த கேள்விகளின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படும். எனவே, நிதானமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்படும். அதனால் GRE தேர்வைப் பொறுத்தவரை, கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நல்லது. பல பல்கலைக்கழகங்களும் GRE ஸ்கோரைவிட நம் இன்ஜினீயரிங் புராஜெக்ட்டுகள், மதிப்பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். எனவே, ஆரம்பம் முதல் அம்சமாக வைத்துக்கொள்ளுங்கள்!" என்கிறார் வித்யா.

GATE தேர்வில் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்த ஜாஃபர், சென்னை I.I.T-யில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜீனியரிங் படிக்கிறார். இன்ஜினீயரிங் மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுதான் GATE. அதை எதிர்கொள்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஜாஃபர். "ஒருமுறை எழுதிய GATE தேர்வின் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குச் செல்லும். சமயங்களில் ஒரு வருடத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் எனத் திடீர் குண்டைத் தூக்கிப் போடுவார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். இன்ஜினீயரிங் படிப்பை ஓரளவுக்கு ஒழுங்காகப் படித்திருந்தாலே, GATE தேர்வை எளிமையாக எதிர்கொள்ளலாம். போன வருடம் வரை பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்டனர். இந்த வருடத்தில் இருந்து ஆப்டிட்யூட் கேள்விகளும் இடம்பெறலாம் எனச் சொல்கிறார்கள்.

I.AS., I.P.S. மாதிரியான ஒரு படிப்புதான் I.E.S (Indian Engineering Service). அது படித்தவர்களைத்தான் இந்தியாவின் உயர் தொழில்நுட்பப் பிரிவுகளில் தலைமைப் பொறுப்புகளில் நியமிப்பார்கள். GATE தேர்வுக்குத் தயாரானவர்களுக்கு I.E.S தேர்வுகள் ரொம்பவே சுலபமாகத்தான் இருக்கும். அதே மாதிரி, பெல், ஐ.ஓ.சி.எல்., எல்.அண்ட்.டி மாதிரியான நிறுவனங்கள் GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்களை எழுத்துத் தேர்வே இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். வரும் நாட்களில் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு GATE தேர்வின் மதிப்பெண்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். டெக்னிக்கல் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் GATE ஸ்கோர் கேட்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!" என்கிறார் ஜாஃபர்.

இந்த வருட CAT தேர்வில் 99.81% மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அஷோக், ஏற்கெனவே எட்டு வருட வேலை அனுபவம் உள்ளவர். அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய I.I.M களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறது இவருக்கு. பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறார் இவர். "மற்றவர் களோடு ஒப்பிடும்போது நமது திறன் எந்த இடத்தில் இருக்கிறது. எத்தனை போட்டியாளர்களை நாம் கடக்க வேண்டும் போன்ற விஷயங்களை அகில இந்திய அளவிலான மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்வதன் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். படிப்பு விஷயங்களில் ரொம்பவே 'டச்' விட்டுப் போயிருந்ததால், அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால், வகுப்பில் சேர்ந்த புதிதில் பேனா பிடித்து எழுதவே வரவில்லை!" என்று சிரிக்கும் அஷோக்கின் அகில இந்திய ரேங்க் 480. இந்த ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் படிப்புகளுக்கான செலவுகள் லட்சங்களில் எகிறும் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால், இந்த உலகத்தையே வடிவமைக்கும் பொறுப்பு நாளை உங்கள் கைகளில். அதற்கு உண்டான தகுதிகளை இன்றே வளர்த்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே!

படங்கள்: ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்

———————————————————————————-

நன்றி:-அ.ஐஸ்வர்யா

நன்றி:-ஆ.வி

Tuesday, May 4, 2010

சில பிரச்சினைகள்.... இப்படி

சில பிரச்சினைகள்.... இப்படி

ஆரம்பக்கட்ட வளர்ச்சியில்


மற்றவர்களை தொந்தரவு செய்தால்


எடுக்க முடியாததை முயலும்போது



கண்மூடித்தனமாக எதிர்கொள்ளும்போது


ஆராயாமல் உள்நுழையும் போது



காதலின் மோகம்



சுமை அதிகமாகும்போது