சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களை விற்று சென்னைக்கு'கிளம்பிய' பள்ளி மாணவர்கள்

கோவை: சினிமா நடிகரை பார்க்கும் ஆசையில் சைக்கிள்களை விற்று சென்னைக்கு'கிளம்பிய' பள்ளி மாணவர்கள் நான்கு பேரை, போலீசார் சேலத்தில் மீட்டனர்.இந்த மாணவர்கள், பெற்றோருக்கு பயந்து கடத்தல் நாடகமாடி போலீசாரை குழப்பியது விசாரணையில் தெரியவந்தது.


கோவை நகரிலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார்(12), மூர்த்தி மகன் நவீன்(14),பழனிச்சாமி மகன் விஜயகுமார்(18), முத்துசாமி மகன் விக்னேஷ்(15) ஆகியோர்நண்பர்கள். நான்கு பேரும் சிங்காநல்லூர், காமராஜர் ரோட்டிள்ள என்.ஜி.ஆர்.,பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 10ம் தேதி மாலையில் பள்ளி மைதானத்தில்விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து கிளம்பிய இவர்கள், நேற்று முன்தினம் காலை வரை வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த பெற்றோர்,சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். ஒரே தெருவைச் சேர்ந்த நான்குமாணவர்கள் காணாமல் போனது, அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.நால்வரையும் இன்ஸ்பெக்டர் கவுதமன், எஸ்.ஐ., ஆறுமுகம் தலைமையிலான போலீசார்தேடி வந்தனர்.


இந்நிலையில், வீட்டுக்கு போன் செய்து பெற்றோருடன் பேசிய ஒரு மாணவர்,'எங்களை ஒருவர் ோவையில் இருந்து ஜீப்பில் கடத்தி வந்துவிட்டார்; நாங்கள்,சேலம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருக்கிறோம்' என தெரிவிக்க, மீண்டும்பரபரப்பு தொற்றிக்கொண்டது.இது குறித்து தகவலறிந்த போலீசார், சேலம்போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தெரிவித்து, அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் சுற்றியமாணவர்கள் நான்கு பேரையும் மீட்டு, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தங்கவைத்திருந்தனர். அதன்பின், சிங் காநல்லூர் போலீசார் சேலம் சென்று,மாணவர்களை கோவைக்கு அழைத்து வந்தனர்.


மீட்கப்பட்ட மாணவர்கள், போலீசாரிடம் கூறியதாவது:நாங்கள்சினிமா நடிகர் விஜய் ரசிகர்கள். அவரை பார்க்க சென்னை செல்லும்திட்டத்துடன் வீட்டிலிருந்த இரு சைக்கிள்கள் (அரசு இலவசமாக மாணவர்களுக்குவழங்கியது), மூன்று 'செட்' ஆடைகள் சகிதமாக கடந்த 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். சென்னைக்கு ரயிலில் செல்ல பணம் வேண்டும் என்பதால், இரு சைக்கிள்களையும் ஒண்டிப்புதூரிலுள்ள ஒரு முதியவரிடம் தலா 300 ரூபாய், 320 ரூபாய்க்கு விற்றோம்.அதில் கிடைத்தபணத்தை கொண்டு அன்று இரவே ரயிலில் சென்னை சென்றோம். எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரவு முழுக்க சுற்றித்திரிந்த பின் மறுநாள் எங்களுக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் கோவைக்கே திரும்ப முடிவு செய்து,அங்கிருந்த ஆட்டோ டிரைவரிடம் உதவி கேட்டோம்.


அவர், எங்களை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குஅழைத்துச் சென்று இறக்கினார். அங்கிருந்து, பஸ்சில் சேலம் மத்திய பஸ்ஸ்டாண்ட் வந்தோம். கையில் இருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டதால்,பெற்றோருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தோம். நடிகரை பார்ப்பதற்காகவீட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவித்தால் பெற்றோர் அடிப்பார்கள்என்பதால், எங்களை ஒருவர் ஜீப்பில் கடத்தி வந்ததாக பொய்யான தகவல்தெரிவித்தோம்.இவ்வாறு, மாணவர்கள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மாணவர்களிடம்,மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை நேரடி விசாரணைநடத்தினார். துரித நடவடிக்கையில் ஈடுபட்டு, மாணவர்களை மீட்ட போலீசாரை பாராட்டினார்.



இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சினிமாநடிகர் மீதான மோகம், சிறுவர்களையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு,நான்கு மாணவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவமே உதாரணம். பெற்றோரைஉதறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறவும், அரசு வழங்கிய இலவச சைக்கிளை தவறான நோக்கத்துக்காக விற்கவும், போலீசாரால் மீட்கப்பட்ட பின் கடத்தல்நாடகமாடவும் தூண்டியிருக்கிறது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளி மாணவ,மாணவியர் நடிகர், நடிகரை பார்க்கும் ஆசையில், வீட்டிலிருந்து வெளியேறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. சினிமா மோகம் கொண்ட பிள்ளைகளை பெற்றோர் தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதும், அவர்களது செயல்பாடுகளை கவனிப்பதும்அவசியம். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.